ஞான பசிknowledge seeking
[தமிழ் மேல் ஆர்வமுடையவர்கள் என்னை மன்னிக்கவும்.இக்கதை இக்காலத் தலைமுறையினர்களுக்கு எழுதுவதால் சில ஆங்கில சொற்கள் பயன்படுத்த வேண்டிய சூழல்.தூய தமிழ் சொற்களால் கூற முடியாத நிலை.படிக்கும் அனைவருக்கும் தூய தமிழ் சொற்கள் தெரியாது,புரியாது அல்லவா, அதனால் சில ஆங்கில சொற்களை தமிழில் பயன்படுத்தி உள்ளேன்.]
வாசகர்களே! ‘ஞான பசி’ என்ற தலைப்பை பார்த்து பக்தியியல் என்று நினைத்து விடாதீர்கள். அந்த ‘ஞான பசி’ ஜென்ம ஜென்மமாய் தீராத பசி அதை பற்றி எழுதும் அளவிற்கு எனக்கு அனுபவமும் வயதும் இல்லை. இது இந்தக் கால தலைமுறையினர்களுக்கு வாழ்க்கையை எப்படி எளிய முறையில், முழுமையான வாழ்க்கையை வாழ்வது பற்றிய கதை. படித்து பிடித்தால் வாழ்வில் பயன்படுத்தி பயன் பெறவும்.
இணையத்தில்(ஆன்லைனில்) மூழ்கி கிடக்கும் இளைஞர் இளைஞிகளே!
சீரியசா சீரியலில் மூழ்கி நேரத்தை கடத்தும் பெண்களே!
முழு செய்தித் தாளையும் படித்து “செய்தி ஒன்றுமே இல்லையே” என்று புலம்பும் பெரியவர்களே!
ஓடி ஆடி விளையாட மறந்து வீடியோ கேம், ஐ-ஃபோன், தொலைகாட்சியில் மூழ்கி இருக்கும் குழந்தைகளே!
பணம் சம்பாதிகனுமுனு வேலை அலுவலகத்தையே கட்டியழும் நடுதர வயதினர்களே!
நல்ல காதலி தேடி பெண்கள் பின்னாடி அலைந்தே நேரத்தைக் கழிக்கும் வாலிபர்களே!
வெட்டியாக எந்த வேலையும் செய்யாமல் அரசியல் விமர்சனம்,சினிமா விமர்சனம்,அவங்க அப்படி, இவங்க இப்படினு அடுத்த வீட்டு கதை, இப்படி வெட்டியாக பேசி நேரத்தை கழிக்கும் மனிதர்களே !
“கஷ்டபடுறவங்களுக்கு மேலும் மேலும் கஷ்டமும், செல்வந்தர்களுக்கு மேலும் மேலும் பணத்தை வாரி தரும் கடவுளே!” என்று கடவுளை சதா திட்டிக் கொண்டே இருப்பவர்களே.......! உங்களுக்காக தான் எழுதுகிறேன்.
ஒரு அழகான கிரமம் அதில் இருவேறு வாழ்க்கை முறையில் வாழும் இருவரின் கதை இது. கவின் மற்றும் லிங்கேயன்.
கவின்- இவர் தாங்க நம்ம கதையோட கதாநாயகன். இவன் தீடிர் வறுமையில் விழுந்த ஒரு நடுத்தரவற்கத்தைச் சேர்ந்தவன். அவன் இரண்டு வயது இருக்கும் போதே அவன் தந்தை தவறிவிட்டார். அவன் அம்மா தான் கூலி தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இவன் தான் வீட்டின் கடைக்குட்டி. அவன் உடன்பிறந்த ஒரு அக்கா, ஒரு அண்ணன் உள்ளார். பாட்டன் வழி சொத்தாக கொஞ்சம் நஞ்சை-புஞ்சை நிலம் இருந்தது. குறைந்த வருமானத்தின் சூழலால் கவினின் சகோக்களால் படிக்கயிலவில்லை.அவர்களுக்கும் படிப்பில் நாட்டம் இல்லை. கவினை மட்டும் படிக்கவைத்தனர். எத்தனைத் துன்பத்திலும், வறுமையிலும் படிப்பை விடாது படித்து வந்தான் கவின்.
