ப்ரியப்பட்ட டேஷ் - 12
டைரி
அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பாய்!
நான் ஏன் உனக்கு அத்தனை முக்கியமாய்ப் படுகிறேன் என்று.
முக்கியமாய் என்றால் !
நிறைய முக்கியங்களை அடுக்கடுக்காக நிரல் செய்ய நேரிடும்.
என் வாழ்வில்
இதுக்கு முன்பு நான்
அதுவரையும் கண்டிராத, கேட்டிராத, அறிந்துமிராத ஒரு பெண்
சட்டென ஒரு நடு இரவில் பிரச்சனையாகிறாள்.
என் பொறுப்பிற்கும் அந்தஸ்த்திற்கும்
புருஷத்தனத்திற்கும் சேர்த்து அறைகூவல்களாகிறாள்.
மைக்ரேனைவிட
கொடிய தலைவகியாகிறாள் .
கண்களால் காணமுடியாத ஆதர்ஷியமான நூற்கண்டுகளால்
ஏதேதோ கதைகளைக் கூட்டிச் சேர்த்து சிலரை அடுக்கவும்
சிலரை நம்மிடமிருந்து விலக்கவும்
நம் தலைக்கு மேலிருந்து
யாரோ ஆடும் பொம்மலாட்டங்களில்
நீயும் நானும் ஒரு பார்ட்.
நான் எத்தனை சிரமித்தும் மறக்கமுடியாதவர்களிடம் இருக்கும்
சில அழகிய qualities உன்னிடம் இருக்கு.
அப்டி எடுத்தாப் போதும் .
பைராகி