யாழினி வளன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  யாழினி வளன்
இடம்:  நாகர்கோயில் /சார்லட்
பிறந்த தேதி :  01-Jan-1986
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Apr-2017
பார்த்தவர்கள்:  1676
புள்ளி:  597

என்னைப் பற்றி...

தமிழ் மேல் கொஞ்சம் காதல் உண்டு .ஆதலால் இந்த தளத்தில் நான் உங்களோடு ...rnrnஎன்னை பற்றி நான் என்ன சொல்வது ...rnநேரமிருந்தால் என் blog பக்கம் செல்லுங்கள் . rnஅவை ஒருவேளை ஏதாவது சொல்லக் கூடும்rnrnMy blog http://inkpenaa.blogspot.com rnஎன் https://youtu.be/q5bCBm8heKs

என் படைப்புகள்
யாழினி வளன் செய்திகள்
யாழினி வளன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2018 10:10 pm

பெண்ணழகை சொல்லவும் வேண்டுமோ
கண்ணழகை கடந்து செல்ல முடியுமோ
வண்ணமது தீட்டாத ஓவியமே
வனத்தின் தேவதை பெண்ணே

வானத்து மேகங்கள் போலவே
கானத்தின் இசையைப் போலவே
கனியின் சுவையைப் போலவே
வெண்ணிலாவின் குளிர்ச்சியைப் போல
இப்படி எல்லாமும்
எப்படி எல்லாமோ
அவளை புகழ முடியும்
அவள் சொல்லித்தந்த
மொழியால்

ஆனால் எல்லாவற்றையும் தாண்டி
மலையின் உயரத்தைப் போல
அண்ணாந்து பார்க்கிறேன்
தமிழ் இலக்கியங்களை
அவள் விழியும் விரலும்
அபிநயம் பிடித்து
கற்றுத்தந்த அழகு மொழியை

அவள் மேலான காதல்
அதையும் தாண்டி அவளால்
கிளர்ந்து எழுந்த
தமிழ் மேலான காதல்
எப்போது வந்தது
சற்று விழிமூடி

மேலும்

யாழினி வளன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2018 10:03 pm

பெண்ணழகை சொல்லவும் வேண்டுமோ
கண்ணழகை கடந்து செல்ல முடியுமோ
வண்ணமது தீட்டாத ஓவியமே
வனத்தின் தேவதை பெண்ணே

வானத்து மேகங்கள் போலவே
கானத்தின் இசையைப் போலவே
கனியின் சுவையைப் போலவே
வெண்ணிலாவின் குளிர்ச்சியைப் போல
இப்படி எல்லாமும்
எப்படி எல்லாமோ
அவளை புகழ முடியும்

ஆனால் எல்லாவற்றையும் தாண்டி
மலையின் உயரத்தைப் போல
அண்ணாந்து பார்க்கிறேன்
தமிழ் இலக்கியங்களை

தமிழ் மேலான காதல்
எப்போது வந்தது
யோசித்துப் பார்க்கிறேன்


ஆசிரியர் சொன்னதற்காக
முதல் முதலாக
உருண்டு புரண்டு
எழுதிய ரோஜா கவிதையை
நண்பர்கள மெச்சியபோதா
அல்லது

அழகு அழகாய்
காதல் கவிதைகளை
தலைவன்

மேலும்

யாழினி வளன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Oct-2018 10:00 pm

தூர தேச வாழ்க்கை
தொலைவில் பார்ப்பவனுக்கு என்னவோ அது பவுசு
வெளிநாட்டு வாழ்க்கைக்கு எப்பவும் ஒரு மவுசு
அங்கு வாழ்வதெல்லாம் என்னவோ பாரம் கொண்ட மனசு
ஒவ்வொரு மனசும் தாய் மடி தேடும்
ஒவ்வொரு இதயமும் தந்தை முகம் தேடும்
ஒவ்வொரு மனிதனும் தாய்மண்ணை தேடுவான்

