ராஜேஷ் லிங்கதுரை - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ராஜேஷ் லிங்கதுரை |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 10-Apr-1980 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Dec-2017 |
பார்த்தவர்கள் | : 305 |
புள்ளி | : 22 |
ராஜேஷ் லிங்கதுரை என்னும் நான் பிறந்தது தூத்துக்குடிக்கு அருகில் இருக்கும் முள்ளக்காடு என்னும் கிராமம். கல்லூரியில் சேர்ந்த முதல் நாள், ஆசிரியர் உனக்கு எந்த ஊர் என்று கேட்டபோது, எனது ஊர் முள்ளக்காடு, எனது ஊருக்கு அருகிலேதான் தூத்துக்குடி இருக்கிறது என்று சொன்னேன். அவருக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ உடன்படித்த நண்பர்கள் அனைவரிடமும் எனது பெயர் முள்ளக்காடு என்று பதிவாகிப்போனது. எனது ஊரின் பெயர் என்னை விட்டுப் பிரிக்க முடியாதது.
பொறியாளர் பட்டம் பெற்று பின்பு வணிகவியல் மேலாண்மையும் படித்து, இரண்டுக்கும் தொடர்பில்லாத மென்பொருள் துறையில் வேலை. சாதி, மதம் போன்ற அடையாளங்கள், அரசாங்க அடையாள அட்டைகளுக்கு மட்டும்தான். வாழ்வில் சாதி, மதம் இரண்டையும் வெறுத்து ஒதுக்கி பல ஆண்டுகள் ஆகிறது. பகுத்தறிவாளன் என்ற சொல்லாடலைப் பயன்படுத்த விரும்பவில்லை. பகுத்தறிவு மனிதனாய்ப் பிறந்த எல்லோருக்கும் பொதுவானது. நான் கடவுள் மறுப்பாளன். பிறந்ததும் பிழைப்பதும் வேறுவேறு இடம் என்பது சங்ககாலத்தில் இருந்தே தமிழர்களுக்கு பழக்கமான ஒன்றுதான். தற்போதைய உறைவிடம் சென்னை என்றாலும் அதுவும் மாற்றத்துக்கு உட்பட்டதுதான்.
கட்டியவன் புட்டி தொட்டான்;
கைப்பிள்ளை உடன் என்னைக்
கைவிட்டான்!
உடலில்
உதிரம் வற்றிருந்தால்,
உயிரை உதறி சென்றிருப்பேன்!
மார்பு வற்றியது!
மகளே! உன்
வயிற்றுத் தீ நெஞ்சு பற்றியது!
மானம் விற்றேன்!
மானியம் தந்து சென்றான்!
மெய் விற்றேன்!
மொய் வைத்துச் சென்றான்!
உடல் நுழைத்த வலிகூட
வலிக்கவில்லை மகளே!
வலிக்கிறது...
என்னுடல் புசித்தவனும்
உத்தமன்
வேசமிட்டு உன்னை
வேசிமகள் என்று ஏசயிலே...
பையப்பைய மனசுக்குள்ள நொழஞ்சி என்
கையைப்பிடிச்சவளே...
செரட்டயப்போல என் காதலையும்
பொரட்டிப் போட்டவளே...
அங்குட்டும் இங்குட்டும் அலைஞ்ச என்ன
எங்குட்டும் போவாம கட்டிப்போட்டவளே..
தார்சா உள்ள மொடங்கிக் கெடந்தவன..
ராசா மாதிரி ஊர சுத்த வச்சவளே...
சென்னியப் பேத்தாலும் சும்மா இருந்தவன இன்னைக்கு
வெண்ணியக் குடிக்க வச்சிட்டடி..
ஏல மக்கான்னு கூப்பிட்டவன எல்லாம்
ஏம்ல இப்படின்னு பண்றான்னு கேக்க வச்ச..
கெழக்கால போற கெழடுகட்ட கூட
வடக்காம போவயில வாயாற திட்ட வச்ச...
பாம்பக் கண்டாலும் பயிராத என்ன - ஏண்டி
பல்லாங்குழி ஆட வச்ச...
