செநா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  செநா
இடம்:  புதுக்கோட்டை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-May-2017
பார்த்தவர்கள்:  538
புள்ளி:  94

என்னைப் பற்றி...

பொறியாளன் , யதார்த்தவாதி ......

என் படைப்புகள்
செநா செய்திகள்
செநா - ஸ்ரீ தேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2017 4:39 pm

கவிகளாயிரம் தொடுப்போம் - உந்தன் பாத தரிசனத்திற்கு பிறகே அதையும் படைப்போம்...

உரிமைக்குரல் கொடுப்போம்- குரல் வளையை நெரிக்கின்ற நியாயமற்ற கோட்பாடுகளை உடைப்போம்...

வேர்வைதுளிகளை விதைப்போம்- துரோகத்தால் விழுகின்ற போதெல்லாம் எழுகிற திடம் கேட்போம்...

சாதிப்பேய்களை ஒழிப்போம்- இங்கு சாகா வரம் பெற்றவன் யாருமில்லையென்று உரைப்போம்...

பேனாநுனியில் வசிப்போம்- சீர்கெட்ட வாதிகளின் முகத்திரையை மறக்காமல் கிழிப்போம்...

பெண்ணியத்தை மதிப்போம்- கற்பு ஆணுக்குமுண்டென்று முட்டாள் அறிவிலும் புதைப்போம்...

பொய்மையை துறப்போம்- உரிமையே தமிழனின் வீரமென அந்நியர்களுக்கு பறையடிப்போம்...

ராமன்களை மட்டுமே

மேலும்

நன்றி!!! 23-Sep-2017 7:34 pm
கவிதையின் தலைப்பு புதுமையாக, நன்றாக இருக்கிறது! 21-Sep-2017 11:31 pm
தீபிகாசுக்கிரியப்பன் அளித்த படைப்பில் (public) deepika59be6c07ad717 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Sep-2017 7:39 pm

விழிகள் இரண்டும்
கைபேசியில் நீந்திக்கொண்டிருக்க....
பாதங்கள் இரண்டும்
படுக்கையில் முடங்கத் துடித்தனர் போல...
சற்று விழிகள்
வழி மாறி பார்த்த போது
ஒற்றை நொடியில்
ஒரு ரூபாய்க்கு சொந்தம் ஆனேன்....!?!?!

மேலும்

ஆமாம்....உண்மைதான் 18-Sep-2017 5:47 pm
அருமை நட்பே......கடைசியில் அந்த 1 ரூபாயும் ஒருவர் எடுத்துக்கொள்வார் 18-Sep-2017 4:17 pm
என்னை ஊக்குவிற்கும் உங்கள் மனதிற்கு நன்றி..... 18-Sep-2017 1:12 pm
ஒரு நொடியில் தான் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றமும் நிகழ்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Sep-2017 10:47 am
தம்பு அளித்த படைப்பில் (public) Thampu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Sep-2017 1:34 am

வலியில் வலிமை
ஆனதடி.....
விழியில் சுமக்கும்
வேதனை
என்றாலும்
நம் காதல்
வலிமையானதடி......!!

தேனே....
மானே .....
உன்னைத்
தேடித்தானே....என்
தேகம்
தேய்பிறை
ஆனதடி......!


உன்மடியில்
தலைசாய்த்து
என் கவலைகள்
தொலைப்பேன்.....
உயிரே
உயிருள்ளவரை
உன்னைச்
சுமப்பேன்......!!


தனிமை
இங்கே
நம்
இனிமையை
கொன்றது.....
அள்ளிக்கொஞ்சும்
அழகே......
கொல்லாமல்
கொல்லுதடி......
பொல்லாத
தனிமை......!!

என்றுமே
தனிமையின்
சுவாசத்தில்
வாழ்ந்தவன்.....
இந்த
தேசத்தில்
தனிமைப்பட்டே
வாழ.....
சபிக்கப்பட்டேனா
என்ற
வினாவோடு
வாழ்கிறேன்......!!