லிங்கேயன்(லிங்கு) நல்ல செல்வ வளம் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் தந்தை ஒரு வியாபாரி பல தொழில்கள் பல வருமானம் அதனால் சொத்துசுகம் காசு பணத்திற்கு எந்தக் குறையும் இல்லாத குடும்பம். இவனுக்கு ஒரு அக்கா. இவன் ஒரே ஆண்பிள்ளை என்பதால் தெகட்டும் அளவிற்கு அன்பும், இன்பமும் நிறைந்த வாழ்க்கை.
கவினும் லிங்கும் ஒரே பள்ளியில் பயின்று வந்தனர். கவின் யாருடனும் நெருங்கிப் பழக மாட்டான். அவனின் ஏழ்மையினால்அவன் மனதிற்குள் தாழ்வு மனப்பான்மை. கலகவென துள்ளித் திரியும் பள்ளிப் பருவத்தில் குறும்புத் தனமும், சேட்டையென, மாணவர்கள் மகிழ்ச்சி வெல்லத்தில் இருந்தனர். ஆனால் எதிலுமே நாட்டம் இல்லாமல் எப்போழுதும் தனிமையிலே இருந்தான் கவின். சகமாணவர்களுடன் விளையாடக் கூட போகமாட்டான்.
லிங்கு அனைவரிடத்திலும் கல கலவேன பேசுவான். அதனால் அவனுக்கு நண்பர்கள் அதிகம். இருந்தாலும் அவன்படிப்பிலும் கெட்டிக்காரன். ஏதேனும் புதிய புத்தகங்களை படித்துக் கொண்டே இருப்பான். அவன் மனதில் எப்போழுதும் ஒரு தேடல் இருக்கும்.புதுமையாக ஏதேனும் செய்தாக வேண்டும் என்று துடித்து கொண்டே இருப்பான். ஆண்டுகள் பல கடந்தன.
இருவரும் நல்ல மதிபெண் எடுத்து பள்ளி படிப்பை முடித்தனர்.
லிங்கு சென்னையில் பொறியியல் சீட்டு கிடைத்துப் படிக்க சென்று விட்டான்.
கவினின் அம்மா கடன் வாங்கி அருகிலேயே ஒரு பொறியியல் கல்லூரியில் மின் மற்றும் மின்னணு பொறியியலில் சேர்த்தார். இரண்டு ஆண்டுகள் சென்றன. இன்னும் கவினின் பழக்கம் மாறவில்லை பள்ளியில் இருந்தவாறே கல்லூரியிலும் தனிமையாகவே இருந்தான்.
அவன் வகுப்பில் ரோல் நம்பர் வரிசை எண் படி கவினின் பெயருக்கு பின் அடுத்து காவேரி என்று ஒரு பெண்ணின் பெயர் வரும். இளகிய மனமும் ,பார்த்தவுடன் மனதில் பதியும் அழகையும் கொண்டவள்.
மின்னியல் ஆய்வகத்தில் ரோல் நம்பர்படி இருவர் இருவராக ஒரு இயந்திரத்திற்கு இருவர் எனப் பிரித்தனர். கவினுக்கும் காவேரிக்கும் ஒரே இயந்திரம் தரப்பட்டது. அப்போழுது தான் காவேரியிடம் அவன் பேசும் சூழ்நிலை ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து பயிற்சி செய்ய வேண்டி இருந்தது. இருவரும் கொஞ்ச நாளில் நல்ல நண்பர்களாக ஆகிவிட்டனர். அவனும் தயக்கமின்றி காவேரியிடம் மட்டும் நன்றாகப் பேசினான். அவளும் அவன் சூழ்நிலையும், பழக்க வழக்கம் அனைத்தும் தெரிந்தும், புரிந்தும் பழகினால். காதலை சந்திக்காமல் யார்தான் உண்டு இந்த உலகில். இவர்களுக்கு இடையிலும் காதல் வந்தது. காதல் இனிமையில் சில காலம் சென்றது. நான்காம் ஆண்டு இறுதி தேர்வும் நெருங்கியது. காவேரிதான் எப்போழுதும் எளிய முறையில் கவினுக்கு அனைத்து பாடத்தையும் கற்று தருவாள்.
