கட்டியணைத்து காதல் செய்வோம்

என்னிடமிருந்து
விடுபடக் கூடிய பிடிகள் தான்
இருந்திருந்தும்...
அவள் பிடியில் இருந்து
பிரிய மனமில்லாமல்
விடுடா என்று செல்லமாக கெஞ்சுகிறாள்!
நான் அவளின் கெஞ்சல்களின்
அர்த்தங்களை புரிந்து கொண்டு
இன்னும் இடையை இறுக்க பிடித்து
கொஞ்சல்களை தொடங்குகிறேன்! 😍

எழுதியவர் : சேக் உதுமான் (18-Jul-19, 10:49 am)
பார்வை : 9682

மேலே