கிராமத்து பொங்ஙல்
*கிராமத்து பொங்கல்*
(14.01.25)
விடிகாலை எழுந்திரிச்சு
சுத்தமான குளியல் போட்டு
புத்தாடை அணிந்து கொண்டு
புதுசாய் நாம் தெரிவோம்
பொங்கல் செய்ய அடுப்பின் மீது
பானை தனை வைத்துவிட்டு
அதனுள்ளே அனைத்தையுமே
அளவாக போட்டு விட்டு
நல்லா கொதித்தவுடன்
பாலையுமே சேர்த்துக் கொண்டு
அது பொங்கி ததும்பி வழிகையிலே
பொங்கலோ பொங்கலென்று
மகிழ்ச்சியோடு சத்தமிட்டு
வீட்டிலுள்ள அனைவருமே
குதூகல மனதுடனே
கும்மாளம் போட்டிடுவோம்
இறைவனுக்கு படைத்து விட்டு
பூஜையையும் செய்துவிட்டு
அம்மாவின் அன்பு கலந்த
அமுதமான பொங்கலையும்
ஆவலுடன் சாப்பிடவே
வரிசையாய் அமர்ந்து கொண்டு
சுவையோடு சாப்பிடுவோம்
இந்த இனிதான திருநாளில்
அந்த இனிப்பு மனதுடனே
அனைவரும் சொல்லிடுவோம்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல் என்று
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்