என்ன செய்து விடும் கரோனா
நூற்றாண்டுகள் கண்டிராத
நீண்டதொரு ஊரடங்கு..!!!
"குண்டு போட போகிறார்கள்" என்று
பதுங்குகுழியில்
பதுங்கி கிடந்த
இலங்கை அகதி போல்..
இல்லத்திற்குள் அனைவரும்.
இப்போது புரிகிறதா
இயலாமையின் வலியும்
சொந்த நாட்டிலே
ஒளிந்து வாழும் அவலமும்...
இங்கே...
விதவிதமாய் அறிக்கைகள்...
விதவிதமாய் திட்டங்கள்...
முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாவும்...
முடமாகி போனதென்ன.!!!
நவுத்துபோன ஊரடங்கால்...
நகைத்து போனது கிருமியது.!!
இப்படி நீ போனால்...
அப்படி நான் வருவேன் என்றது.!!
வீணாய்ப்போன.. வெள்ளைச்சட்டைகளுக்கும்...
காணாமல் போன...
கருப்புச்சட்டைகளுக்கும்...
அழுதழுது மரணிக்கும்...
அழுக்குச்சட்டைகளுக்கும்..
மத்தியில்...
என்ன செய்யும் கரோனா..?!?
ஆணவமாய்...
அலைகிறது அது.!!!