தம்பு - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : தம்பு |
இடம் | : UnitedKingdom |
பிறந்த தேதி | : 17-Jul-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 19992 |
புள்ளி | : 2870 |
பருவத்தின் வாசலில்
பாசாங்கு மனப்பரப்பில்
பாதியாகிப் போன
பாவையென் நிலையறிவாயா. . .
உருவத்தின் செழிப்பில்
உள்ளார்ந்த களிப்பில்
உன்னைத் தொலைத்து
உறைந்து போகிறாயா. . .
நெடுநாள் ஆசைகளை
நெஞ்சினில் புதைத்து
நேசக்கரங்களை தினம்
நோக்கியே அழைக்கிறேன்.
ஆதவனுள் பனியாக
அமிழ்ந்திட ஆசையுண்டு.
ஆகாயம் பூமிக்கும்
அளந்திட எண்ணமுண்டு.
கொஞ்சம் காதல்
கோபுர நிழலாய்
காவல் கொடு போதும்
கன்னியின் மனச்சிறையில். .
- நெல்லை ஏ.எஸ்.மணி-
மாவீர செல்வங்களே.....!!
கொடிய பகையழித்து
கொடிபறந்த
தேசத்திலே
கூடிநின்று
குள்ளநரிகள்
கூத்தடிக்குது.....இன்று....!!
தன்னுயிரை
நம்முயிராய்
களத்திலே
தந்த வீரன்
நம்
தலைவன்
தந்த
மாவீரன்.....!!
காலத்தால்
அழியாத
காவிய
நாயகர்கள்
உங்களை
காலமெல்லாம்
நாம்
மறவோம்.....!!
மண்ணுக்காக
வித்தாகிய
உங்களை
விழிநீரில்
நேசிக்கிறோம்.....!!
வாழும்வரை
சுவாசிக்கிறோம்.....!!
ஈழத்தின்
இன்றய
இழிநிலை
கண்டு..... இதயம்
வெடிக்கிறது.....
ஈழம்
கண்ட
இன்னல்களை
மறந்தே
போன
இனம் கண்டு......!!
தீபத்தின்
சுடரில்
உங்கள்
வீரத்தின்
விம்பம்
விழிநீரை
ஊற்றுதே.....!!
தாய்மண்ணைத்
ஏதோ ஒரு
மூலையில் வாழ்கிறேன்
கண்முன்னே
உலகை
ரசிக்காமல்.....
தேடும் கண்கள்
தவிக்க
நீ..... வாழும்
தேசம் தெரியாமல்
என்
வாழும் காலம்
சோகமாய் மாறியதே.....!!
தேடித்
தேடி
தேய்பிறையாய்
தேய்கிறேன்......நம்
காதல்
நினைவுகளோடு
மெல்லச்
சாய்கிறேன்......
உன்நினைவில்.....!!
காதல்
ஏதோ
சொல்லுதடி
காரணம்
புரியாமல்
கொல்லுதடி.....
என் ஜீவன்
உன்னை
மறக்காது
மரணிக்கும்
வரை.....!!
தெய்வங்களும்
வஞ்சித்தே
போனது.....
வாழ்க்கையில்
சோகங்கள்
நம்மை
மிஞ்சுதடி....
என்னுயிரும்
சாவுதனை தொட்டுத்
தொட்டு
திரும்புதடி.....
உன்னோடு
வாழவே
உயிரும்
விரும்புதடி....!!
துன்பங்களை
மட்ட
வெள்ளிநிலா
விளக்கேற்றும்
நேரம்.....விழியெல்லாம்
வேதனையால்
ஈரம்.....விரட்டும்
துயரம்
மிரட்டிவிடு
அன்பே என்துயரம்
கொன்றுவிடு......!!
தனிமையின்
வடுக்களை
அடுக்கிக்கொண்டே
போகிறேன்.....
அடுத்தவர்
அனுதாபம்
பெறாமலே.....!!
அனுதாபத்தை
பெறுவதல்ல
வாழ்க்கை
அனுபவத்தை
பெறுவதே.....உன்
அன்பில்
என்னைத்
தொலைத்து
நிம்மதி
இழந்து
வாழ்கிறேன்.....!!
கண்ணுக்குள்ளே
சுமந்தேன்.....
மண்ணுக்குள்ளே
போகும்வரை
சுமப்பேன்.....!!
இமை கூட
சுமைதானடி
இணையாமல்
நகரும்
ஒவ்வொரு
கணமும்.......!!
உன்னைக் கொல்லும்
தனிமைதான்
என்னையும்
கொல்லுது.....ஆனாலும்
உள்ளம்
ஏதேதோ
உன்னுயிர் சுமந்தே
சுகமானது.....!!
கவி படிக்கும்
கவிஞர்
எல்லாம்......வீழ்வதில்லை
காதலில்.....உன்னாலே
உன்
கண்ணாலே
கவியெழுத நானும்
வந்தேன்.....!!
இதயம்
துடிப்பது
இயல்புதான்.....
உனக்காக
மட்டுமே
துடிப்பேன்
என்று.....மாறியதுதான்
காதலின்
பரிணாமம்
என்றானது......!!
ஓசை இன்றி
ஒவ்வொரு
இரவும்
கண்ணீரின்
காணிக்கை......
