சேக் உதுமான் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சேக் உதுமான்
இடம்:  கடையநல்லூர்,நெல்லை
பிறந்த தேதி :  07-Jun-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Sep-2017
பார்த்தவர்கள்:  4818
புள்ளி:  767

என்னைப் பற்றி...

புகழ் அனைத்து இறைவன் ஒருவனுக்கே..
வாழ்வில் நிறைய ஏமாற்றங்களை கண்டவன்..
இதயத்தை இழந்தவன்..
மனதினுள் கஷ்டங்களை மறைத்துக் கொண்டு வெளியே சிரிக்கும் சாதாரண மனிதர்களின் நானும் ஒருவன்..
காதல் கொண்டு நான் கவிதைகள் எழுதவில்லை
மனம் கண்ட காயத்தால் எழுதுகிறேன்..
கவிதைகளின் காதலன்
❤சேக் உதுமான்❤Sheikuduman401@gmail.com
9043137543
முகநூல்:சேக்உதுமான்
Instagram:kavithaigalin_kadhalan_udumanrn

என் படைப்புகள்
சேக் உதுமான் செய்திகள்
சேக் உதுமான் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2020 2:03 pm

அன்பு அம்மாவை!
ஆசை தங்கைளை!
அரவணைக்கும் தமக்கைகளை!
உடன்பிறவா சகோதரிகளை!
பாசமுள்ள பாட்டியை!
காதல் செய்யும் காதலியை!
மனமார்ந்து மணந்த மனைவியை!
அக்கரை காட்டும் மகள்களை!
தொல்லை கொடுக்கும் தோழிகளை!
தினங்களை வைத்து கொண்டாடாமல்
தினம் தினம் அவர்களைக்
கொண்டாட முயற்சி செய்வோம்!!!

❤️சேக் உதுமான்❤️

மேலும்

சேக் உதுமான் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2020 2:01 pm

இணையத்தில் மட்டுமே
இயங்கி கொண்டிருக்கும்
என் கற்பனைகள் யாவும்
எந்தன் கண் முன்
தோன்றும் நாள் எந்நாளோ?

உன்னை நினைத்து..
கவிதையாய் வடித்து..
கரைந்து போவது..
என் கற்பனைகள் மட்டுமல்ல..
எந்தன் வாழ்க்கையும் தான்!!!

வா பெண்ணே!
கவலைக்கிடமாக கிடக்கும்
என் கற்பனைகளுக்கு
உயிர் கொடுக்க வா!!!

❤️சேக் உதுமான்❤️

மேலும்

சேக் உதுமான் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2020 1:57 pm

'அவன்'
ஓர் அபூர்வ பிறப்பு!

தான் காணா உலகை
நாம் காண
தன் தலை மேல்
அமர வைத்து அழகு பார்ப்பவன்!

தன்னலம் கருதாத தங்கம் அவன்!
சுமைகளை சுகமென சுமக்கும்
சுயநலமற்ற ஓர் ஜீவன் அவன்!
வாழ்வின் தான் கற்ற பாடங்களை
பாசத்தோடு சொல்லிதரும்
ஆசான் அவன்!
வாழ்க்கை எனும் பயணத்தில்
நம்மை நல்வழியில் நகர்த்தி செல்லும்
நாணயமான நண்பன் அவன்!
பொய் கோபக்காரன்!
நம் ஆசைகளை
அவன் ஆசைகளாய் கொண்டவன்!
தகரமாய் அவன் இருந்து
நம்மை பொக்கிஷமாய் காப்பவன்!!!
"அப்பா"

❤️சேக் உதுமான்❤️

மேலும்

சேக் உதுமான் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2020 1:55 pm

உலகமே உறங்கிக்
கொண்டிருக்கும் போது
என்னுள்
மெல்ல கண் விழிக்கின்றது
அவளின் நினைவுகள்
நெருப்பின்றி
என் இரவுகளை எரிக்கிறது...
கட்டுக்கடங்காத காட்டுத்தீப் போல்
என் நெஞ்சம் எங்கும்
பற்றி பரவுகிறது...
கண்ணீர் தெளித்து
அணைத்து பார்த்தேன்...
அணையாமல் அனலாய்
இதயத்தை சுட்டெரிக்கிறது...
இரவெல்லாம் கொழுந்துவிட்டு
எரியும் அவளின் நினைவுத்"தீ"
காலை விடிந்ததும்
கானல் நீராய் மறைந்துவிடுகிறது!!!

