கிராமத்து காதல்

தைபொறந்து நாளாச்சி கைபிடிக்க போறேன்டி
சைகையில நானழச்சா மைவிழியில் பாரேன்டி...
தள்ளிப்போட தடையுமில்ல அல்லிப்பூவே நின்னுகேளு
கள்ளிநீயும் நடைநடந்தா மல்லிப்பூவும் நாணுதடி...
மாசிமகம் போனபின்னே உனைத்தேடி வருவேன்டி
பாசிமணி கோத்துவச்சேன் மனையேறி தருவேன்டி...
குறுத்துநெல்லு அறுத்துவந்து கோணிநெறச்சு வீடுவரட்டும்
மறுத்தமாமன் உறுதிநிக்க நிலைதாண்டி நீவாடி...