ஒருவழியாக தேர்வு முடிந்தது. அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
கவினின் அக்காவுக்கு நல்ல வரன்கள் வர ஆரம்பித்தது. திருமண வயது வந்ததால் அவங்க அம்மா தன் நிலத்தை அடைமானம் வைத்து கொஞ்சம் கடனும் வாங்கி ஒருவழியாக திருமணத்தை முடித்து வைத்தார்.
கவினின் கல்லூரி படிப்பும் முடிந்தது. வேலை தேட ஆரம்பித்தான்.
லிங்குவும் தன் படிப்பை முடித்தான். கேம்பஸ் இன்டர்வியுல தேர்வாகி கையோடு நல்ல வேலையும் கிடைத்தது.கல்லூரிப் படிக்கும் போதே நிறைய ப்ராஜேக்ட பண்ணியிருந்தான். அதனால் அவன் விரும்பியது போல ஜுனியர் விஞ்ஞானி வேலையே எளிதில் கிடைத்தது.
லிங்குவுக்கு எவ்வளளோ காசுபணம் சொத்துசுகம் இருந்தும், அவனுக்கு தன் தந்தையின் தொழில் அதிலிருந்து வரும் வருமானம் இதையெல்லாம் அனுபவிக்க விருப்பமில்லை. தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணமே அவன் வளர்ச்சிக்கு காரணம். புதுமையாக தினமும் எதையேனும் கற்க வேண்டும் ,புதிதாக ஏதேனும் படைப்புகள் படைக்க வேண்டும் என்ற அவனது துடிப்பே அவனின் வாழ்க்கையில் நினைத்த நிலைக்கு செல்ல காரணம்.
கவினின் வாழ்க்கை நேர் எதிராக துன்பத்தில், வாழ்க்கை சுமை மேலும் அதிகமாயிற்று. அவன் அக்கா கல்யாணத்திற்கு வாங்கிய கடன், கவினின் கல்லூரி படிப்பிற்கு வாங்கிய கடன், இதெல்லாம் போதாது என்று கவினின் அண்ணன் சுயத் தொழில் செய்ய நிறைய கடன் வாங்கி பெரும் நஷ்டத்தை அடைந்து மேலும் கடன் வட்டியென கூடிக் கொண்டே சென்று விட்டது.
கவின் நிறைய கம்பெனிகள் ஏறி இறங்கியும் ஒரு வேலையும் கிடைக்க வில்லை. மனபாரம் தாங்காமல் காவேரிக்கு கால் பண்ணி புலம்பினான். காவேரி அனைத்தையும் மெதுவாக கேட்டுவிட்டு சில கேள்விகளை கேட்டாள் அவனிடம்.
“டேய்! உனக்கு எதில் விருப்பம் அதிகம்? சின்ன வயசில் நீ எந்த விளையாட்ட விரும்பி விளையாடுவ”...?
“இல்லடி நான் விளையாட போனதே இல்ல.”
“ஓ....எப்பவும் படிச்சிட்டே இருப்பியா”.....?
“நான் வீட்டில் புத்தகத்தை எடுத்ததே இல்ல. பள்ளியில் வாத்தியார் நடத்துரத கவனமா கேட்பதோடு சரி. வீட்டுக்கு வந்தா அம்மா கூட வயலில் உதவியா இருப்பேன் அவளோ தான்”.
“ஏதாச்சும் பொண்ண சைட்டு அடித்து இருக்கியா” ? “இல்லடி”
“ஏதாச்சும் தப்பு பண்ணியிருக்கியா” ...?அம்மாகிட்ட திட்டு வாங்கியிருக்கியா?
“இல்லடி”.“ஏய் என்னடி என்ன என்னவோ கேக்குற”...??.
“டேய் நீ சந்தோஷமாவும் வாழல, நல்லதும் பண்ணல, கெட்டதும் பண்ணல என்னதாடா பண்ண “ ...????
