அவள் தந்த சோகம்
காலம் போகுதே பெண்ணே .
சற்று வாயேன் முன்னே .
பாரம் கூடுதே கண்ணே .
பாசம் தேய்ந்ததோ கண்ணே .
நீயும் என்னை சேர்த்தான் .
பிரம்மன் உன்னை படைத்தான் .
ஆனால் நீயும் பிரிந்ததால் எந்தன் நெஞ்சம் உடைந்ததோ .
கண்ணில் நீர்கள் நிற்கவே நெஞ்சம் உன் பெயர் சொல்லுதோ .
காலம் போகுதே பெண்ணே ....
நிழலாய் கூட வந்தாயே .
என் நிஜமாய் வர மறுத்தாயே .
கைகள் கோர்த்து நடந்தாயே .
என் விரல் கோர்க்க மறத்தாயே .
பாதை மறந்த பறவை போல் என் வாழ்க்கை மறந்து நிற்கின்றேன் .
கதைகள் கேட்கும் பிள்ளைப்போல் என் கதை எண்ணி சிரிக்கின்றேன் .
காலம் போகுதே பெண்ணே .....
தனியாய் நான் உனை நினைத்து .
பனியாய் நீ என் விழியில் .
பெண்ணாய் நீ மணவறையில் .
புண்ணாய் நான் தனியறையில் .
சோகம் என்னை வாட்டுதே .
காதல் தாகம் உயிரை கொள்ளுதே .
சுடராய் என் விழி விழுந்து என் நெஞ்சை நீ சுட்டெடுத்தாய் .
மலராய் என் நெஞ்சில் பூத்து மரணப்படுக்கையை பரிசளித்தாய் .
காலம் போகுதே பெண்ணே .....