மணக்கணக்கு
இன்று பள்ளியில் சற்று வேலை அதிகமாக இருந்ததால் வீட்டிற்கு தாமதமாக பள்ளி வாகனத்திலிருந்து இறங்கி சென்றேன்,
எப்போதும்போல் இல்லாமல்
இன்று சில மாற்றங்கள்,
வீட்டின் முற்றத்திலிருந்து வரும் சிறார்களின் ஒலி இன்றில்லை ,
என்னை முதலில் வரவேற்கும் செல்லப்பிராணி இன்னும் வரவில்லை,
ஆனால்
அக்கம் பக்கத்து வீட்டார்களின் பார்வை என்மீது ,
வீட்டின் அருகே சில வாகனங்கள் மற்றும் வாசலில் சில புது காலணிகள் இருந்தன(ஆமாம் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள்),
நான் எந்த பதற்றமும் இல்லமால் வாசலுக்கு மிக அருகில் வந்தேன் (என் வாழ்வில் இது போன்ற பல வரன்களை கடந்து வந்திருக்கிறேன்)
ஆனால் இதுதான் கடைசி வரன்(ஏனெனில் இது காலத்தின் கட்டாயம் ).
வாசலின் அருகில் பதட்டத்துடன் நின்றுகொண்டிருந்த என் அம்மா ,
என்னை பார்த்தவுடன் விறுவிறுவென வந்து சீக்கிரம் வா என்று கையை பிடித்து இழுத்து சென்றாள்.
எப்போதும் போல் அமைதியாக வந்து ,
வந்தவர்களுக்கு வணக்கம் சொல்லி
( யாரையும் நிமிர்ந்து பார்க்காமல்)
என் அறைக்குள் சென்றேன்
.........
.....................
...........................
(( முதலில் என்னை பற்றி சொல்கிறேன் ))
என் பெயர் லெட்சுமி ,
நான் ஓர் தனியார் மழலையர் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றுகிறேன்.
அப்பா அம்மா அண்ணன் தம்பி என நாங்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
துவக்க பள்ளி பருவத்திலிருந்து
என் உயிர் தோழிகள் ஐந்து (5) பேர்,
எங்களின் முக்கிய பொழுதுபோக்கு மற்றவர்களை கலாய்ப்பது தான்.
நான் எதையும் நன்கு யோசித்து தோழிகளுடன் கலந்துரையாடலுக்கு
பிறகுதான் முடிவுகளை எடுப்பேன்,
அது பென்சில் வாங்குவதாக இருந்தாலும் சரி அல்லது பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையாக இருந்தாலும் சரி,
ஆனால் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அதை மாற்றி கொள்ளமாட்டேன்.
நான் கல்லூரி முடிக்கும் வரை யாரையும் காதலிக்கவில்லை மேலும் மற்றவர்களை காதலிக்க விடுவதுமில்லை,
எங்காவது காதல் அல்லது திருமண ஜோடிகளை பார்த்தால் மனதில் பல கணக்குகள் செல்லும் (அக்கணக்கில் தங்களுக்கு வரும் வரன்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது தான் அதிகம்)
காலத்திற்கு தகுந்த போல் கணக்குகளை திருத்திக் கொள்வோம்.
இப்படியே இன்பம் துன்பம் கலந்து கல்லூரி வாழ்க்கை முடிந்தது...
....
......
சில காலங்கள் செல்ல செல்ல ஒவ்வொருத்திக்கும் திருமணம் நடைபெற்றது (வீட்டில் பார்த்த வரன்கள்),
என்ன செய்வது நாம் ஒன்று நினைக்க
தெய்வம் ஒன்று நினைக்குமாம்,
ஆனால் நானோ சில காரணங்களை சொல்லி தப்பித்து வந்தேன் ( அப்பா மற்றும் சகோதரர்கள் உதவி உடன்),
எனக்கு ஒர் தனியார் பள்ளியில் தற்காலிக வேலை கிடைத்தது,
ஆரம்பத்தில் 1முதல் 8ம் வகுப்பு வரை கணக்கு படம் எடுத்தேன் ,
வீட்டில் எங்க ஊர் சிறார்களுக்கு டீயூசன் எடுத்தேன்,
இப்படியே சில மாதங்கள் சென்றதது.
