கயல் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கயல் |
இடம் | : chidambaram |
பிறந்த தேதி | : 07-Jan-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 18-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 780 |
புள்ளி | : 41 |
கவிதை மற்றும் சிறுகதை எழுதுபவர்,ஓவியர்,சமுக ஆர்வாளர்
ஓடி கலைத்திருக்கும் உன் உடலுக்கு
ஓய்வுக்கொடுக்க தனித்திரு...!
குழம்பிய மனதில் தெளிவு பெற வேண்டுமாயின்
விழி மூடி தனித்திரு....!
கோபம் வரும் வேளையில் உன் நாவிற்கு
விலங்குப் போட்டுக்கொள்ள தனித்திரு....!
துன்பம் வரும் வேளையில் தனிமைப்படுத்த படுவாய்
துவளாதே துணிந்து தனித்திரு....!
சில அஸ்தமனத்திற்கு பின் பல புதிய ஆரம்பமும் உண்டு
தனிமையும் ஒரு துணையெனத் தனித்திரு....!
நிலைக்கெட்ட இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரமில்லை
சில நினைவுகளிலிருந்து தனித்திரு....!
உனக்குள் ஒளிந்திருக்கும் உன்னைக்
கண்டுகொள்ள தனித்திரு....!
கொடிய நோய் உன்னை அண்டாதிருக்க
உன் உயிர் காக்கத்
ஒரு கிரமத்தில் வாழும் இளம் பெண் ஒருத்தி சிவ பெருமானையே தன் முன்மாதிரியாக வைத்து வாழ்பவள்.அவள் பெயர் பானுமதி. உலகில் படைக்கப் பட்ட உயிரினங்கள் அனைத்தையும் சமமாகப் பார்க்கும் குணம் உடையவள். மனிதர்களிடம் காட்டும் அன்பைப் போலவே மிருகங்களிடமும் பறவைகளிடமும் அன்பு பாராட்டுவாள். வாசலில் நிற்கும் வாட்சுமேனாக இருந்தாலும் கம்பேனியின் யம்டியாக(M.D) இருந்தாலும் சமமான மரியாதையையே இருவருக்கும் கொடுப்பாள். அவரவர் செய்யும் தொழிலை வைத்து மதிப்பது அவளுக்குப் பிடிக்காது. அனைவரையும் மனிதராக மட்டும் பார்த்துப் பழகும் குணம் கொண்டவள்.
பானுமதி ஏழரைச் சனி நடப்பதால் திருப்பதி சென்று வர வேண்டும் என்று நினைத்தாள்.அவளி
.................சுதந்திரம் தொலைந்ததேனோ.........
நெருப்பு சுடும் இருந்தாலும் சமைக்கச் சொல்வதேனோ!
ஆனால் ஆடவர்க்கு மட்டும் பயந்து, வீடே சிறையாகி -
பெண்ணின் வாழ்க்கையே ஆயுள் கைதியாகிப் போனதேனோ!
துன்பம் நெருங்கிவந்தால் துணிந்து தற்காத்துக் கொள்ளும் முறையைக் கற்றுத்தர மறந்தது ஏனோ!
மதம் கொண்ட சில மானிடர்களால் மகளிரின் சுதந்திரம் தொலைந்ததேனோ!
.............மகிழ்ச்சி தொலைந்ததேனோ............
அன்றோ! ஓடி விளையாடு பாப்பா, - நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!
இன்றோ! வெளியே விளையாடாதே பாப்பா நீ –
குழந்தையாக இருந்தாலும் உன் கற்புக்கும் பாதுகாப்பில்லை பாப்பா!
பெண் குழந்தைகளுக்கு ஆண்கள் எல்லாம் பூச்சாண
எதுவுமேயில்லாமல் எதுவுமேயில்லை.................
மலருக்கு மணம் உண்டு!
மயிலுக்கு தோகை உண்டு!