“எதுமே பண்ணாம பொம்மை மாதிரி வாழ்ந்து இருக்க; கொஞ்சம் யோசிச்சு பாரு நீ இது நாள் வரைக்கும் வாழ்ந்தது ஒரு வாழ்க்கையா”.....? வாழ்க்கைய வாழ்ந்த மாதிரியே இருக்காது.
“கவின் உன்னோட பிரச்சனைக்கு எல்லாம் நீதான் காரணம்”' என்று கூறினாள். “என்ன நானா”....? “ஆமாம்”; “நான் கேட்கும் இந்த கேள்விகளுக்கும் பதில் சொல்”......
“இன்னுமா...???சரி கேள்”.
“உன் கனவு என்ன”.....?
“உன் இலட்சியம் தான் என்ன”.....?
“உன் தனி திறமை என்ன”......?
“இதற்கு எல்லாம் பதில் தெரிந்தால் அதற்காக ஏதேனும் முயற்சி செய்து இருக்கின்றாயா”........?
“என்ன உன்னால் முடியும்...? என்ன உன்னால் முடியாது..... ? என்று உனக்கே உன்னைப் பற்றி தெரியாது இருக்கும் போது, யாரோ ஒருவர் எப்படி....... உன்னை அறிந்து வேலைத் தருவார்”.
“நான் கேட்ட கேள்வி எதற்குமே பதில் உன்கிட்ட இல்லனு எனக்குத் தெரியும்”.
“போ போய்!! இனியாவது விடை தேடு” என்று கூறினால். “இதற்கெல்லாம் விடை தெரிந்த பின் நம்பிக்கையோடு வேலை தேடு ;அப்புறம் கண்டிப்பா வேலை கிடைக்கும்” என்று கூறினால்.
“ம்ம்...சரி “ னு தொலைப்பேசியை துண்டித்தான். இது தான் அவன் கடைசியாக காவேரியிடம் பேசியது. நாட்கள் செல்ல செல்ல கடனாளிகள் தினம் வந்து வீட்டு வாசலில் பிரச்சனை பண்ண ஆரம்பித்து விட்டனர். அவன் மேலும் கடன் பிரச்சனையில் இருந்து மீளமுடியாமல் கவலையில் கொஞ்சம் கொஞ்சமாகக் காவேரியிடம் இருந்து விலகி விட்டான்.
அவளும் பல தடவ தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்து சலித்து விட்டாள். பதில் இல்லை. சண்டை போட்டு, கத்தி பார்த்து விட்டு பேசுறதையே விட்டு விட்டால்.
பாலைவனத்தில் மழைக்கு காத்திருக்கும் கள்ளிச்செடி போல் அவள் காதல் கண்ணீரில். அவளும் என்ன செய்வாள் ஒரு பக்கம் சரியான நேரத்தில் பெண்ணுக்கு திருமணம் முடிக்க வேண்டுமென தன் குடும்பத்தினர் நெருக்கடி, மறுபுறம் தன் மனதில் அவள் இழக்க விரும்பாத காதலன். புதிய உறவை ஏற்க முடியாமல் தவிக்கும் அவள் காதல் என்ன ஆகுமோ? காலத்திடமே பதில்.
கடவுள் யாரையும் கைவிடுவதில்லையே! கவின் தன் அறிவை வளர்க்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை; இருந்தாலும் காவேரி மூலம் கரையேறும் வழியைக் காண்பித்தார்.
