நேரம் இல்லை நீயும் வா

நேரம் இல்லை நீயும் வா
உந்தன் கனவை நீயே வெல்ல
காலம் இல்லை நீயும் வா
உலகம் உந்தன் பெயரை சொல்ல
ஆற்று நதி நீயே தான்
அடக்க இங்கு யாருமில்லை
வேர்வை துளி விதைத்தால்
வெற்றி ஒன்றும் தூரம் இல்லை
மணிக்காட்டும் கடிகாரம்
மடை திறந்து உன்னை ஓட்டும்
விழியோரம் நீ சிந்தும்
கண்ணீர் தான் விடையாகும்
பொறுமை காத்து நீ பெருமை தேடு
திறமை வளர்த்து நீ வெற்றிப்பாடு
ஒன்றிவாழ் நீ உலகத்தோடு
நாளை ஒலிக்கும் கைத்தட்டல் சத்தம் கேளு .

எழுதியவர் : M. Santhakumar . (26-Jan-19, 5:19 pm)
சேர்த்தது : Santhakumar
பார்வை : 162

மேலே