எழுந்து நீ வாராயோ

தேக்கமாய் நெஞ்சிலே திரிவின்றிக் கிடக்கின்றாய்
தாக்கம் தருகின்ற தங்கமயில் பேரழகே
தூக்கம் கண்ணிலே துளியும் இல்லையடி
மூர்க்கம் கொண்டு என்காதல் உன்னை முட்டிவிடத் துடிக்குதடி
நோக்கம் நானாகஎன் நோய்தீர்க்கும் தேனாக
ஏக்கம் தீர்க்கவே எழுந்துநீ வாராயோ

அஷ்றப் அலி

எழுதியவர் : ALA Ali (11-Aug-25, 12:36 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 45

மேலே