உன்னோடு
சேர்ந்திடவே
ஆண்டவனிடம்
வார்த்தைகள்
வலுவிழந்து
போனது.....
நிழல்
படங்களின்
நிஜங்களை
அறியாமல்
இந்த நிமிஷங்கள்
நரகமாய்
என்னுள்
மாறிப்போனது......
மாற்றிப்போனது
யார்?????
நிஜமா அன்பே
இது
நிஜமா....என்றேதான்
வினவுகிறேன்
விடிகாலை
பொழுதையும்
விடைபெறும்
நாளையும்
பார்த்து......!!!!
மாலை
வாங்கிய
மகிழ்ச்சியில்
உன்
மேனி
இன்னும்
சிவந்துதான்
போனதா?
வெள்ளி மலரே
உன்
காலடி
சேரும்.....
வெள்ளிக்கொலுசும்
அள்ளிக்கொட்டும்
அழகே
அம்சம்தான்......
நீ......பிரம்மனின்
படைப்பில்
சிறப்பம்சம்தான்.....!!
செவ்விதழ்
பூவே.....
உன் சிவப்பழகில்
சிறுவண்டாய்
நானும்
தேனுண்ணும்
நினைப்பில்
சுற்றி
வ
பீட்டா ஆதரவாளர் ராதாராஜன் மீது நடவடிக்கை எடுக்கும் வரை பகிருங்கள்
ராதாராஜன் கூறியிருக்கும் வார்த்தை தமிழர்களையும் தாண்டி ஒட்டு மொத்த இந்தியர்களையும் களங்கப்படுத்தும் விதமாக உள்ளது
இன்று மெரினாவில் கூடும் அன்பும் பண்பும் நாட்டுப்பற்றும் தேசப்பற்றும் மிக்க ஒரு எழுச்சி சக்தியை இவ்வாறு கூறும் இவர்
நாளை தன் அமைப்பிற்கு ( பீட்டா ) எற்படும் சிக்கலுக்காக நியாயம் கேட்டு அந்த அமைப்பை சார்ந்தவர்கள் ஒன்றுக்கு கூடி ஆர்ப்பாட்டம் செய்தால் அப்போது அவர்களும் இத்தகைய சொல்லிற்கு ஏற்றவர்களா இருப்பார்கள் என்று ராதா அவர்களே கூறுவது போல் உள்ளது
ஆகையால் ஒட்டு மொத்த இந்தியர்களை இழிவுப் படுத்தி பேசியதற
மனமே மனமே
இந்த
மௌனமேன்
உனக்கு....?
உன் மௌனங்கள்
கலைத்திடு.....என்
உயிரில்
சந்தோசம்
கலந்திடு......!
பார்வையால்
தாக்கிப்
போகிறாய்.....
வாழும் காலத்தை
வீணாக்கிப்
போகிறாய்.....
காலங்கள்
கனியுமென்று
நம் காலங்கள்
தொலைகிறதே......!
உன்னில் காமம்
வைச்சு
சுற்றவில்லை....
சாதி மதம்
பார்க்கவில்லை.....
அந்தஸ்து
அந்தப் பக்கம்
போகவே
இல்லை.....சாதாரண
வாழ்க்கையை
சந்தோஷமாய்
உன்னோடு
வாழ......உன்
வாழ்க்கையை
கேட்கிறேன்......
காதலுடன்......!
உன்னோடு
மலர்ந்த
காதல்......
உன்னைச்
சேர்ந்தால்
மட்டுமே
வாசம்
வீசும்.....இல்லையேல்
கருகி விழுந்து
மரத்தடியில்
சருகாகும்.
என் உலகம்
உன் கருவில்....நலம்
தானே
என்னவளே.....?
இவன் மனமும்
பிள்ளை மனம்.....பிள்ளையின்
நினைவுகளில்
மூழ்கி......!!
இப்போதே
ஊஞ்சல்
கட்டி
ஆடுதடி.....கோடி
சந்தோசம்
கூடுதடி......!!
மழலைச்
சிரிப்புக்கள்
மனசில்
இப்போதே
இடம்
கேட்டு....அடம்
பிடிக்குதடி......!!
மருத்துவங்கள்
என்ன
செய்தாலும்....மனம்
நிறைந்த....மகிழ்ச்சி
மனம்
திறந்த
பேச்சில் உண்டாகுமே.....!!
அழகான வாழ்க்கை ஆனந்தமாய் - போட்டி கவிதையில் என் கவிதைக்கு இரண்டாம் பரிசு வந்துள்ளது.
o என் கவிதையை வாசித்து வாழ்த்திய, கருத்து வழங்கிய எல்லா தள தோழமைகளுக்கும் என் உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
o வாய்ப்பளித்த தம்பு தோழருக்கும், போட்டி நடத்திய அனைத்து தள தோழமைகளுக்கும், எழுத்து குழுமத்துக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பு:
எனது பரிசு தொகையை தமிழ் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு / தளத்தின் சேவைகளுக்கு அளித்து விடுகிறேன். தயவு செய்து இந்த அன்பளிப்பை என (...)
நண்பர்கள் (271)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

அருணன் கண்ணன்
கிருஷ்ணகிரி

டாக்டர் நாகராணி மதனகோபால்
திருவண்ணாமலை