குயிலுக்கு குரல் உண்டு!
கனிக்கு சுவை உண்டு!
கடலுக்கு அலை உண்டு!
வெண்ணிலவுக்கு வானம் உண்டு!
வண்ணத்துப்பூச்சிக்கு வர்ணங்கள் உண்டு!
எதுவுமேயில்லாமல் எதுவுமேயில்லை...................
இருட்டுக்கு வெளிச்சம் உண்டு!
காலத்திற்கு சுழற்சி உண்டு!
கவிதைக்கு கற்பனை உண்டு!
மனிதனுக்கு மனம் உண்டு!
மனோபலம் இருந்தால் மார்க்கம் உண்டு!
உனக்குள்ளும் ஏதோ ஒன்று உண்டு! அதை
உணர்ந்தால் வாழ்வு உண்டு......!!!
--கவி கயல்
நேற்றைய தளிர்கள் இன்றைய இலைகள் ஆகலாம் !
இறைவன் படைப்பில் அனைத்து உயிரினங்களுக்கும்
ஒரு தனி சிறப்பு உண்டு அல்லவோ..............!
அறிய வேண்டியதை அறியாதிருத்தல் அறியாமை அல்லவோ......!
உன்னை உணராமை; உன்னில் இருக்கும் தனித்திறனை-
அறியாமல் இருப்பது முயலாமை அல்லவோ..........!
இயன்றதை அறியாமல் இருப்பது -வாழ்வின் இயலாமை அல்லவோ......!
உனக்குத் தேவையான அனைத்தும்
இவ்வுலகத்தில் படைக்கப்பட்டு உள்ளது;
அதை அறிந்து நெகிழாமை -உணராமை அல்லவோ.........!
அனைவராலும் அனைத்தையும் அறிய இயல்வதில்லை-
ஆனால் எதையும் அறியாமல் இருப்பது வாழ்வின்மை அல்லவோ......!
நன்னெறி நூல்கள் எத்தனை இருந்தாலும் கல்லாமை - பேதமை அல்லவோ.....!
கற்ற கல்வியை வாழ்
💗💗💗💗💗💗
*‘சக்ஸஸ்*் *ஆகுறதுன்னா என்னப்பா?’’* *கேட்டாள் குழந்தை..
‘‘வாழ்க்கையில் வெற்றி பெறுவதுடா செல்லம்!'' என்றார் அப்பா..
‘‘வாழ்க்கையில் வெற்றி பெறுவதுன்னா? ஸ்கூல் மாதிரி அங்கேயும் யாராவது நாம ஜெயிக்க மார்க் போடுவாங்களாப்பா?'' என்று விடாமல் கேட்டாள் சிறுமி..
‘‘வாழ்க்கையில் வெற்றி பெறுவதுன்னா, வாழ்க்கையில் நிறைய பணம் சம்பாதிக்கிறதுடா செல்லம்... அப்பா மாதிரி நல்லாப் படிச்சு பெரிய பெரிய புரமோஷன் எல்லாம் வாங்கி பெரிய பதவிக்குப் போயோ, அல்லது பிஸினஸ் பண்ணியோ நிறைய பணம் சம்பாதிக்கிறது..
அப்படி நிறையப் பணம் சம்பாதிச்சா நல்லா பெரிய வீட்ல எல்லா வசதிகளோடவும் வாழலாம் இல்லையா?'' அப்பா பதில் ச
விழுதல் அவமானமெனில்
ஆலம் விழுதுகளெல்லாம்
வேராகக் கூடுமோ....
விழுதல் குறையுமல்ல
அதன் வீழ்ச்சி ஆர்ப்பரித்துக்
கொட்டும் அருவியாயின்....
விழுதல் தோல்வியும் அல்ல
மழையாய் விழும் நீர்
பயிராய் முளைக்குமெனில்....
விழுந்துவிடலாம்......
விழுதாய்.....
அருவியாய்.....
மழையாய்.....
