கௌதமன் நீல்ராஜ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கௌதமன் நீல்ராஜ் |
இடம் | : பெரம்பலூர் |
பிறந்த தேதி | : 01-Apr-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 660 |
புள்ளி | : 415 |
எந்தவொரு கடவுளுக்கும் படிஅமர்ந்து மடியேந்தி வணங்குபவன் அல்ல... எந்தவொரு அரசியல்வாதிக்கும் சுயம்மறந்து அறம்துறந்து கொடிபிடிப்பவன் அல்ல... எந்தவொரு நடிகனுக்கும் கைதட்டி விசிலடித்து தலைவன் என போற்றுபவன் அல்ல... " ஓரிடம்நில்லா ஓடைநீரில் ஓய்வின்றிப் பயணிக்கும் ஒற்றைத்துடுப்பில்லா ஓடம் நான்"
மேகந்தழுவி மோகந்தனியா வன்புயலில் சிக்கியதொரு குயில்கூட்டம்
தாகந்தனிக்க தேகம்சுருங்கி தென்திசை நோக்கியபடி நடமாட்டம்...
கோவென ஏலமிட பறைகொட்டிட தேர்வருமே சேனைப்படை
கூவென ஓலமிட குறைகேட்க யார்வருவர் ஏனையவர்கள்...
கூறல்மொழிக் கூற்றுப்படி ஊற்றுநீரில் தேற்றம்காணவா
ஆறறிவு ஆற்றல்தனை நேற்றிரவே தோற்றுவித்தாய்...?
குயவன்வடித்த களிமண் உளிதாங்கி உருவானதா...?
வயலொளிரத் துளிர்விடும் தளிரரும்புகள் எருவாவதா....?
மகரந்தமேனி திருவிடத்தை தகர்த்தெறிவது நெறிமுறையா...?
சிகரம்தொட்ட பெருஞ்சேனையே அகராதிகண்டு அறிந்திடுக...!
உரல்கொத்தும் உலக்கையொலி வரம்புமீற தரமிழக்கும்
நிரல்மறுகி இலக்குசேர உரமளித்து சிரமுயர்த்தும்...
செறுவிளை குழல்சூடி மெல்லிடையில் உடைமறைத்து
குறுநகை நிழலாடி புல்தரையில் நடைபயில...
கருவிழி நெருஞ்சிபேல பார்த்துவரும் குறிஞ்சிப்பாட்டு
இருசெவி அருகில்வந்து சேர்ந்ததென்ன அறிவொளியே...!
வெண்சங்கு பெண்ணுருவே பண்பாடும் தொண்நடையே
விண்தொட்டு மண்சேரா வண்ணமிகை எண்ணுருவே...!
இலையுடுத்தும் மலைக்கள்ளன் குலைமண்ணை கலையாக்க
நிலைகொண்டேன் விலைகாண அலையாடும் சிலைவடிவே...!
புண்ணியபூமி கண்ணம்பூசிய திண்ணம்மிகை வண்டல்புழுதி
கண்மணிநீயும் கண்ணியம்மறந்து கண்டபொழுதே தண்டித்ததேனோ...?
வற்றியஓடை வடுவாக வெற்றிக்கனி சிலருக்கு
சிற்றுண்டி நெடுஞ்சாலை சிற்றின்பம் பலருக்கு...
வாளேந்தி வலம்வரும் வங்கநாட்டு தங்கமகளே
நாளேட்டின்
சாலையோரம் சங்கதிகாணும் எல்லைச்சாமியே எங்கபோன
மாலையானா மண்புழுதி சேலையெல்லாம் செதக்கிதய்யா...!
வட்டிக்காசு கேக்கவந்த மேலக்காட்டு நாட்டாமைகூட
குட்டினுதான் கூப்புடுறான் கொசுவத்தயே பாக்குறான்...
சாதிசனம் யாருமில்ல சேதிகேக்க எவருமில்ல
ஊதியக்காச ஒளிச்சிவெக்க வழியிருக்கா சொல்லுங்கய்யா...!
பச்சரிசி ஒலையவச்சா பத்தவச்ச அடுப்புதூங்க
எச்சமாக கொண்டுபோக மிச்சமென்ன இருக்குதய்யா...!
கொத்துவேல செய்யப்போனா கொத்துகொத்தா பேசுறாங்க
பத்துபாத்திரம் தேய்க்கப்போனா பலவிதமா ஏசுறாங்க...
மாசமாசம் சீட்டுக்காசு சேத்துவச்சி பவுனுவாங்க
ரோசம்கெட்டு கொல்லுறாங்க மாத்துவழி மெல்லுறாங்க...
சுள்ளிபொறுக்க போயிட்டுவந்தா சும்மாடா
தைபொறந்து நாளாச்சி கைபிடிக்க போறேன்டி
சைகையில நானழச்சா மைவிழியில் பாரேன்டி...
தள்ளிப்போட தடையுமில்ல அல்லிப்பூவே நின்னுகேளு
கள்ளிநீயும் நடைநடந்தா மல்லிப்பூவும் நாணுதடி...
மாசிமகம் போனபின்னே உனைத்தேடி வருவேன்டி
பாசிமணி கோத்துவச்சேன் மனையேறி தருவேன்டி...
குறுத்துநெல்லு அறுத்துவந்து கோணிநெறச்சு வீடுவரட்டும்
மறுத்தமாமன் உறுதிநிக்க நிலைதாண்டி நீவாடி...
தூவானம் சாரல்சிதற தொலைவிலாடும் தோகைமயிலாய் என்காதல் ஏற்றுதனை அருகேவந்து அணைத்தவளே
ஆவாரம் பூக்கள்உதிர அலைததும்பும் குகைகொண்ட குறுகுளத்தை குருகுலமாய் மாற்றியெனை மகிழ்வித்தவளே...!
பாலாடை பதுமைநீயா தேனாடை கொய்தகிளையா பொன்னாடை போர்த்திநிற்கும் பன்னாட்டு வணிகன்சிலையா...!
மேலாடை படர்ந்துகொண்ட கார்மேகக் கூந்தலதில் நல்வாடை நான்முகர இடைக்காலத் தடையா...?
நாவாடலில் நளினம்குறையா திசைநான்கும் திரும்பத்தடையா
இதழாடலில் இன்பம்மிகையா இமைகளிரண்டும் இசையத்தடையா...?
தடம்புரளும் என்மனதை தயங்காது அனுதினமும்
வடம்பிடித்து வலம்வரும் வாழ்க்கைக்கு சொந்தக்காரியா...?
யாரடி நீ...?
பேரரசன் போர்கொடியா தில்லை நடராசன்கண்ட கற்சிலையா
வேரமைத்த தமிழ்மண்ணில்
முல்லை மனம்வீசும் பொற்கொடியா...!
மறுகியஅமுதினில் மலர்ந்தவளா இல்லை உருகியமெழுகினில் உயிர்த்தவளா
இறுகியமனதினில் உறைந்தவளா கொல்லை வருடியதென்றலில் வளர்ந்தவளா...!
உறுபசி தருவித்த நறுமுகையா பிள்ளைத் தமிழ்சிந்தும் முழுநகையா
நறுமணம் தெருவீசும் பருவமலரா
எல்லை எழில்தங்கும் நெடுஞ்சுவரா...!
#ஓவியத்திற்கு_ஒப்பனையாய்_அவளும்
#காவியத்திற்கு_கற்பனையாய்_நானும்