தூர தேசத்தில் இந்தியன்
ஒருவனை எதிரே கண்டால்
எந்த மாநிலக்காரன் என்றாலும்
அன்று புதிதாய் பார்த்தவன்
அந்த ஒற்றை நொடியில்
இவனின் சகோதரன் ஆகிறான்
அதுவும் தமிழனை கண்டால்
தன் பங்காளியைக் கண்டதுபோல
மச்சி என்று தோள் சேர்ப்பான்

அம்மா முகம் அருகில்
இல்லாவிட்டாலும் கூட
அலைபேசி திரையிலாவது
அவள் முகம் பார்த்து
ஒரு மணி

மேலும்

யாழினி வளன் - சத்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2018 5:10 pm

தேவதைகள்
வானத்தில் மட்டுமே இருப்பதில்லை
பூமியிலும் வசிக்கத்தான் செய்கிறது

ஆயினும் நம் கற்பனையை தாண்டிய
அவைகளின் செயல்பாடுகள் யாவும் யதார்த்தமே . . .

ஆம் . . .

தேவதைக்கும் ஆசையுண்டு
தேவதைக்கும் பாசம் உண்டு
தேவதைக்கும் காதல் உண்டு
தேவதைக்கும் கோபம் வரும்

தேவதைக்கும் திட்ட தெரியும்
தேவதைக்கும் அடிக்க தெரியும்
தேவதைக்கும் கொஞ்ச தெரியும்
தேவதைக்கும் சமைக்க தெரியும்

தேவதைக்கும் நடக்க தெரியும்
தேவதைக்கும் என் தோளில் சாய தெரியும்
தேவதைக்கும் என் கையை பிடித்து
நெடுந்தொலைவு நடக்க பிடிக்கும்

தேவதைக்கும் அழகான குழந்தை பிறக்கும்
தேவதைக்கும் காய்ச்சல் வரும்
தேவதைக்கும் வலிகள

மேலும்

மிக்க நன்றி நட்பே 29-Oct-2018 11:54 am
அருமை அருமை முகமலர்ந்தேன் 20-Oct-2018 7:21 am
நன்றிகள் பல 20-Oct-2018 6:19 am
அருமை 18-Oct-2018 9:08 pm
யாழினி வளன் - சத்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Sep-2018 5:10 pm

தேவதைகள்
வானத்தில் மட்டுமே இருப்பதில்லை
பூமியிலும் வசிக்கத்தான் செய்கிறது

ஆயினும் நம் கற்பனையை தாண்டிய
அவைகளின் செயல்பாடுகள் யாவும் யதார்த்தமே . . .

ஆம் . . .

தேவதைக்கும் ஆசையுண்டு
தேவதைக்கும் பாசம் உண்டு
தேவதைக்கும் காதல் உண்டு
தேவதைக்கும் கோபம் வரும்

தேவதைக்கும் திட்ட தெரியும்
தேவதைக்கும் அடிக்க தெரியும்
தேவதைக்கும் கொஞ்ச தெரியும்
தேவதைக்கும் சமைக்க தெரியும்

தேவதைக்கும் நடக்க தெரியும்
தேவதைக்கும் என் தோளில் சாய தெரியும்
தேவதைக்கும் என் கையை பிடித்து
நெடுந்தொலைவு நடக்க பிடிக்கும்

தேவதைக்கும் அழகான குழந்தை பிறக்கும்
தேவதைக்கும் காய்ச்சல் வரும்
தேவதைக்கும் வலிகள

மேலும்

மிக்க நன்றி நட்பே 29-Oct-2018 11:54 am
அருமை அருமை முகமலர்ந்தேன் 20-Oct-2018 7:21 am
நன்றிகள் பல 20-Oct-2018 6:19 am
அருமை 18-Oct-2018 9:08 pm
யாழினி வளன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2018 5:30 am