பின் எழுந்துவிடு
விழுந்த இடத்தில்
முளைத்து நிற்கும்
விதைகளாய்.....
காலையில் கதிரவன் கண் சிமிட்ட,
குயில்கள் கயலு.. கயலு.. என்று கெஞ்ச கண்விழித்தேன்.
வர்ணஜாலம் கொண்ட மேகங்களுக்கு இடையே எழுந்தருளியிருக்கும் கதிரவனுக்கு ஒரு காலை வணக்கத்தை போட்டு விட்டு திரும்பினேன். இறைவன் அருளால் எழில் கொஞ்சும் அழகில் இயற்கை என்னை ஈர்க்க செய்தது. அதனால் எழுந்து என் வீட்டு தோட்டதின் கடைசி பகுதிக்கு சென்றேன். வயலில் பச்சியிளம் பயிர்கள் இளங்காலை தென்றலில் தவழ்வதை கண்டு என் கால்கள் என்னையறியாமல் நடந்தது....
இயற்கையின் ரசிகையாகிய நான் ஒரு மரத்தில் தூக்கணாங்குருவிகள் தூளிகட்டி ஆடிக் கொண்டு இருந்ததை கண்டேன். எனக்கு ஒரு பழக்கம் இருக்கின்றது. எந்த பொருளாக இருந்தாலும், உயிரினமாக இர
நாலு மாடு ஏறு பூட்டி
நாலுபோகம் வெளஞ்சி ரொம்ப நாள் ஆச்சி!
நான் கண்ட காட்சி எல்லாம்
நாளை ஏட்டில் மட்டுமே சாட்சி!
நல் விதையை விதைக்க மறந்தாச்சி!
நாளும்! மாத்திரை மருந்தே உணவாச்சி!!
சத்தான சிறுதானியம் சாப்பிடாமல் விட்டாச்சி!
சத்துக்கெட்டு நோய்நொடியை வாங்கியாச்சி!!
தோண்டி போட்டு நீர் இரைத்த காலம் போயாச்சி!
சொட்டு நீர் பாய்ச்சும் காலமாச்சி!!
கிணறுகளையும் ஆறுகளையும் தொலைத்துவிட்டாய்!
நீர் இன்றி வரண்டு விட்டாய்!!
மண்னையே மலடி ஆக்கி விட்டாய்!
நாளை நீ மாண்டுப்போக நீயே வழி வகுத்துவிட்டாய்!!
நிலமும் கெட்டு நீயும் கெட்டு
வளம் கெட்ட வாழ்க்கை ஏன் மனிதா?
--கயல்
பல வண்ண பல கோடிகள் வேண்டாம்
ஒரு வண்ண வெள்ளை கோடி ஒன்றே போதும்
பல ஜாதியென ஜனங்களை பிரிக்க வேண்டாம்
ஒரு இனம் மனித இனம் ஒன்றே போதும்
பல பாகப் பிரிவுகள் மண்ணில் வேண்டாம்
ஒரு வானம் ஒரு பூமியாக இருத்தலே போதும்
பல கலவரங்கள் வேண்டாம்
ஒரு காந்தியவாதமே போதும்
வேற்றுமையில் ஒற்றுமை வேண்டாம்
நாம் இந்தியர் என்ற ஒற்றுமை ஒன்றே போதும்-மனிதா!
மனிதா!
உன் பெயருக்கு பின் சாதனைகளை சேர்த்திடு
உன் ஜாதி பெயரை அல்ல ;
சாதனையே உன் அடையாளம்
உன் ஜாதி அல்ல;
காற்றின் சுவாசத்தில் ஜாதிக்கூறுகளை பிரிக்க முடியுமா?
மனிதா ! உன் மனதில் மட்டும் ஏன்?
சாதித்து பார்
ஜாதியை பார்க்காதே;
யாவரும் மனித இனமே
யாவர்க்கும் ஓர் உலகமே