உப்பாத்த ஓடை போல மனசுக்குள்ள பாஞ்ச ஒன்ன
உப்பப்போல கரைச
பையப்பைய மனசுக்குள்ள நொழஞ்சி என்
கையைப்பிடிச்சவளே...
செரட்டயப்போல என் காதலையும்
பொரட்டிப் போட்டவளே...
அங்குட்டும் இங்குட்டும் அலைஞ்ச என்ன
எங்குட்டும் போவாம கட்டிப்போட்டவளே..
தார்சா உள்ள மொடங்கிக் கெடந்தவன..
ராசா மாதிரி ஊர சுத்த வச்சவளே...
சென்னியப் பேத்தாலும் சும்மா இருந்தவன இன்னைக்கு
வெண்ணியக் குடிக்க வச்சிட்டடி..
ஏல மக்கான்னு கூப்பிட்டவன எல்லாம்
ஏம்ல இப்படின்னு பண்றான்னு கேக்க வச்ச..
கெழக்கால போற கெழடுகட்ட கூட
வடக்காம போவயில வாயாற திட்ட வச்ச...
பாம்பக் கண்டாலும் பயிராத என்ன - ஏண்டி
பல்லாங்குழி ஆட வச்ச...
உப்பாத்த ஓடை போல மனசுக்குள்ள பாஞ்ச ஒன்ன
உப்பப்போல கரைச
பேய் இருக்க இல்லையா ?
நம்பலாமா நம்பக்கூடாதா?
இல்ல அது வருவதற்கு ஏதேனும் அறிகுறி இருக்கா?
இது என் மனதை வெகுநாளாக குடையும் கேள்வி....
பதில் எப்படிருந்தாலும் சரி ...
சங்க தமிழ் இலக்கியத்தில் அறிவியல் பற்றிய புனைவுகள் நிறைய உள்ளதாக சொல்றாங்கோ...அது ஏன் அன்றே தமிழனால் உரு கொடுக்க முடியாமல் போச்சு...நுணுக்கமான தகவல் கிடைக்குமா?
நடுகல் என்ற முதல் கோயில்
இயற்கை வழிபாடுதான் உலகின் முதல் வழிபாடு அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மதத்தின் துவக்கம் என்பது அதுதான். இது எல்லோரும் அறிந்த உண்மைதான். நாம் சற்று முன்னோக்கி செல்வோம். அது மக்கள் குழுவாக வாழத் தொடங்கிய காலம். உணவுக்காகவோ, உறைவிடத்துக்காகவோ, பிற குழுக்களைத் தாக்க வேண்டிய கட்டாயம். அதில் வீரமாக சண்டையிட்ட மனிதர்கள் ஞாபகார்த்தமாக ஒரு கல் நட்டு வைக்கப்படும். அதன் பெயர் நடுகல்.
அங்கு வாழ்ந்த மக்கள் அந்த நடுகல்லினால் சில நன்மைகள் நடப்பதாக நம்பினார்கள். அதன் முடிவாக அந்தக் கல்லுக்கு சில வழிபாட்டு முறைகள் வந்து சேர்ந்தன. பின் போருக்கு செல்வதற்கு முன்பு அந்தக
எழுத்துக்கள் இல்லாத மொழி
"பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்றார் பாரதி. பெற்ற தாயுடன், தாய்மொழியையும் சேர்த்துக் கொள்ளலாம், தாய்மொழி என்பது அவ்வளவு சிறப்பு வாய்ந்தது. தற்போது இந்தியாவில் பலநூறு மொழிகள் வழக்கில் இருந்தாலும், சில நூற்றாண்டுகள் பின்னோக்கி சென்றால் அவற்றின் எண்ணிக்கை மளமளவென்று குறைந்துவிடும். 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் கிடைத்த கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் ஆகியவற்றில் காணக்கிடைக்கின்ற மொழிகள் மிகவும் குறைவு. அவற்றில் முதன்மையானவை தமிழ் மற்றும் பிராகிருதம் (Prakrit).