❤️சேக் உதுமான்❤️

மேலும்

சேக் உதுமான் - சேக் உதுமான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2020 4:48 pm

இந்த சமூகத்தின் மீது
உண்டாகும் கோபத்தினை
இணையத்தில் மட்டுமே
கொட்டித்தீர்கும் கோழைகள் "நாம்"

❤️சேக் உதுமான்❤️

மேலும்

ம்ம்ம் 08-Mar-2020 2:50 pm
ஆமா ... 25-Feb-2020 10:54 pm
சேக் உதுமான் - சேக் உதுமான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2020 4:53 pm

இறக்கமற்ற
உன் இதயத்தை
விரும்புவதற்காக..
உறக்கமற்று
என் இரவுகளை
உயிருடன் எரித்த
கிறுக்கன் நானோ!
காதல் கிறுக்கன் தானோ!

❤️சேக் உதுமான்❤️

மேலும்

நன்றிகள் வாணி 😊 08-Mar-2020 2:49 pm
செம்மமம 25-Feb-2020 10:54 pm
சேக் உதுமான் - சேக் உதுமான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2020 6:10 pm

மன்னித்து விடு பெண்னே..
நீ உறங்கும் வேளையில்
கள்வனாய் உன் அறை நுழைந்து!
உன் இமைகளை இதமாய் திறந்து!
உன் விழிகளில் மிதமாய் விழுந்து!
எனக்கு தேவையான வரிகள் எடுத்து!
அதை கவிதையாய் படைத்து!
பிறரிடம் படித்து காட்டி
பீத்திக் கொண்டேன்!
நான் "கவிஞன்" என்று!!!

❤️சேக் உதுமான்❤️

மேலும்

ரொம்ப நன்றிங்க 😄 😍 😊 12-Jan-2020 8:11 pm
செம்ம.. 10-Jan-2020 1:50 pm
சேக் உதுமான் - சேக் உதுமான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2020 6:06 pm

கவலை என்பது
சிந்தும் கண்ணீர் துளிகளில்
மட்டும் இருப்பதில்லை!
சின்ன சிரிப்பிற்கு
பின்னாலும் ஒழிந்திருக்கும்!

❤️சேக் உதுமான்❤️

மேலும்

😍 😊 12-Jan-2020 8:10 pm
👌 10-Jan-2020 1:54 pm
சேக் உதுமான் - சேக் உதுமான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Aug-2019 12:41 pm

இரவில்
நதியில் மிதக்கும் நிலவு போல்
என் மனதில்
உன் நினனைவுகள் மிதக்கிறது!

நதி அழுவது
நிலவுக்கு தெரிவதில்லை!
நான் புலம்புவது
உனக்கு புரியபோவதில்லை!

நதிக்கு நிலா சொந்தமில்லை!
எனக்கு நீ சொந்தமில்லை!

எட்டாத தூரம் நீ சென்றாலும்
என் காதல்
என்றும் குறைவதில்லை!!!

கவிதைகளின் காதலன்
❤சேக் உதுமான்❤

மேலும்

சரி நட்பே 😁 08-Aug-2019 2:05 pm
ம்ம் நன்றிக்கு நன்றிகள் நட்பே , இல்லை என்பதை தான் நானும் சொன்னேன் நட்பே 08-Aug-2019 2:03 pm
நன்றி அனி..😍 இல்ல இல்ல 😄 08-Aug-2019 2:01 pm
அருமை நட்பே.... விருப்பங்கள் கேட்டா காதல் வருகிறது 08-Aug-2019 1:54 pm
சேக் உதுமான் - சேக் உதுமான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jul-2019 10:49 am

என்னிடமிருந்து
விடுபடக் கூடிய பிடிகள் தான்
இருந்திருந்தும்...
அவள் பிடியில் இருந்து
பிரிய மனமில்லாமல்
விடுடா என்று செல்லமாக கெஞ்சுகிறாள்!
நான் அவளின் கெஞ்சல்களின்
அர்த்தங்களை புரிந்து கொண்டு
இன்னும் இடையை இறுக்க பிடித்து
கொஞ்சல்களை தொடங்குகிறேன்! 😍

