முதல் தோல்வி

முதல் தோல்வி - அனுபவம் அள்ளித்தரும் .

முதல் தோல்வி - ஆறு போல் ஓடச் சொல்லும் .

முதல் தோல்வி - இமைக்கா விழிகள் தரும் .

முதல் தோல்வி - ஈசாப் போல் சுமைக்க சொல்லும் .

முதல் தோல்வி - உழைப்பினை உயிர்க்கும் .

முதல் தோல்வி - எட்டுத்திக்கும் கொண்டு செல்லும் .

முதல் தோல்வி - ஏறு போல் உழைத்திட சொல்லும் .

முதல் தோல்வி - ஐயத்தை தெளிவுப்படுத்தும் .

முதல் தோல்வி - ஓய்வினை ஓரங்கட்டும் .

முதல் தோல்வி - கனவினை வண்ணம் கொள்ளும் .

முதல் தோல்வி - சாதனை புரிய சொல்லும் .

முதல் தோல்வி - ஞாலத்தில் சிறந்திட சொல்லும் .

முதல் தோல்வி - செயல்களை செழுமைப்படுத்தும் .

முதல் தோல்வி - தவற்றை சிந்திக்க‌ சொல்லும் .

முதல் தோல்வி - வளர்வதற்கு வழி சொல்லும் .

முதல் தோல்வி - படுக்கையை ஒடுக்க சொல்லும் .

முதல் தோல்வி - முயற்சியினை அதிகப்படுத்தும் .

முதல் தோல்வி - வெற்றிக்கு வழி காட்டும் .

தோல்வி என்பது துவள இல்லை !

வெற்றி கண்டவன் தோல்வியின் பிள்ளை !

எழுதியவர் : M. Santhakumar . (11-Nov-18, 4:54 pm)
சேர்த்தது : Santhakumar
Tanglish : muthal tholvi
பார்வை : 170

மேலே