என் கண்னே கண் உறங்கு

நீ விழி மூடி உறங்க
என் உயிர் எடுத்து விரித்து
மெத்தையாக்குவேன்..

என் இதயத்தை
தலையணையாக்குவேன்..

குளிருக்கு இதமாய் இருக்க
என் தேகத்ததை போர்வையாக்கி
உந்தன் பூமேனி மூடுவேன்..

நீ கண் அயர உன் காதோரமாய்
என் மூச்சுக்காற்றின் சூடு சேர்த்து
நான் உனக்காக வடித்த
கவிதைகள் ஓதுவேன்..

உன் தலை முடி கோதி
தாலாட்டு பாடுவேன்..

உனது கண்கள் மூடும் வரை
எனது கண்கள் மூடாது
நீ உறங்கும் வரை அல்ல
என் உயிர் போகும் வரை..!

❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (26-Jan-18, 8:50 pm)
பார்வை : 593

மேலே