மகளிர் தினம்

உயிர்சுமந்து உருகொடுத்த தாயாய்
உணர்வுகளோடு இணைந்த சகோதரியாய்
உறவுகளைச் சுமக்கும் மனைவியாய்
உயிர்ப்பூட்டும் மகளாய்...

அவதாரங்கள் பல எடுத்து
அரிதாரங்கள் பூசி மிளிரும்
அன்புள்ளம் கொண்ட மகளிர் அனைவருக்கும்...

போற்றிடும் நாளிது...!
வாழ்த்திடும் நாளிது...!!

அகம்நிறை வாழ்த்துகள்...!
மகளிர் தினவாழ்த்துகள்...!!

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (8-Mar-19, 6:26 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
Tanglish : makalir thinam
பார்வை : 97

மேலே