தும்பிக்கையானைத் துதிப்போம்

தும்பிக்கையானைத் துதிப்போம்

தும்பிக்கையான் மேல் நம்பிக்கை வை
துதிப்பவை யாவும் உனக்கு கிட்டும்
ஐங்கரத்தனை அகம் வைத்து தொழுதால்
ஐயமெல்லாம் தீர்ந்து அருள் கிடைக்கும்
ஒரு தந்தம் உடையவனை உள்ளத்தில் வேண்டினால்
ஓதிய மந்திரம் முடியும் முன்னே இன்னல் மறையும்
யானை முகத்தனை முன்வைத்து என்றும் வழிபட
யாவும் சுகமாகும் என உணர்ந்தோர் கூறிய வாக்கு
மனதில் உறுதியாக அவனை நினைத்து வாழ்வோர்
மங்களம் பெற்று வாழ்வில் இன்புறுவர் இது உண்மை

எழுதியவர் : கே என் ராம் (11-Aug-25, 10:19 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 12

மேலே