சுதந்திரம்

சுதந்திரம்
காற்றடித்தால் தூசி பறக்கும்
ஆனால் இங்கு
உயிர் நீத்தோரின்
மூச்சுக்காற்றே நிறைந்திருக்கும்

காந்தியின் அகிம்சையை
கண்டிருக்கிறீரா ? - இல்லையேல்
எங்கள் பாரதியின் வரிகள்
உனக்கு பதில் சொல்லியிருக்கும்

நீ அணைத்த மூச்சுக்காற்று
அத்தனையும் இன்று
வெடித்து சிதறுது பார்த்தாயா ?

மூவர்ணக்கொடி
காற்றில் அசையும்
அழகைப் பார் - அது
காற்றென்று நினைத்தாயோ ?
எங்கள் முன்னோரின் மூச்சு

மண்ணில் பட்டால் மாசாகும் - என்று
நெஞ்சில் சுமந்து
நீத்தோமே எங்கள் உயிரை
அந்த குமரனை விடவா ?

ஆயுதமே தேவையில்லை
எங்கள் எழுத்துக்களே போதும்
இனிய சுதந்திரத்துக்கு …….

வீரியமிக்க விதைகள் நாங்கள்
எங்களை விதைத்ததெல்லாம்
புரட்சியாளர்கள் ….

பெற்ற சுதந்திரம் வாழ்க
பெற்றுத்தந்த முன்னோர்கள் வாழ்க

எழுதியவர் : கதிரவன் (11-Aug-25, 3:14 pm)
சேர்த்தது : கதிர்
Tanglish : suthanthiram
பார்வை : 28

மேலே