நிலா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நிலா |
இடம் | : நாமக்கல் |
பிறந்த தேதி | : 15-Jul-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 400 |
புள்ளி | : 14 |
சலித்து போனேன் மனிதனாய் இருந்து....!
ஆலிங்கனம் என்பதன் பொருள் என்ன?
கண்களில் நீபேசியது காதலின் ஆரம்பம்
கனவில் நீநடந்தது காவேரிக் கரையோரம்
காதலில் நீபாடியது யமுனா கீதம்
கற்பனையில் நான்மிதப்பது அந்திநிலா வானம்
அவ்விரண்டு கண்களும்
எவ்வகை மலர்களோ
அங்கே காங்கையில்
கண்டேன் கங்கையை ...
நாவிரண்டு திசையிலும்
பாவகை ஒலிக்க பாவையை
கண்டேன் பாதையில்....
ஈரைந்து மாதம் கருவரை
கண்ட குழலியின் பொன்
சிரிப்பை அவளின் இதழில் கண்டேன்...
மூவிரண்டு சுவையையும்
அவளை கண்டு
அருந்திய தேனீரில்
கண்டேன்...
செவ்வனே செய்த சிலை
அவ்வண்ணமே உதிர்ந்த கலை
கண்டேன் அவளை....
-இந்திரா
என்னவரின் கண்ணில் என்னை காணும் போதும் நானும் பேரழகி என்று கர்வம் கொண்டேன்
யாருக்கும் அஞ்சா!
எதற்கும் அஞ்சா!
தன்மானம் காக்க
யாரிடமும் கெஞ்சா!
தியாகச்சுடர் எனும்
வெத்து பட்டம் வேண்டா!
உண்மை உரைக்க
எவர் அனுமதி வேண்டா!
உன் காலடி தடம்
பதிக்க வா!
புதுமைகள் பல
புகுத்த வா!
சாதனை செய்ய
பிறந்தவளே!
சரித்திரம் போற்றிய
காரிகையும் நீ யே!
அறியாமை இருளை
விலக்கிடவே!
புரட்சி பெண்ணே
புயலாய் நீயும்
கிளம்பி வா!
பாரதி போற்றிய
புதுமை பெண்ணே!
எம் தேசம் போற்றும்
தமிழ் பெண்ணே!
வாழ்க ! பெண்மை வாழியவே!
ஒரு இஸ்லாமியன் குர்ரான் தினசரி படிப்பது போல்
ஒரு கடைக்கோடி கிறித்துவன் பைபிள் படிப்பது போல்
நம் இந்து மக்கள் ஏன் பகவத் கீதை அறியவில்லை.................
வெகு நாட்களாக என் மனதை குடையும் கேள்வி ...
ஆண் தோழமையின் எல்லை என்ன? அது தூய்மை தான் நிரூபிக்க என் செய்வது ?
பேய் இருக்க இல்லையா ?
நம்பலாமா நம்பக்கூடாதா?
இல்ல அது வருவதற்கு ஏதேனும் அறிகுறி இருக்கா?
இது என் மனதை வெகுநாளாக குடையும் கேள்வி....
பதில் எப்படிருந்தாலும் சரி ...
மலரே உனக்கு ஒருநாள் தான் ஆயுள்காலம் என்று தெரிந்தும் எவ்வாறு முடிகிறது உன்னால் மட்டும்
இனியொரு விதி செய்யோம்- ஆச்சிமசாலா வாங்குவோம்
---------------------------------------------------------------------
பாரதியாரின் புரட்சி கவி மசாலா விற்கிறது. வேதனையிலும் வேதனைஇதை தமிழ் ஆர்வலர்கள். கவிஞர்கள் ஏன் கண்டுகொள்ள வில்லையோதெரியாது. தமிழ் நாட்டில் தமிழுக்காக குரல் கொடுக்கும் யாருடைய கண்ணிலும் காதிலும் ஏன் இது விழவில்லை. தமிழே என் மூச்சு என்று சொல்லும் கவிகள் புரட்சி பாடல் இப்படி கொச்சை படுத்துவதை ஏன் கவனிக்க தவறினர்..?
இந்த விளம்பரம் 4 முதல் 5 வயது குழந்தையை பெரிதும் பாதிக்கும். இன்னும் சிலகாலத்தில் ஒரு குழந்தையிடம் சிறிது வளர்ந்த பிள்ளையிடம் ....இனியொரு விதி செய்யோம் ...அடுத்த வரி