இதுவரை இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கல்வெட்டுகள் கிடைத்திருக்
இந்த பூமியில், தனது மரபணுவில் மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்ட எந்த ஒரு உயிரினமும், தான் சுத்த சைவம் என்று மார்தட்டிக் கொள்ள முடியாது. மரபணுவில் சைட்டோப்ளாசத்தைக் கொண்ட தாவரங்கள் மட்டுமே, சூரிய ஒளியின் உதவியால் தனக்குத் தேவையான உணவைத் தாங்களே உற்பத்தி செய்துகொள்ள இயலும். மற்றபடி, மனிதர்கள் அனைவருமே ஏதேனும் ஒரு வகையில் அசைவம் தங்கள் உணவில் சேர்வதைத் தவிர்க்க முடியாது.
யார் சைவம் கிடையாது?
காயம்பட்ட விரலை வாயில் வைத்து, ரத்தத்தைக் குடிக்கும் யாரும் சைவம் கிடையாது.
பாலைத் தயிராக்கிய கோடிக்கணக்கான பாக்டீரியாவையும் தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் யாரும் சைவம் கிடையாது.
மிருகங்களின் க
உருட்டி வைத்த மைதா மாவு
அது ஒரு கனாக்காலம். அதாவது இந்தியா, அண்டார்டிகா மற்றும் ஆப்ரிக்காவோடு கட்டித்தழுவி இறுக்கமாக இருந்த காலம். சில டைனோசர்கள் மட்டும் பார்த்த நிலப்பரப்பு அது. புரியவில்லை அல்லவா. நாம் ஒரு கொசுவத்தியையோ, நின்று கொண்டிருக்கும் மிதிவண்டியின் சக்கரங்களையோ உற்று நோக்கினால் நாம் வரலாற்றில் பின்னோக்கிப் பயணிக்கிறோம் என்று அர்த்தம். தமிழ்த்திரைப்படங்களின் கலாச்சாரப்படி நமக்கு பழைய காலத்துக்கு செல்வதற்கு கொசுவத்தி ஒரு இன்றிமையாத பொருள். நமக்கு சற்று பெரிய அளவில் தேவைப்படும். ஏனென்றால் நாம் குறைந்தது 10 முதல் 20 கோடி வருடங்களாவது பின்னோக்கிப் போக வேண்டியிருக்கும்.
10 முதல் 20
ஆயா முகத்தில் நீ கண்விழிக்க...
அலுவலக வாசலில் நான் இருப்பேன்...
தூக்கி உனைக்கொஞ்சிட கனவுடன் நான் வருவேன்...
தூக்கத்திற்கு இரவில் அழுது கொண்டு நீ இருப்பாய்....
உறங்கும் நேரம் மட்டும் உனை நான் ரசிக்கிறேன்...
உன்விழிகள் கலங்கும்போது கைப்பேசியில் தாலாட்டுகிறேன்...
தேம்பி அழ தாய்மடி என்றும் கிடைத்தது எனக்கு...
தாய்ப்பாலும் புட்டிப்பாலாய் மாறிப்போனது உனக்கு...
தவறி நான் விழுந்துவிட்டால் பதறிப்போய் வாரியணைப்பாள் என் அன்னை...
முதல் அடி எடுத்து நீ வைத்ததை புகைப்படத்தில் நான் பார்த்தேன் உன்னை...
வீட்டுச்சுமை வேலைக்கு தள்ளியது என்னை...
வீட்டுக்குள்ளே அந்நியமாக்கியது உன்னை...
கருவில் சுமந்த உன்னை கையில் சுமக்க நேரமில்லை...
உயிரில் கலந்த உன்னை உச்சிமுகர காலமில்லை...
அலுவலகத்தில் இருந்தாலும் ஆசை நெஞ்சம் உன்னுடன்தான்...
கணினி முகம் பார்த்தாலும் என் கண் முழுதும் உன் உருதான்...
என் கண்ணீருக்குள் கலையாத காவியம் நீ... என் உயிருக்குள் கலந்த இன்னொரு உயிர் நீ...
நம் கடன்தீரும் நாள் ஒருநாள் வரும்...உனைக் கட்டியணைத்துக் கொஞ்சும் நாளும் வரும்...
காத்திரு மகளே... இந்த Corporate தாய்க்காக...