எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிறவியென பிதற்றியதில்லை துறவியென வாழ்ந்ததில்லை பறந்துசென்று பசியாற்ற படைத்தவனும்...

பிறவியென பிதற்றியதில்லை துறவியென வாழ்ந்ததில்லை
பறந்துசென்று பசியாற்ற படைத்தவனும் மறுத்ததில்லை...

அன்றாடம் ஆங்காக்கே பசியாரும் அதற்கும்மேலாய்
அமாவாசையில் அசுரப்பசியும் அடங்கிப்போகும்...

கூவும்குயிலும் எங்கள்நிறமே குரல்மட்டும் வேறுசாதி
கூட்டம்கொண்டு நாங்கள்கரைய நாட்டிலுண்டு பலசெய்தி...

அரசமரம் குடிகொண்டோம் அகிம்சைவழி மெல்லநடந்தோம்
முரண்பாடு இருந்ததில்லை முள்படுக்கையில் நாங்கள்வசிக்க...

பாட்டிவடை திருடியதால் பாவப்பட்ட பிறவியானோம்
பாவம்செய்தவர் படையலிட்டாலும் பகிர்ந்துண்டு உயிர்த்திருந்தோம்...

மரக்கிளையோ மண்ணில்விழ சுள்ளிக்கூடும் சிதறிப்போக
கள்குடித்த கயவன்போல் கண்களடைத்து கரைகின்றோம்...

அடைகாத்த முட்டைகளெல்லாம் விடைகாணும்முன்னே விதிவந்து
படையெடுப்பு நிகழ்ந்ததுபோல கடைநிலையில் உடைந்துப்போனதே...!

ஆளான குஞ்சுகளெல்லாம் அதன்வழி பயணிக்கயிலே
மீளாத எங்கள்நெஞ்சம் பாழாகிப் போய்விடுமோ...?

நாள் : 10-Oct-17, 10:11 pm

மேலே