அவள் என்றும் மலரும் புது மலர்
காலையில் உன்முகம் கண்டேன்
அலர்ந்த செந்தாமரைப் பூப்போல்
அந்தியில் பார்த்தேன் அல்லிப்பூப்போல்
இரவில் பார்த்தேன் நீல வான தாமரையாய்
இப்படி பார்க்க பார்க்க பரவசமூட்டும்
புது மலராய் என்மனதில் புகுந்தாய்
உன்னை மறந்து ஒரு கணமும் வாழ
முடியாது வா கண்ணே நாம் ஒன்று சேர்வோம்
வாழ்வில் கல்யாண இன்பம் எய்திடவே