Santhakumar - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Santhakumar |
இடம் | : Puducherry |
பிறந்த தேதி | : 07-Aug-2001 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Oct-2018 |
பார்த்தவர்கள் | : 1667 |
புள்ளி | : 41 |
1.கவிதை தூய தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் .
2.கவிதை சொந்த படைப்பாக மட்டுமே இருக்க வேண்டும் .
மின்னற்ற இரவு .
கருத்த வானிலே வெளுத்த நிலவொன்று
இருண்ட நேரத்தில் ஒளி வீசுதே !
குட்டி வெண்ணிலா குட்டி கண்ணிலே
மின்னும் சக்தியால் என்னை ஈர்க்குதே !
மரங்கள் இலையினால் மெளன இரவினில்
காசு வாங்காமல் காற்று வீசுதே !
மின்மினி பூச்சியோ மின்னற்ற -இரவினில்
மின்னும் சக்தியால் ஒளி செய்யுதே !
எத்தனை அழகோ இரவில் இன்னும்
அத்தனையும் காண வேண்டாம் உறக்கம் !
நேரம் இல்லை நீயும் வா
உந்தன் கனவை நீயே வெல்ல
காலம் இல்லை நீயும் வா
உலகம் உந்தன் பெயரை சொல்ல
ஆற்று நதி நீயே தான்
அடக்க இங்கு யாருமில்லை
வேர்வை துளி விதைத்தால்
வெற்றி ஒன்றும் தூரம் இல்லை
மணிக்காட்டும் கடிகாரம்
மடை திறந்து உன்னை ஓட்டும்
விழியோரம் நீ சிந்தும்
கண்ணீர் தான் விடையாகும்
பொறுமை காத்து நீ பெருமை தேடு
திறமை வளர்த்து நீ வெற்றிப்பாடு
ஒன்றிவாழ் நீ உலகத்தோடு
நாளை ஒலிக்கும் கைத்தட்டல் சத்தம் கேளு .
இரவுக்கு வெளிச்சம்
தருவது
வெண்ணிலவு !
வாழ்வுக்கு வெளிச்சம்
தருவது
பெண்ணிலவு !
உடைந்த வீடு அது எங்கள் வீடு .
சபரிமலை படிக்கட்டு போல் பதினெட்டு படி இருக்கும் . படிப்படியாய் அடியெடுத்து மேலே வந்தால் நினைத்தபடி வீடு இருக்காது . நினைத்த துணியும் காய்ந்திருக்காது மழைகாலத்தில்.
உடைந்த வீடு ......
எங்கள் வீட்டில் கதவிருக்காது ஆனால் இரும்பால் செய்த பூட்டு பூத்துக்குலுங்கும்.
எங்கள் வீட்டில் அண்ணாந்து பார்த்தால் ஆகாயம் தெரியும் . தலைகுனிந்து பார்த்தால் கீழ் வீடு தெரியும் .
எங்கள் வீட்டில் மேலே ஓடு ஒட்டியிருக்கும் அதன் ஓரத்தில் ஒடிந்திருக்கும் தார்ப்பாய் போட்டு மூடி வைத்தால் காற்றில் அது கண்ணடிக்கும் .
எங்கள் வீட்டில் ஆறு ஓடும் மழை பருவம் தார்ப்பாய் வழியே அருவி கொட்
தோளில் சாய்ந்து சாகவே
சாவைக் கூட கேட்கிறேன்
நிழலாய் காய்ந்து தாகவே
பாலை நீராய் தாவினேன்
துண்டு துண்டாய் ஏனம்மா
என்னை கூறு போடுறாய்
ஒரு பிள்ளை போல நீயடி
இதய நதியில் பாய்கிறாய்
மார்பின் மேலே பாரமாய்
ஒரு கனவு வந்து வளருது
கண்களின் ஓரம் ஈரமாய்
நீ வந்து வந்து பார்க்கிறாய்
நீயாகி மழை வந்த - போது
குடையின்றி நனைந்தேன்
கைக்குட்டைச் சுவர்களில்
கனவை காயப்போட்டேன்
நிலவு கூட ஜன்னல் - வழி
என் நிலவை எட்டிப் பாக்க
காளான்கள் மேலே நின்று
நிலவை சிறைப்பிடிப்பேன்
ஒரு நொடிப் பார்வையில்
இதயம் தொலைந்து போக
தவ வீதியில் அகதி போல
கால்கள் கடுக்க நிற்கிறேன்
அண்ணார்ந்த
காலம் போகுதே பெண்ணே .
சற்று வாயேன் முன்னே .
பாரம் கூடுதே கண்ணே .
பாசம் தேய்ந்ததோ கண்ணே .
நீயும் என்னை சேர்த்தான் .
பிரம்மன் உன்னை படைத்தான் .
ஆனால் நீயும் பிரிந்ததால் எந்தன் நெஞ்சம் உடைந்ததோ .
கண்ணில் நீர்கள் நிற்கவே நெஞ்சம் உன் பெயர் சொல்லுதோ .
காலம் போகுதே பெண்ணே ....
நிழலாய் கூட வந்தாயே .
என் நிஜமாய் வர மறுத்தாயே .
கைகள் கோர்த்து நடந்தாயே .
என் விரல் கோர்க்க மறத்தாயே .
பாதை மறந்த பறவை போல் என் வாழ்க்கை மறந்து நிற்கின்றேன் .
கதைகள் கேட்கும் பிள்ளைப்போல் என் கதை எண்ணி சிரிக்கின்றேன் .
காலம் போகுதே பெண்ணே .....
தனியாய் நான் உனை நினைத்து .
பனியாய் நீ என் விழியில் .
பெண
முகவை மூடனும் நாஞ்சில் நாடனும்
அகவை மூவாறில் கொண்ட நட்பு
கருத்து ஒவ்வாது செருக்கு மேலோங்கி
வெறுத்து ஓராண்டில் பிரிந்த நட்பு
தனியன் எனைத்தேடி வந்த கனியன்மேல்
அடியேன் கொண்ட அருமை நட்பு
எனக்குத் தெரியாதென வினை செய்து
பிணக்கு வந்து பிரிந்த நட்பு
வாசல் தேடிவந்த வல்லான் உனை
ஈசலென மிதித்த பொல்லான் நான்
பேசி தீர்க்க பொருமை இல்லை
வீசி எறிந்தேன் விரட்டி அடித்தேன்
மனித தூது முயற்சி செய்தாய்
புனித மேனி புண்படும் என்றேன்
அவமானம் எதுக்கென்று அகந்தை கொண்டாய்
தன்மானம் எனக்கென்று தனியே சென்றேன்
முகம் கண்டால் முடியும் பகையென்று
அகம் நொந்து கூறினேன் வசையொன்று
நிழல் கண்டாலும் நினைவுகள் வரும