மனமே மனமே

மனமே மனமே
இந்த
மௌனமேன்
உனக்கு....?
உன் மௌனங்கள்
கலைத்திடு.....என்
உயிரில்
சந்தோசம்
கலந்திடு......!

பார்வையால்
தாக்கிப்
போகிறாய்.....
வாழும் காலத்தை
வீணாக்கிப்
போகிறாய்.....
காலங்கள்
கனியுமென்று
நம் காலங்கள்
தொலைகிறதே......!

உன்னில் காமம்
வைச்சு
சுற்றவில்லை....
சாதி மதம்
பார்க்கவில்லை.....
அந்தஸ்து
அந்தப் பக்கம்
போகவே
இல்லை.....சாதாரண
வாழ்க்கையை
சந்தோஷமாய்
உன்னோடு
வாழ......உன்
வாழ்க்கையை
கேட்கிறேன்......
காதலுடன்......!

உன்னோடு
மலர்ந்த
காதல்......
உன்னைச்
சேர்ந்தால்
மட்டுமே
வாசம்
வீசும்.....இல்லையேல்
கருகி விழுந்து
மரத்தடியில்
சருகாகும்......!

என் ஜீவனில்
கலந்த
ஜீவனே.....
என்னை
வாழவைக்கும்
இறைவனே......
உன்னை இன்றி
யாரை
இவன்
தொழுவேன்?

காதலுடன்
தம்பு......!
கடைசிவரை
நம்பு.......!

எழுதியவர் : thampu (21-Sep-15, 10:51 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : maname maname
பார்வை : 160

மேலே