பொங்கல் வாழ்த்து
உழுது வாழ்பவன் வாழ்வில்,
பழுது ஏற்பட்டால்-அவன்,
அழுது புலம்பும் நிலை வரும்.
விழுது போல் நாம் தாங்கினால்,
எழுது கோலாக மாறுவான்,
கழுகு போல் மேலேறி பறப்பான்;
குழுவாக செயல்படும் நிலையில்,
முழுதும் வாழ்வாங்கு வாழ்வான்.
அவன் மனம் பொங்க,
நம் மனம் தாங்க,
வாழ்த்துக்களை சிந்த விடும்,
ஆணைக்குளம், சங். சொர்ணவேலு,
கணக்காளர், கோவை.