ஒரு எழுத்தாளனின் பிரசவம் எப்படி நிகழும் தெரியுமா ? அது எப்போது நிகழும் தெரியுமா . திடீரென்று இதை பற்றி எழுத தோன்றி எழுத ஆரம்பித்துவிட்டேன் .ஒரு தாய் ஒரு இனிய கூடலில் அவள் அறியாத ஒரு தருணத்தில் கரு தரிப்பது போலவே ஒரு எழுத்தாளனும் கரு தரிக்கிறான் . எதோ ஒரு நாளில் எதோ ஒரு தலத்தில் எதோ ஒரு தருணத்தில் எதோ ஒரு இனிய சம்பவத்தின் மகிழ்ச்சியிலோ எதோ ஒரு துயர சம்பவத்திலோ அல்லது எதோ ஒரு அதிர்ச்சியிலோ அல்லது யாரென்று அறியாத ஒருவனின் துயரம் கண்டு எழும் மனித நேயத்தின்போதோ அல்லது எங்கோ நடக்கும் சமூகத்தின் நீதியில்லா அநீதிகளை காணும்போதோ இப்படி எதோ ஒரு தருணத்தில் அவனுக்குள் ஒரு எழுத்து ஒரு உணர்வாக கருவாக

மேலும்

யாழினி வளன் - தப்ரேஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2018 2:23 pm

நிழலை போன்ற வாழ்க்கையில்
நிம்மதியாக இருக்க நினைக்காமல்
வெளிச்சமாக தெரிகின்ற எதையோ தேடி,
வேடிக்கையாக மட்டும் பார்த்து நிற்காமல்
அதை தேடிச்செல்லும் வாழ்க்கை பாதையில்,
அருகில் இருப்பதை கூட ரசிக்காமல்
நேசிப்பவர்கள் பலர் உன்னை சுற்றிருந்தும்
நெருங்கி இருப்பவர்களை கூட நினைக்காமல்
தோல்விகள் பல கண்டும்,
தோற்றத்தில் மட்டும் சிரிப்பை வைத்துக்கொண்டு
கஷ்டங்கள் பல கண்டும் கவலைபடாமல்,
இஷ்டமானவற்றை கூட இழந்த பின் வரும்
இன்பம் தான் வெற்றியோ???

மேலும்

அருமை வெற்றிக்கான தேடலில் பல வாழ்க்கை தொலைந்து போகிறது 27-Jul-2018 3:47 am
மதிபாலன் அளித்த படைப்பில் (public) SHAN PAZHANI மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Jul-2018 10:41 pm

நெருங்கி வந்து
விலகி நிற்பது
நீயா இல்லை நானா?

நெருப்பைக் கொட்டி
நெஞ்சை நிறைப்பது
நீயா இல்லை நானா ?

மேலும்

முற்றுப்புள்ளி அல்ல .அரைப்புள்ளிதான் . நன்றி ! 28-Jul-2018 9:46 pm
காதல் விவாதம் விடை கண்ணீர் ... 28-Jul-2018 9:04 pm
விருப்பத்துடன் விலகல் நிகழவில்லை ! விவரித்து வருத்த நினைக்கவில்லை ! நன்றி ! 27-Jul-2018 4:46 am
காதல் நெஞ்சுக்கு நெருப்பும் நீரல்லவா ? நன்றி ! 27-Jul-2018 4:35 am
யாழினி வளன் - தமிழ் தாசன் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
26-Jul-2018 11:29 am

பாடல் ஆசிரியராக என்ன செய்வது...முயற்சிக்க நான் தயார், முகவரி மட்டும் முடிந்தால் சொல்லுங்கள்..

