விழுவாய் எழுவாய்

விழுதல் அவமானமெனில்
ஆலம் விழுதுகளெல்லாம்
வேராகக் கூடுமோ....

விழுதல் குறையுமல்ல
அதன் வீழ்ச்சி ஆர்ப்பரித்துக்
கொட்டும் அருவியாயின்....

விழுதல் தோல்வியும் அல்ல
மழையாய் விழும் நீர்
பயிராய் முளைக்குமெனில்....

விழுந்துவிடலாம்......
விழுதாய்.....
அருவியாய்.....
மழையாய்.....

பின் எழுந்துவிடு
விழுந்த இடத்தில்
முளைத்து நிற்கும்
விதைகளாய்.....

எழுதியவர் : முகில் (23-Nov-18, 10:30 pm)
சேர்த்தது : முகில்
Tanglish : vizuvaay ezhuvay
பார்வை : 226

மேலே