முக்கிய உலகச் செய்திகள்

செய்தி: ருஷியாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் ஓயாத சண்டை
குறும்பு செய்தி: இதென்ன பெரிய விஷயம், கடலில்கூடத்தான் ஓயாமல் அலைகள் மோதிக்கொண்டே இருக்கிறது.
&&&
செய்தி: சட்டவிரோதமாக அமரிக்காவில் வசிப்பவர்களை அதிபர் ட்ரம்ப் நாட்டைவிட்டு வெளியேற்றிக்கொண்டிருக்கிறார்.
குறும்பு செய்தி: நாமும் கூடத்தான் நம் உடலுக்குத்தேவையில்லாத பொருட்களை தினமும் வெளியேற்றிக்கொண்டிருக்கிறோம்.
&&&
செய்தி: இன்று இந்தியாவில் லஞ்சமும் உழலும் மிகவும் அதிகரித்துவிட்டன.
குறும்பு செய்தி: ஏன் அதிகரிக்காது? அன்றைய நாற்பது கோடி ஜனத்தொகை இன்று நூற்று நாற்பது கோடி ஆகிவிட்டது.
&&&
செய்தி: ஐரோப்பாவில் உள்ள ஹாலந்து நாடு, தொடர்ந்து எட்டாவது முறையாக உலகில் அதிக மகிழ்ச்சி உள்ள நாடு எனும் பெயரை பெற்றிருக்கிறது.
குறும்பு செய்தி: அப்புறம் என்ன, வாங்க போய் ஹாலந்து நாட்டில் குடியேறி அங்கேயே செட்டில் ஆகிவிடலாம்.
&&&
செய்தி: இந்திய வம்சாவளியிரான சுனிதா வில்லியம்ஸ் 321 நாட்கள் விண்வெளியில் தங்கி வந்தார்.
குறும்பு செய்தி: ஒரு பத்து லட்சமாவது புரட்டவேண்டும்னு சொன்னா, குறைந்தது 2325 நாளாவது அவங்க விண்வெளியில் தங்கி வந்திருக்கணும்.
&&&
செய்தி: நேற்று நான் என் நாலு சக்கர வாகனத்தை ரோட்டில் (ஓரத்தில்தான்) நிப்பாட்டினேன். சாயங்காலம் மொபைல் போன்ல, ஆர்டிஓ காரங்க ஆயிரம் ரூபாய்க்கு சல்லான் அனுப்பிச்சிட்டாங்க.
குறும்பு செய்தி: சல்லான் போடப்போறாங்கன்னு தெரிஞ்சிருந்தா வண்டியை நடு ரோட்டிலேயே நிப்பாட்டியிருக்கலாம். வண்டிக்கும் கொஞ்சம் பேரும் புகழும் கிடைத்திருக்கும்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (24-Mar-25, 12:22 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 13

சிறந்த நகைச்சுவைகள்

மேலே