மேலும்

சினிமா பாடல் ஆசிரியரா ? ஆம் எனில் நேரே கோடம்பாக்கம் செல்லுங்கள் . எந்த டீக்கடையில் சென்றாலும் 4 அல்லது 5 பேர் இருப்பார்கள் ...நன்கு பழகுங்கள் ...வழி கிடைத்து விடும் . ஏழு அல்லது எட்டு ஒரு குயர் நோட்டில் (ரூல்டு or அன்ரூல்டு) நன்கு இடம் விட்டு மான் மயில் குரங்கு பொம்மை ஒட்டி வண்ணமுற எழுதிய கவிதை தொகுப்பு கையில் வைத்து இருப்பது நலம் .இயற்கை கவிதை , மாதவிடாய் அவஸ்தையில் பெண்மையின் துயர் காணல், பள்ளி சிறுமி வன் புணர்ச்சிக்கு ஒட்டு மொத்த பாரதமே துடிதுடித்து சாக நினைப்பது போன்ற துயர் கவிதை- இவைகள் கூட உங்களை அலேக்காக தூக்கி காட்டும். ஸ்கூல் காலத்தில் பேச்சு போட்டி கவிதை கட்டுரை இத்யாதி இத்யாதி போட்டிகளில் ஒன்றிரெண்டு சோப்பு டப்பா வாங்கி இருந்தால் விவேகம் .மனம் தளர்ச்சி வரும்போது நினைத்து ஆறுதல் மற்றும் தென்பு அடையலாம். "தந்திரி கரத்தொடு திவவுறு தியாஅத்து ஒற்றுறு புடைமையிற் பற்றுவழி சேர்த்தி உழைமுதல் கைக்கிளை யிறுவா கட்டி வரன்முறை வந்த மூவகை தானத்து"..... என்று எழுதினால் எகிறிவிடுவர். அதற்கு பதில் நீங்களே பொழுது போகாத நேரத்தில் சில சொற்களை உருவாக்கலாம். உதாரணமாய் ரிம்மிடி கைப்பு கில்டி குலூபிட்ஜ்க ப்ரென்ச்ஜ்ட் உஜ்ஜ ...இப்படி இவை பாடலுக்கு நடுவில் சொருக அது ஹிட் ஆனால் திராவிட தமிழன் சொக்கி விடுவான் . தன்மானம், மரியாதை, கவுரவம் போன்ற விஷயங்கள் ஆரம்ப கால கட்டத்தில் ரொம்ப அல்ல கொஞ்சம் கூட இருக்க கூடாது . பின்னாளில் உலகமே அண்ணாந்து பார்க்கும்போது இந்த விஷயங்களை அப்படியே உல்டா செய்து வாராந்திரிகளில் போணி பண்ணலாம்... (இந்த வாராந்திரிகள் பல மாமாக்களை கைவசம் வைத்திருக்கும் . நேக்காக ஒன்றிரெண்டு துணுக்கு ரிப்போர்ட்டர்களை கைவசம் வைத்து இருந்தால் ரொம்ப பலம். நெட் மற்றும் தூரமனா சானல் பெருகிய பின் பாவம் சிறகொடிந்த பறவைகளாக மாறி விட்டனர் என்றும் கேள்வி) இதுதான் இப்படித்தான் எழுதுவேன் என்று அடம் பிடிக்க வேண்டாம் . நீங்கள் எழுதும் போதே அல்லது எழுதி காட்டும் போது கன்னா பின்னா வென்று வார்த்தைகளை யார் யாரோ மாற்றுவார்கள் . சகிக்க பழக வேண்டும் .இல்லையென்னில் வீட்டுக்கு திருப்பி விடுவார்கள் . பீச்சில் லோ லோ வென அலைய வேண்டியிருக்கும் . பல வண்ணங்களில் வடிவங்களில் குப் குப்பென்று புகை விடும் ரயில் எஞ்சின் கவிஞர்கள் பலர் பழைய தமிழ் சிற்றிலக்கிய பாடல்கள் கொண்ட புத்தகங்கள் அல்லது இத்தாலி பொம்மனாட்டி கவிஞர்களின் படைப்புகளை வைத்து எவன் கூப்பிடுவான் என்று காத்து கிடப்பர். அவர்களிடம் மாட்டி கொள்ள வேண்டாம் . யோசிக்கும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கும் போல தோணுதே என்று உங்கள் மனசுக்கு பட்டால் நீங்கள் மெல்ல யதார்த்த நிலைக்கு வருகின்றீர் என்று அர்த்தம் . உங்கள் தாய் தந்தை ஆசீர்வாதங்கள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது குச்சனூரான் உங்களிடம் வர தயங்குகிறான் என்றெல்லாம் நீங்கள் ஒரு முடிவு செய்யலாம் . இல்லை ...நான் பாடல் எழுதியே தீருவேன் என்ற முடிவுக்கு வந்து இருந்தால் அதற்கும் வாழ்த்துக்கள் . தமிழ் சினிமா உங்கள் பங்குக்கு ஒரு வழியாக்க முடிந்த வரை முயற்சி செய்யுங்கள் . 27-Jul-2018 11:45 am
ஆண் : கவிதை எழுத முதல்படி என்னடி ? பெண் : காதல் புரியடா சினேகிதா ஆண் : காதல் புரிவது எப்படி சொல்லடி பெண் : ..... ...தொடர்ந்து எழுதுங்கள் பாடல் ஆசிரியர் என்ற முகவரி உங்களுக்கு கிடைத்துவிடும்.அப்புறம் என்ன அண்ணாச்சியை கையில புடிக்க முடியுமா ? 27-Jul-2018 7:50 am
யாழினி வளன் - யாழினி வளன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jul-2018 10:00 pm