காவேரியின் மனம் தாளவில்லை கவினை இந்த கடினமான சூழலில் தனிமையாக விட கூடாது. அது மேலும் அவனுக்குத் துன்பத்தையும் மனப்பாரத்தையும் அதிகமாக்கிவிடும் என்று நினைத்தால்.எப்படியாவது கடினமான நிலையில் இருந்து அவனை வெளி கொண்டு வர வேண்டுமே, என்ன செய்வது என்று துடித்தாள். அவனுக்கு தொடர்ந்து கால் செய்து பார்த்தாள்.அவன் எடுக்க வில்லை.உறக்கமின்றி தவித்தால். காகிதத்தை எடுத்து ஒரு கடிதத்தை எழுதினாள். காலை விடிந்தவுடன் கிளம்பி புத்தக கடைக்கு சென்றால் அங்கு நெடு நேரம் தேடி இரு புத்தகங்களை வாங்கினாள். அடுத்து ஒரு அடகு கடைக்கு சென்று தன் கழுத்தில் இருந்த செயினை அடகு வைத்து பணம் வாங்கினாள்.பின் புத்தகத்தின் நடுவில் அந்த பணத்தையும் கடிதத்தையும் உள்ளே வைத்து, இரு புத்தகங்களையும் பேக் பண்ணி அவனுக்கு தபால் மூலம் அனுப்பினாள்.
கவின் காட்டில் வேலை செய்து கொண்டு இருந்தான். அவன் அம்மா அழைக்கும் குரல் கேட்டு சென்றான். தபால்காரர் நின்று கொண்டு இருந்தார். “உங்களுக்கு ஒரு பார்சல் வந்து உள்ளது”. கையெழுத்திட்டு பார்சலை வாங்கினான். காவேரியிடம் இருந்தா..? என்ன அனுப்பி இருப்பாள்? என்று யோசித்தவாறே பிரித்தான். உள்ளே இரு புத்தகங்கள் இருந்தன. ஒன்று “Interview Q & A Book” நேர்காணலில் கேட்கின்ற கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்வது' என்ற புத்தகம் மற்றோன்று “கஷ்டங்கள் கடந்து போகவே” அவன் மனதை ஊக்கபடுத்தும்விதமாக ஒரு புத்தகமும் இருந்தது. புத்தகத்தின் நடுவே ஒரு கடிதமும், பத்தாயிரம் ரூபாய் பணமும் இருந்தது. கடிதத்தைப் பிரித்து படித்தான்.
........“அன்புள்ள கவினுக்கு உன் காவேரி எழுதுவது. உன் சூழ்நிலை எனக்குப் புரிகின்றது. கடினமான சூழல் அனைவரின் வாழ்க்கையிலும் வரும். அதற்காக இப்படி உன்னையே ஏன் தனிமை படுத்தி கொள்கிறாய். கஷ்டத்தைக் கடந்து போனால் தான் வாழ்க்கை. இருட்டில் இருந்துக் கொண்டு இருட்டாக இருக்கின்றதே என்று புலம்புகின்றாய். வெளியே வர வழியைத் தேடு; வெளிச்சத்தை தேடு.
“விதி இறைவனால் எழுதப் படுவதில்லை
உன்னுள் உன்னாலே எழுதப் பட்டதுதான் உன் விதி!
உன் எண்ணங்களின் பிரதிபலிப்பே-விதி !
நேற்றைய கற்பனை
இன்றைய செயல்பாடு
நாளைய ஏதிரொலி !
உண்டு என்று உளமார உணர்ந்தால் உண்டு வாழ்க்கை !
இல்லை என்று நினைத்தால் இல்லாது போகும் இன்ப வாழ்க்கை !
விதியை விதைப்பது நீயன்றோ!அதை
வெல்வது உன் எண்ணம் ஒன்றோ....!!”
நீ தான் உன் வீட்டின் சூழலை மாற்றியாக வேண்டும். உன் அம்மா இத்தனை காலமாக உனக்கு சோறு போட்டு உன்னை காப்பாற்றினார்.இனி உன் கடமை! நீ காப்பாற்ற வேண்டிய தரு ணம் இது. உன் வயிற்று பசிக்கு உன் அம்மா உணவிட்டால். உன் அறிவு பசிக்கு நீ தான் உணவே போடவில்லை. ரொம்ப நாளாக உன் அறிவை நீ பட்டினி போட்டு விட்டாய். இனியாவது உன் அறிவுக்கு தீனி போடு. நான் அனுப்பிய இரு புத்தகத்தையும் படி, நா அன்று கேட்ட கேள்விக்கு எல்லாம் பதிலை தேடு; சென்னைக்கு போ! வேலை தேடு என்னால் முடிந்த தொகையை உள்ளே வைத்து உள்ளேன். நம்பிக்கையோடு போ! முயற்சி செய். நீ விரும்பிய மாற்றம் நாளை வரும். என்றும் உன் நிழலாக நான் இருப்பேன்.”.........//
கடிதத்தை படித்து கண்ணீர் விட்டான். அவள் கூறிய படியே கவின் முயற்சி செய்தான். கவின் சென்னை சென்றான்.அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சில காலம் சென்றன. கம்பேனியே அவங்க கிளை அலுவலகம் சவுதிக்கு வேலை உயர்வு கொடுத்து அனுப்பிவிட்டனர். இப்போது அவன் சவுதியில் லட்சம் லட்சம்மாக சம்பாதிக் கின்றான். அவன் கடன் தீர்ந்து நல்ல நிலைக்கு வந்தான்.