நிலாவின்
பிள்ளை
நீ
இல்லாமல்....

மேலும்

நன்றி 20-Sep-2017 4:39 am
ஆஹா ..... அருமை நட்பே.... 18-Sep-2017 2:41 pm
நன்றி 12-Sep-2017 12:31 am
அருமை 11-Sep-2017 1:42 am
செநா - இளவெண்மணியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Sep-2017 4:44 am

புயலாய் மாறாத காற்றழகு
பூவை எரிக்காத நெருப்பழகு
கரையைத் தாண்டாத கடலழகு
கட்டுக்குள் இருந்தால் யாவுமழகே !

@இளவெண்மணியன்

மேலும்

மென்மையான வரி . ஆம் .பூவை பனி அழுத்துவதில்லை .தழுவித்தான் கிடக்கிறது . 13-Sep-2017 5:20 am
பூவை அழுத்தாத பனி அழகு 13-Sep-2017 2:43 am
செநா - Shobana அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2017 10:15 pm

நித்தமும் விடியும்... விடியும்பொழுதும் மறையும்...
யாவரும் அறிந்த ஒன்றே

உன்னிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தால்
மட்டுமே என்னுடைய காலைப்பொழுது மலரும்
உன் நினைவைச் சுமந்தே என் நாள் இயங்கும்

இருளை முத்தமிட்டு இப்பூமி துயில் கொள்ளும்
உன்னுடைய இரவு வணக்கத்தை என் அலைப்பேசி
தொட்டு தழுவி எனைத் தூங்க சொல்லும்

தினமும் உணவு உட்கொள்வது போல் சுவாசிப்பதுபோல்
என் அன்றாட வாழ்வில் கலந்த ஒன்றை இறுதி
மூச்சு உள்ளவரை தொடர வேண்டும்

மேலும்

அருமை நட்பே... 18-Sep-2017 2:28 pm
ஜெர்ரி அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Sep-2017 12:13 am

விடியல் பொழுதில்...
சிவந்த கரங்களை
கண்கள் காணும் தருணம்-அவள்
கரம் விட்டு
நீக்கி விடுவாளென்று
ஏங்கி ஏங்கியே
இரவெல்லாம் காய்கிறது
"மருதாணி"

மேலும்

அருமை சகோ 18-Sep-2017 5:05 pm
ஆஹா ..... அருமை நட்பே.... 18-Sep-2017 2:25 pm
காதலிக்கு மருதாணி வைத்து அது சிவக்கும் வரை பார்த்திருப்பது தான் இயற்கைக்கும் பிடிக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Sep-2017 1:15 pm
மருதாணி கவிதை நன்று நன்று ஜெரி 18-Sep-2017 1:11 pm
J K பாலாஜி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
17-Sep-2017 7:08 pm

வெட்டிய இடத்தில்
ஒட்டிக் கொள்கிறது
மௌனம்

-J.K.பாலாஜி-

மேலும்

அருமை சகோ 18-Sep-2017 5:08 pm
மனமார்ந்த நன்றிகள் சகோ...! 18-Sep-2017 3:00 pm
மனமார்ந்த நன்றிகள் சகோ...! 18-Sep-2017 2:59 pm
செநா - ஸ்ரீமதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Sep-2017 3:28 pm

உள்ளத்தில்
உலகளவு
உணர்வுகள் ஒளிந்திருக்க
...................................................
இவளும் கையில்
கோல் பிடித்து
காத்திருக்க
காகிதத்தில்
கவிதை இல்லை
கன்னியவள் அறியவில்லை
காதலை ........
.......................................
காதலை
உணர்த்தவே முடியும்
உறைக்க முடியாது என்பதை