மேலும்

கண்டிப்பாக 😄... கருத்துக்கு நன்றி சகோ..😊 21-Jul-2019 10:53 am
மனம் பிடித்தவரை விரல் கோர்க்க தானே ஆசைப்படும் பிடி விலகாம. பார்த்துக்கோங்க ... சகோ 21-Jul-2019 10:50 am
சேக் உதுமான் - தீபிகாசுக்கிரியப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Dec-2018 4:46 pm

தன் ஆயுள் காலம் முழுதும்
உன் இதழ் சிறையில்
அடைப்பட்டுக்கொள்ள
என் இதழ்கள் சரணடைகிறது ....

இரவு பகல் என
ஏதுமின்றி
உன் இதழ்களின் வரிகளை
எண்ணிமுடிக்க ஆசைகொள்கிறது ....

இப்பொழுதே கைதுசெய்
என்னை ,
உன்னுள் அணைத்து
இதழ் என்னும் சிறையில்
அடைத்துக் கொள்ளடா .....

மேலும்

அழகான காமம் பொதிந்த வரிகள் முத்துக்கு ஆம், இதழொப்டு உறவாடும் இதழுக்கு! இதமான முத்துடன் முள்ளென குத்தும் தாடி! மொத்தத்தில் நான் ரசித்த கவிதை 01-Jan-2019 1:18 pm
Parvaikkum karuthirukkum mikka nandri tholiyaee.... 01-Jan-2019 9:56 am
கவிதை வரிகளையும் படித்தேன் .... க்ளீன் ஷேவன் ஆள் கிடைக்கலையா ? என கேட்டதற்கு தான் நான் பதில் கூறினேன் முகம் பார்த்து உருவம் பார்த்து வந்தால் அது காதல் ஆகுமா ? என....தங்களின் கவித்துளியும் அருமை ....நன்றி 01-Jan-2019 9:31 am
முத்தத்தின் வரிகள் முத்தாய் இருக்கிறது மிக அருமை நண்பரே 01-Jan-2019 9:30 am
சேக் உதுமான் - தீபிகாசுக்கிரியப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Dec-2018 9:35 am

யாருமற்ற இடத்தில்
என்னை சுற்றி
இயற்கையின் அழகில் !!!
உன்னையே நினைத்து நினைத்து
ஏங்கும் இதயத்தால்
நான் இயங்குகிறேன் தினமும் ....!

நொடிகளும் உருண்டு ஓட
உன் நினைவால்
என்னை மறக்கிறேன் .....
என்னை மறந்து சில நேரம் சிரிக்கிறேன்
உன் முகம் காணும்
என் கனவால் ...!

கேட்கும் காதல் பாடலின்
வரிகள் யாவும்
நமக்காக எழுதியது போல் தோன்றுவது ஏனோ ?

என்னை சுற்றி கேட்கும் குரல்கள்
எதுவும் என் செவிகள் வர மறுக்கிறது ,
உன்னுடன் பேசும் வார்த்தைகள் மட்டும் என் காதோரம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது ....

என் நினைவிலும் நீயே
என் கனவிலும் நீயே
மூச்சு காற்றில் வாழ்ந்த நான்
இன்று உன் நின

மேலும்

Eeeee....iruntha thana sera 27-Dec-2018 6:38 pm
Super 👌👌👌...unudaya kalvanai Kai sera valthukal😋😋😋 26-Dec-2018 2:04 pm
கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே 10-Dec-2018 3:29 pm
உன் காய் சேரும் நாள்தான் எப்போ....... என்றிருந்தால் எப்படி இருக்கும் நல்லதோர் கவிதை நட்பே இன்னும் எழுதுங்கள் 10-Dec-2018 3:11 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (52)

வாணிகுமார்

வாணிகுமார்

உடுமலைப்பேட்டை
user photo

வேலு ரௌத்திரம் பழகு

காஞ்சிபுரம்
Princess Hasini

Princess Hasini

சென்னை
தீனா

தீனா

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (54)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
Ravisrm

Ravisrm

Chennai
சத்யா

சத்யா

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (53)

யாழினி வளன்

யாழினி வளன்

நாகர்கோயில் /சார்லட்
பபூமா

பபூமா

கல்லிடைக்குறிச்சி
மேலே