திருநெல்வேலி என்றதும்
அல்வா நினைவுக்கு வரலாம்
சத்தியமாய் அது நினைவுக்கு
வருவதில்லை எனக்கு
அந்த அல்வாவை விட
தித்திக்கும் எத்தனையோ
நினைவுகள் இருக்கிறது

திருநெல்வேலி என்றதும்
துப்பட்டா மூடிய
தேவதைகளின் அடக்கத்தோடு
ஒட்டிக்கொண்டிருந்த தெனாவெட்டு
அந்த ஏலே என்ற
சங்கீத சொல்
தான் முதலில்
காதில் ரீங்காரமிடுகிறது

காய்ந்த காடு
வெட்டாந்தரை வழி
சுள்ளுன்று உச்சந்தலையை
பிளக்கிற வெயில்
குளிர்ச்சிக்காக தண்ணீரை
வைத்து அறையின்
தரையை குளிப்பாட்டின
சூடான நாட்கள்
என்ன வெயில் என்று
உச்சி கொட்டிய
நாட்களின் நினைவு
இன்று சிலிர்க்கும் சாரலாய்

காட்டுக்குள் கடந்து போன

மேலும்

Nantri nanbargalukkaga Sentra aravinth maruthuvamanai .. sappadu arokiyam kalantha suvai Keerai poriyal vaalai poo ena asathiduvaanga ... iruttukadaiyai serthachu nanbare 😀 19-Jul-2018 6:15 pm
Mikka nantri thangalukku . Antha theiva sakthiyin thunai eppothum ungalukku 19-Jul-2018 6:13 pm
அருள்மிகு நெல்லையப்பர் கோவிலில் அருள்மிகு காந்திமதி அம்மனின் அந்த அருளே ஆபரணமாய் கொண்ட சக்தியின் வடிவை பார்த்துக்கொண்டே இருக்கலாம் அப்படியோர் அற்புத கற்சிலை உற்றுநோக்க அம்மனே தத்ரூபமாய் நமக்கு காட்சி தருகின்றார் நான் நேரில் கண்டு தரிசித்த சைவ தலங்களில் இந்த அம்மன் சந்நிதியும் திருக்கடையூர் அபிராமி அம்மன் சந்நிதியும் வைணவனான என்னால் மறக்க முடியாதவை இந்த சக்தி ரூபங்களில் நான் இலக்குமியைக் கண்டேன். தாமிரவருணி சுற்றி நெல்வளம்கொண்ட பசுமைத் தாங்கிய ரம்மியமான நிலங்கள் மறக்கமுடியா இயற்கை எழில்கள். உங்கள் வரிகளில் திருநெல்வேலி சுற்றுலா என் கண்களுக்கு. வாழ்த்துக்கள் சகோதரி 19-Jul-2018 9:17 am
திருநெல்வேலி நினைவுகள் இனிமை Adikkadi போன அரவிந்த் மருத்துவமனை ----கண் மருத்துவம் படிச்சீயகளோ ? அரவிந்த் கேன்டீன் --குறைஞ்ச விலையில சுவையான உணவு நான் ஒரு ஊர்லையும் பாக்கல.. நெல்லையப்பர் கோவிலுக்கு போனி யளே.....அந்தாக்கல எட்டிப்பிடிச்சாப்ல பக்கத்துல தான இருக்குது அல்வாக்காரங்க இருட்டுக்கடை இரண்டு வார்த்தை போட்டிருக்கலாமே 18-Jul-2018 10:17 pm
யாழினி வளன் - யாழினி வளன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Apr-2018 2:48 am

