அம்மா நீ =கடவுள்
அம்மா !
ஆயிரம் ஆயிரம்
விட்டில் பூச்சியாலும்
அணைக்க முடியாத
அன்பின் மெழுகுவர்த்தி நீ !
காலை காப்பியில்
தொடங்கி
இரவு போர்வை போர்த்துவது வரை
எத்தனை எத்தனை
பணிவிடைகள்
செய்வாய் நீ !
நான் காலையில்
கிளம்பும் போது
உன் பரபரப்பு
பம்பரத்தை போட்டிக்கு அழைக்கும் !
வேண்ணும்மா...............
சொன்னால் போதும் ,
எனக்காய்
பாற்கடலை கூட
பரந்தாமனிடம் கடனாய் கேட்பாய்!
பசிகிதுமா ......,
சொல்லி முடிப்பதற்குள்
பல வகைகளை
பத்து நிமிஷத்தில்
பரிமறுவாய்!
காய்சல் வந்து
நான் படுத்தால்..............!
கஞ்சி கூட உப்பு கரிக்கும்
உன் கண்ணீர் பட்டு !
அம்மா ...,
காசு இல்லமா ...!
தாமா!ன்னு
கேட்டால் ,இதே வேலடா உனக்கு !
திட்டிகிட்டாவது
கடன் வாங்கி தருவாய் !
வாத்தியார் திட்டி
வாடி போய் இருந்தால்
தேடி போய்
சாபம் கொடுப்பாய்!
தேங்கா மடையன்னு
பேரு கூட வைப்பாய்!
பரிச்சை இல்
பெயில் ஆனால்
பக்கத்துக்கு ஊரு
ஜோசியரை பார்த்து
பரிகாரம் செய்வாய் !
அப்பப்பா..............!
எனக்காய்
நீ வாழ்வில்
ஓடும் ஓட்டம்
p .t உஷாவையே
பின்னுக்கு தள்ளும் ..!
கவலையில்
நான்
கரைந்து போகும் போது
"நீ கவலைபடாதடா !
அம்மா இருக்கேன்ல "!
என்று சொல்லி
அடிமனசிற்கு
பதியம் போட
உனக்கு மட்டுமே தெரியும் !
எப்படியம்மா ...............
எனக்காகவே வாழ்ந்து
எனக்காகவே உழைத்து
எனக்காகவே எல்லாவற்றையும்
துறந்து
இருக்க முடிகிறது உன்னால் ???????
யார் சொன்னது
நீயும் கடவுளும் ஒன்று என்று ?
யார்ரோடும் ,எதோடும்
ஒப்பிடவே முடியாத
கடவுளுக்கே கடவுள் நீ !
உனக்கு தெரிமா!
உன் கருணையை
பார்த்து
கடவுள் உன் மீது
பொறமை படுவது !
எதை பார்த்துமே
ஏங்காத கடவுள்
உன் தாய்
பாசத்தை கண்டு
ஏக்க பெருமூச்சு விடுவது ...!
அம்மா ......
இதுவரை
உனக்காய் எதுவும்
செய்ததில்லை !
அப்படியே
நான் செய்தாலும்
உன் அன்பை
அது
மிஞ்ச போவதும் இல்லை !