தனித்திரு

ஓடி கலைத்திருக்கும் உன் உடலுக்கு
ஓய்வுக்கொடுக்க தனித்திரு...!

குழம்பிய மனதில் தெளிவு பெற வேண்டுமாயின்
விழி மூடி தனித்திரு....!

கோபம் வரும் வேளையில் உன் நாவிற்கு
விலங்குப் போட்டுக்கொள்ள தனித்திரு....!

துன்பம் வரும் வேளையில் தனிமைப்படுத்த படுவாய்
துவளாதே துணிந்து தனித்திரு....!

சில அஸ்தமனத்திற்கு பின் பல புதிய ஆரம்பமும் உண்டு
தனிமையும் ஒரு துணையெனத் தனித்திரு....!

நிலைக்கெட்ட இந்த உலகத்தில் எதுவும் நிரந்தரமில்லை
சில நினைவுகளிலிருந்து தனித்திரு....!

உனக்குள் ஒளிந்திருக்கும் உன்னைக்
கண்டுகொள்ள தனித்திரு....!

கொடிய நோய் உன்னை அண்டாதிருக்க
உன் உயிர் காக்கத் தனித்திரு....!
பிறர் உயிரும் காக்கப் படும் !!!

எழுதியவர் : கயல் (10-Jun-20, 2:18 pm)
சேர்த்தது : கயல்
பார்வை : 155

மேலே