நதியின் காதல் ஏக்கம்
தினம் இரவில் வந்து!!
ஒற்றை காலில் நின்று!!
பல நூறு கவிதைகள் படித்து..
சில கதைகள் சொல்லி நடித்து..
கொஞ்சமாய் கண்ணீர் வடித்து..
செல்லமாய் சேட்டைகள் பிடித்து..
இந்த மங்கையின் மனதை மயக்கி
அந்த விண்மீனை கயிரால் இறுக்கி
எட்டாத தூரத்தில் இருந்து
எனக்காக எட்டி குதித்து
என் மடியில் வந்து விழும்
காதல் மன்னனே!!!
பல பெண்களின்
கனவுக் கண்ணனே!!!
ஆனால்,
இன்று வெகுநேரமாகியும்
என்னை காண வரவில்லையே..
ஏன்?
ஒருவேளை
மேகக் கூட்டங்களுக்கிடையே
கள்வன் போல் ஒளிந்திருக்கிறானா?
என்று காதலுடன்
தேடிப்பார்கிறது நதி...
வான் நிலவை!!!
மதியில்லா நதிக்கு
தெரியவில்லை
இன்றிரவு அமாவாசை என்று!!!