....
......
ஒருமுறை நாங்கள் சென்ற பள்ளி வாகனத்தில் ஒர் போதை ஆசாமி இருசக்கர வாகனத்தில் வந்து இடித்துவிட்டார் ,
அந்த ஆசாமிக்கு பலத்த அடி
நல்ல வேலை உள்ளேயிருந்த சிறார்களுக்கு எதுவும் ஆகவில்லை,
ஆனால் இது போன்ற விபத்துகள் அவ்விடத்தில் அதிகம் நடப்பதால் வேகத்தடை அமைக்க சொல்லி அவ்வூர் மக்கள் வாகனத்தை மறித்து போராட்டம் நடத்தினார்கள்,
அப்போது அந்த பகுதி இளைஞர்கள் வந்து எங்களை பள்ளிக்கு அனுப்ப பேசி சரி செய்ய முயற்சித்தார்கள்,
அதில் ஒர் இளைஞர் என்னிடம் வந்து நீங்கள் பயப்பட வேண்டாம் நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று அருகில் உள்ள ஆட்டோக்களை வர சொல்லி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை அனுப்பிவிட்டனர்,
நானும் ஒர் ஆட்டோவில் அமர்ந்தேன்
பள்ளிக்கு சென்றேன் .
ஆனால் என் மனதோ அங்கேயே நின்றது ( ஏனெனில் என் மனதில் இதுவரை வடித்த வடிவத்தை ஒத்திருந்தன் என்னிடம் வந்து பேசிய அந்த இளைஞன்).
அன்றைய நாள் முழுவதும் என்ன நடந்தது என்று ஒன்றும் புரியவில்லை,
ஆனால் அவனை பற்றிய சிந்தனை நிறைந்திருந்தது ,
அவனை பற்றி நன்கு விசாரிக்க வேண்டும் என்று தோன்றியது.
உடனே என் தோழிகளுக்கு போன் (conference call) செய்து பேசினேன்
(அவன் வெளியழகை பற்றி
கம்பிரமான தோற்றம், இனிமையான குரல் காந்த பார்வை
என்னைவிட சற்று உயரம்
மொத்தத்தில் perfect ),
உரையாடலின் போது அவன் ஊரில் நமக்கு தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டேன்,
தெரியாது என்ற பதிலே சந்தேகத்துடன் வந்தது,
ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு ஒருவன் பற்றி ஞாபகம் வந்தது அவன் என் மேல்நிலைப் பள்ளி தோழன்,
அவனுடன் பள்ளியில் பேசியது,
இருந்தாலும் வேறு வழியில்லை அவனிடம் தான் கேட்கமுடியும்,
தோழனின் போன் நம்பர் கிடைப்பதற்கு இரு நாட்களாயிற்று......
சில நாட்களுக்கு பிறகு அவனை பற்றிய தகவல்கள் என் தோழன் மூலம் தெரிந்துகொண்டேன்,
அப்பா அம்மா தங்கை என அவர்கள் குடும்பத்தில் நான்கு பேர்கள்,
அம்மா பிள்ளை ,
பின்கோபக்காரன் ,
நல்லது, கெட்டது என பகுத்தறிந்து நடக்கும் மனப்பான்மை கொண்டவன்,
மெக்கானிக் இன்ஜினியரிங் படித்து சென்னையில் வேலை பார்க்கிறான்,
தங்கை திருமணத்திற்கு வந்திருகிறான்,
அவன் இதுவரை யாரையும் காதலிக்கவில்லையாம் ( நம்புகிறேன்),
காதல் அவனுக்கு பிடிக்காதாம் ஏனெனில் அவன் சொந்தத்தில் காதலால் பெரிய பிரச்சனை நடைபெற்றதாம் அதனால் சிறுவயதிலிருந்து அவனுக்கு அதில் விருப்பமில்லையாம்).
நல்லதுதான் ,
மேலும் அவனுக்கு தைரியமான பெண்னை திருமணம் செய்ய பிடிக்குமாம் (என் மனதில் பயம் கலந்த மகிழ்ச்சி நிலவியது).....
((மேலும் தோழன்))
ஒருமுறை உன்னை பற்றியும் அவன் என்னிடம் கேட்டிருக்கிறான் ,
அதற்கு நான் நல்ல பெண் என்று சொல்லியிருக்கிறேன்,
நீ சென்று அவனிடம் பேசு என்று சொன்னான்......
எனக்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை,
அவனிடம் எப்படி சொல்லலாம் ,
அவனை பார்க்க போகும் போது எந்த மாதிரி உடை அணியலாம்,
என பல கணக்குகள் மற்றும் கனவுகள்.
அவ்வப்போது அவனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தாலும் ,
அவன் அருகில் செல்ல செல்ல வெட்கம் வந்து விடுகிறது ( நானும் பெண்தான் ).
சிலபல முயற்சிக்கு பின் அவனை சந்தித்து "எனக்கு உங்களை பிடித்திருக்கிறது ,
உங்களுக்கு என்னை பிடித்திருந்தால் எங்கள் வீட்டிற்கு வந்து பேசுங்கள்"
என்று என் அன்பை கூறினான்.
அதற்கு அவன் எந்தவித முக மாற்றங்களின்றி,
"நான் யோசித்து முடிவு சொல்கிறேன்" என்று கூறி அவ்விடத்தை விட்டு சென்றன்
..............
ஆனால் நாட்கள் சில கடந்தும்
அவனும் வரவில்லை எந்த பதிலும் வரவில்லை ,
அந்த பேருந்து நிறுத்தத்தில் அவன் வருகையும் குறைந்தது.
ஒருநாள் என் தோழன் போன் செய்து
அன்று சந்தித்து என்ன பேசினீர்கள்
என்று கேட்டான்,
அதற்கு என்னாயிற்று என்று கேட்டேன்,
அவனுக்கு உன்னை பிடித்திருக்கு ( மனதில் எழுந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை),
ஆனால் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லையாம் ( பின் அவன் பேசியது எதுவும் கேட்கவில்லை மனதில் இதுவரை கண்ட கனவெல்லாம் காணமால் போனது).
எனக்கு ஏன் அவனை பிடித்தாது?
எவருக்கும் திறக்காத என்னிதயம் ஏன் அவனுக்கு திறந்தது?
கனவுகளில் மட்டும் பேசியவனுக்கு
ஏன் இத்தனை இடம் என்னுள் ?
இன்னும் பல கேள்விகள்
ஆனால் விடையோ கண்ணீர்....
அதன் பின்னர் அவ்வூர் வழியே செல்லும் போது என் மனதில் வலிகள் அதிகமானது,
எனவே நான் வேறு பள்ளிக்கு சென்றேன்,
காலங்கள் செல்ல செல்ல யாவற்றையும் மறைத்து காகிதப்பூவை போல் சிரிக்க ஆரம்பித்தேன்,
குழந்தைகளுடன் இருக்கும் நேரத்தை அதிகப்படுத்தினேன்,
ஏனெனில் தனிமையில் தனிமை கிடைக்கவில்லை
........
..............
.........................
காலங்கள் பல கடந்து இன்று
என் வீட்டிலுள்ளவர்களுக்காக ,
இருப்பினும் என்னிதயம் கதவை பூட்டி கொண்டு வெளியே பார்க்க மறுத்தது,
என்ன செய்வது எல்லாம் இறைவன் செயல் என்று விழியின் ஓரத்தில் வந்த கண்ணீரை துடைத்து விட்டு என்னறையை விட்டு வெளியே வந்து அவர்கள் முன் வந்து நின்றேன்.
இரு வீட்டார்களும் சிலபல விசயங்களை பேசி கொண்டிருந்தனர்,அப்போது அவர்களின் பேச்சுகளுக்கிடையே ஓர் குரல் தனித்துவமாக கேட்டது,
அக்குரல் பூட்டிய என்னிதயத்தை திறந்தது,
நான் தலைநிமிர்ந்து அக்குரலின் சொந்தகாரை நோக்கி பார்த்தேன்,
என்னிதய வீட்டில் வசித்தவன்,
இன்று என் வீட்டில் இருக்கிறான் .....