நன்மதி வெண்பா - நூல் - பாடல் 49
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
தன்னகரார் வான்றவனைத் தன்புதல்வன் வாலறிவைத்
தன்னரிவைப் பேரழகைத் தன்முன்றில் - துன்னரிய
வோடதியை யுள்ளத் துவகையொடு நன்மதியே
நாடமனங் கொள்ளார் நரர்! 49