நாம் மூன்று வேலையும் உணவு உண்பது எதற்காக.....?
உடல் இயங்குவதற்குத் தேவையான சக்தி பெற உணவு உண்கின்றோம்.சக்தி பெற்றால் தான் உடல் வளர்ச்சியடையும். அந்தந்த வயதிற்கான உடல் வளர்ச்சி பெற உணவு உண்கின்றோம்.
“என்றாவது நாம் வயதிற்கு ஏற்ற அறிவு வளர்ந்து உள்ளதா” என்று எண்ணியது உண்டா........?
அறிவுக்கும் பசி உண்டு யாரும் அதை உணர்வதில்லை.அறிவு பசிக்கு தீனி போட்டது உண்டா...........?
பிறப்பில் இருந்து இறக்கும் வரை நாம் வாழ எப்படி உணவு உண்ணுகிறோமோ அதுபோல் அறிவு பெற இறக்கும் வரை நாம் கற்க வேண்டும். அதற்காக கடைசி வரைக்கும் கல்லூரி போக சொல்லவில்லை.நாம் கற்ற கல்வியை வாழ்க்கையில் செயல் படுத்த வேண்டும்.
நாம் பார்க்கும் ஒவ்வொன்றிலும் நாம் கற்க வேண்டியது ஏதேனும் ஒன்று இருக்கும். நாம் கேட்கும் ஒவ்வொன்றிலும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஏதோ ஒன்று இருக்கும். அதை ஆராய்ந்து அரிந்து கற்க வேண்டும்.
கவினின் வாழ்க்கையில் அவன் அடைந்த துன்பத்திற்கும் காரணம் ஞான தேடல் இல்லாதது தான்.அவன் விடியலைத் தேடாமல் பிரச்சனைக் குள்ளேயே இருந்து விட்டான்.அதனில் இருந்து வெளியே வரும் வழியை அவன் தேடவில்லை.
லிங்குவின் வெற்றிக்கு அவனின் ஞான தேடலும்,விடா முயற்சியும், தன்னப்பிக்கையும் தான் காரணம். அவன் தேடி அறிந்த ஞானத்தை வாழ்வில் பயன்படுத்தினான் அதுவே அவனுக்கு அடுத்த அடுத்த நிலைக்கு போக வழிவகுத்தது.
வெற்றிக்காக வாழாதே!
தோல்வியை கண்டு துவளாதே!
வெற்றி வாழ்வின் எல்லையும் அல்ல
தோல்வி வாழ்வின் இறுதியும் அல்ல
தேடலே வாழ்க்கை
உன்னைத் தேட மறந்தது ஏன்?
உன்னைத் தேடி பார்-அது தான் வாழ்க்கை
வள்ளுவன் கூறாததா, திருமூலர் கூறாததா ? ஏன்! கடவுளே நேரில் வந்து கீதை உபதேசித்து உணர்த்தினாலும் உணராத மக்கள்....... கயல் கருத்து சொல்லியா கேட்க போகிறார்கள். இருந்தாலும் கூறுகின்றேன் கோடியில் ஒருவருக்காவது பயனளிக்கும் அல்லவா! ஞான தேடல் உள்ளவர்களுக்கு உபயமாக இருக்கும் என்ற எண்ணத்தில் இக்கதையை எழுதி உள்ளேன்.