ஒரே குழப்பம்
ஒருங்கே மனதிற்குள்

மூடப்பட வேண்டியது எது
திறக்கப்பட வேண்டியது எது

நாளெல்லாம் செய்திகள்
நாளேடுகளில்
நாலு பேர் சேர்ந்து
நங்கையை நாசம் செய்ததாக

நங்கையை மட்டுமா
நயவஞ்சக நரம்புகளால்
நறுமணம் பரப்ப
இன்னமும் இதழ்விரிக்கா
மொட்டுக்கள் கூட
பாரபட்சம் இன்றி
பன்றிகளால் மேயப்பட்டு
சகதிகளாய் மாறிப்போகின்றன

மேய்ந்த நாடுகளெல்லாம்
புல் வசீகரமாக இருந்தது
புல்லின் கவர்ச்சி ஈர்த்தது
என்று தான் சொல்கிறதே தவிர
எனக்கு உயிரில் பசித்தது
எனக்கு உணர்வு துடித்தது

நான் என்னை மீறினேன்
என்று சொல்வதில்ல்லை
அவள் ஆடை எல்லை மீறியது
என்று சொல்கிறது
அது த

மேலும்

பூத்ததும் காய்க்க தெரிந்த பூக்களுக்கு மத்தியில் பெண்ணும் ஆணும் ஆடம்பரத்திக்காக பூத்தும் பலவருடம் காய்க்காமல் இருப்பதே காமத்திற்கும் கற்பழிப்புக்கும் காரணம் இயற்கைக்கு எதிராக ஆணும் பெண்ணும் வாழ முற்படும்போது அழிவு நேரிடும்......... எல்லா ஆணும் அக்கா ,அம்மா ,தங்கை கூடத்தான் வாழ்கிறார்கள் வளர்க்கப்படுகிறார்கள் ஆயினும் கற்பழிப்பு குறைவதில்லையே கடவுளே ............... நீ கருவாக்கி உருகக்கிய சமூகத்தையே என் இவ்வளவு கேவலமாக இருக்கிறது ஒரு சீதை வாழ ஒரு ராமனும் தேவை இல்லை ஒரு ராமன் வாழ ஒவொரு பெண்ணும் சீதையாக வாழவேண்டும் .................... 23-Jun-2018 6:24 pm
யாழினி வளன் - யாழினி வளன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Apr-2018 6:34 pm

அன்புள்ள அப்பா,

உங்களை பார்த்து எத்தனை நாளாகி விட்டது. எப்படி இருக்கிறீர்கள் அப்பா. இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். நான் இப்போது தான் வீட்டுப் பாடம் எல்லாம் முடித்தேன் அப்பா.

அழகாக பூவென்று வரைந்து முடித்திருக்கிறேன் நீங்கள் எப்போது அதை பார்க்க வருகிறீர்கள். அந்த காகிதப் பூவும் இந்த குட்டிப் பூவும் உங்களுக்காக காத்திருக்கிறது அப்பா. மறந்துவிட்டேன் அம்மாவும் கூட உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள் அப்பா.

எனக்கு உங்களைத் தேடுகிறது அப்பா.உன்னைக் கத்தி கத்தி அப்பா என்று கூப்பிட வேண்டும் போலிருக்கிறது. உங்கள் முத்தத்தின் சத்தமும் அந்த எச்சில் ஈரமும் என் கன்னங்கள் கே

மேலும்

என் எழுத்துக்கள் உங்கள் உணர்வுகளை எட்ட முடிந்தமையில் மகிழ்ச்சி நன்றி 17-Apr-2018 2:01 am
தந்தை பாசத்திற்கு 5 ஸ்டார்... வழங்கினேன்...கண்கள் ஒரே ஈரம் கட்டுரை படிக்கையில்... 14-Apr-2018 6:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (99)

கார்த்திக் ஜெயராம்

கார்த்திக் ஜெயராம்

திண்டுக்கல்
சகி

சகி

பிறந்த,சிதம்பரம்,வசி,சென்

இவர் பின்தொடர்பவர்கள் (100)

இவரை பின்தொடர்பவர்கள் (104)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
கவிஞர் செநா

கவிஞர் செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே