மகளிர் தினம் - பெண்ணே உனக்காக
யாருக்கும் அஞ்சா!
எதற்கும் அஞ்சா!
தன்மானம் காக்க
யாரிடமும் கெஞ்சா!
தியாகச்சுடர் எனும்
வெத்து பட்டம் வேண்டா!
உண்மை உரைக்க
எவர் அனுமதி வேண்டா!
உன் காலடி தடம்
பதிக்க வா!
புதுமைகள் பல
புகுத்த வா!
சாதனை செய்ய
பிறந்தவளே!
சரித்திரம் போற்றிய
காரிகையும் நீ யே!
அறியாமை இருளை
விலக்கிடவே!
புரட்சி பெண்ணே
புயலாய் நீயும்
கிளம்பி வா!
பாரதி போற்றிய
புதுமை பெண்ணே!
எம் தேசம் போற்றும்
தமிழ் பெண்ணே!
வாழ்க ! பெண்மை வாழியவே!