பேர் புகழ்

வாடகைக்கு வஸ்திரமும்
வாய்க்கு வந்தபடி வயதை மீறிய
வெட்டி பேசும் திறமையை வளர்த்துகொண்டதால்
வெளி உலக பேச்சு மேடை மாலைகளை
வாரி வாரி போட்டது .....இவை அன்று
எதுவும் என் வீட்டு வாசல் மிதிக்கவில்லை ....

சின்னவரும் அறிந்த பெரியவரும்
பெயர் விட்டு என்னை கூப்பிடுவதில்லை
மதிக்கத்தக்க மனிதனாக வலம் வந்தபோது
எதையும் எதிர்பார்க்க எனக்கு தோணவில்லை ...
இன்றோ !
வாடகை மூச்சு நின்றுவிட
கூடிய கூட்டம் எனக்கு புதுப்பெயர் சூட்டிவிட்டது
என்னுடைய பேற்றோர்க்கு தெரியாமலே !
அதோடு நான் செய்த தொண்டுக்கு கைமாறாக
புழுதிசூழ் முச்சந்தி சாலை முன் என்னை நிறுத்திவிட்டார்கள்...
காலை மாலை கருப்பு காகங்கள்
என் தலைக்கு கருப்பு கலர் தைலம் தடவ....
மறதியிலா மனிதர்கள் என் நினைப்புவர
கூட்டமாக கூடி கூடுவிட்டு கூடு பாய்ந்த எனக்கு
கண்ணீர் அஞ்சலி செலுத்தி
நல்ல பெயர் சம்பாதிக்கிறார்கள்....

நான் நட்ட கல்லாய்
நாதியற்று நாட்களை நகர்த்த ........
கேட்கிறேன் என்று தப்பாக எண்ண வேண்டாம் .....
பேர்புகழை எதிர்பார்க்காத எனக்கே இப்படி என்றால்...
எதிர் பார்த்து தொண்டு செய்தவர் நிலை எப்படி இருக்கும் !
செய்த தொண்டுக்கு வட்டியையும் முதலையும் கணக்கு போட்டு
சில்லரையை வசூல் செய்திருப்பார்களோ !
வாய்த்த வாய்ப்பு என்றும் வசூல் பண்ண வைக்கும் ....அதோடு
மாலை ஏற்று முச்சந்தியில் சற்றே நின்று
எத்தனை பேர் ஒரு கணம் தலை நிமிர்ந்து பார்த்தார்கள்
என்பதை எண்ணிப் பார்க்கவும்.செய்யும்....பரவசப் பட !

எழுதியவர் : மு.தருமராஜு (13-Jan-25, 9:18 pm)
Tanglish : per pukazh
பார்வை : 13

மேலே