மேலும்

செநா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2017 9:41 pm

வண்ணச்சிறகை விரித்து,
வாசல்வழி சென்று,
விருந்தோம்பல் ஏற்கும்
வண்ணத்துப்பூச்சியே!!
அனைவர் அழைப்புக்கும் செல்கிறாய்,
அமுதுதேன் உண்கிறாய்,
அன்பாக அரவணைக்கிறாய்,,
-
சூதுவாது தெரியாத பட்டாம்பூச்சியே!!
நடக்கும் நாடகம் புரியவில்லை உனக்கு,
நடப்பதை அறிந்தும் சொல்லதெரியவில்லை எனக்கு,
பூவும் உறவும் ஒன்று தான்,
காரியம் ஆகும்வரை உபசரிப்பு,
காரியம் வேண்டுமென்றால் தான் மறுஅழைப்பு…………………

மேலும்

இனிய நன்றி நட்பே.... 16-Sep-2017 9:59 am
அருமை நட்பே ! 10-Sep-2017 11:23 pm
செநா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2017 9:55 am

கார்மேகம் கலைந்திட,
கருங்குயில்
கூவிட,
அழகிய சோலையில்,
அந்தி வேளையில் ,
மரங்கள் சுமந்த
முத்துகளை ,
நீ உதிர்க்கும் போது,
உன்னை காணவந்தேன்,
உன்கண்ணை
பார்த்துநின்றேன்,
உன் கண்ணில் என்னை காணவில்லை
இதயத்தை காண்கின்றேன் ,,
-
இனியவளே!! என்னிடம்
உள்ள
உன் இதயத்தை
காண்கின்றயா??
இல்லை
உன் இடத்தை
காண்கின்றயா??

மேலும்

செநா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2017 11:17 am

உன்உயிராய் நானிருக்க,
உன்நலன் விரும்பிகளுக்கு பயம் ஏன்?
என்உயிராய் நீயிருக்க,
என்நலன் மீது எனக்கு அக்கறை ஏன்?
.
தோழியே!!
தோள்மீது கைப்போட்டு,
தோழமையாய் நடைப்போட்டு,
சுற்றியிருக்கும் குருடர்கள் பார்க்க,
சுதந்திர பறவையாய் சுற்றுவோம்……..
.
தேயாத மதியே!!
மதி கொண்டு,
தற்காலிக குருடனை,
மாற்றுவோம்…………
விதி என்று ,
பிறவி குருடனுக்காக இறைவனிடம்,
வேண்டுவோம்……………

மேலும்

கருத்தாலும் ,வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...இனிய நன்றி நட்பே.... 19-Jul-2017 7:29 am
இனிய நன்றி நட்பே.... 19-Jul-2017 7:28 am
கருத்தாலும் ,வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...இனிய நன்றி நட்பே.... 19-Jul-2017 7:26 am
Arumai sako ezhuthunkal vazhthukkal 18-Jul-2017 4:28 pm
செநா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jul-2017 7:36 pm

அடியே!
ஒற்றை நிலவே
வானிலிருந்து வந்தது ஏனோ?
என் கண்ரெதிரே வந்து
என் இதயத்தை மட்டும்
திருடி சென்றது ஏனோ?

கண்ணில் தென்படும்
யாவையும் ரசித்தவன்
வானில் உன்னை தவிர
யாரும் தெரியவில்லையே!

கனவு உலகில் இருக்கின்றேனா ? - இல்லை
காதல் உலகில் விழ்ந்துவிட்டேனா ?
இல்லை வீழ்த்திவிட்டாயா? ?

மேலும்

கருத்தாலும் ,வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...இனிய நன்றி நட்பே.... 09-Jul-2017 1:12 pm
மாயைகளுக்குள் காதல் சிக்கிக் கொண்டது 09-Jul-2017 12:46 pm
கருத்தாலும் ,வருகையாலும் மனம் மகிழ்ந்தேன்...இனிய நன்றி நட்பே.... 09-Jul-2017 7:57 am
அருமை ! 09-Jul-2017 12:40 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (159)

இவர் பின்தொடர்பவர்கள் (159)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
krishnan hari

krishnan hari

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (159)

அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
சஅருள்ராணி

சஅருள்ராணி

காஞ்சிபுரம்
மேலே