Ravisrm - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : Ravisrm |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 01-Mar-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Apr-2012 |
பார்த்தவர்கள் | : 5199 |
புள்ளி | : 2156 |
தோல்வியில் வசிக்கிறேன்
துவண்டுவிடாமல் அதையே
வெற்றியாக நினைக்கிறேன்
அதன் மூலம் பலப் பாடம் நான் கற்றுக் கொள்ள .
Ravisrm
I AM IS BACK
உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனோ
எங்கும் நீயாகி என்னை வென்றாயோ
மண்ணில் உன்னைத்தான் காண காக்கிறேனே
என் மேல் நீயும்தான் மழையாய் பெய்தயோ
நெருங்கி வந்தாலே விலகி செல்கிறாய்
என் நெஞ்சம் தாங்காமல் உன்னை தேடுதே
வீசும் வாசம் போல் வாசல் சேராயோ
வாடும் என் நெஞ்சில் பாதம் பதிப்பாயோ.
எழுத்து
ரவி சுரேந்திரன்
நான் தேடாத துணை
என்னை தேடி தொடர்ந்தது !
நான் வாடி போன நாட்களிலும்
என்னை தேடி அணைத்து ஆறுதல் சொன்னது !
துன்பங்களிலும் இன்பங்களிலும் எனக்கு சரிசமமாக நின்றது !
நான் தூங்காத இரவுகளிலும்
தன் துக்கத்தை மறந்து உரையாடியது !
நான் இறந்து போனாலும் என் உடலை தூங்கி சுமந்து அடக்கம் செய்து என் மணல் மேல் பல கண்ணீர் மலர்களை துவிட்டு துவண்டு செல்லும்!
இறுதிவரையான பயணம் நட்பு.
எழுத்து
ரவி சுரேந்திரன்
தாயின் வயிற்றில் பத்து மாதம்
இருந்து வளர்ந்து தாய் பிறப்பு தர
வெளிவந்தேனடி uyir துடிப்போடு
இதயத் துடிப்பாய்- பின் வளர்ந்து
ஆளான நான் முதல் முதலாய் உன்னை
சந்தித்தேன் , உன் பார்வையில் என்னை
இழந்தேன் , ஒரு நொடி என் இதயம் நின்றதடி
மறு நொடியில் மீண்டும் துடித்தது -ஏன்
ஏன் இதயத்தில் நீ புகுந்தாய் ஏன் உயிர்க்குயிராய்
ஏன் உயிரில் கலந்து
உன்னை காண நொடிகள் யாதும்
என் இமைகளின் ஓரம் ஈரப்பதம் ஆகும்
ஆழ்ந்து கிடக்கிறாய் ஆழமாய்
என் விழிகளுக்குளே
என்னை அழவைத்துப் பார்க்கிறாய்
உன் அடர்ந்த பிரிவாலே
தோய்ந்து போய் உள்ளது உள்ளம்
நீ நீண்ட துலைவிலே நிற்கிறாய்
அடியெடுத்து உன் அருகே வந்துக் கொண்டிருக்கிறேன்
ஏனோ நீ மறைந்துக் கொண்டிருக்கிறாய்
என் விழிகளுக்கு தென் படாமல்
ஓய்ந்து போனேன் தேடி தேடி
உடைந்து போனேன் உன்னை நாடி நாடி
விழுந்து போகிறேன் மண்ணில் ஓடி
கலங்கரை விளக்கமாக நான் மாறி
உன் நினைவின் பிம்பமானது என் ஈரமான விழிகள்
எழுத்து
ரவி சுரேந்திரன்
காற்றோடு கலந்தே எங்கும்
நிறைந்திருக்கும் எங்கள் கஷ்டம்
தரையோடு ஒட்டியே காத்திருக்கும் எங்கள் உணவும் உறக்கமும்
பல வீடுகளை காட்டினாலும் எங்கள் நிரந்தர வீடு ஏனோ வீதிதானே
பசிச்சாலும் படிப்பில்லாவிட்டாலும்
பணம் தேடி ஓட மாட்டோம்
பட்டினியை வயிற்றில் மறைத்துக் கொண்டு
உதட்டில் வறுமையை புன்னகையாகி
வாழ்கிறோம் ஒரு சாலை ஓரமாக.
எழுத்து
ரவி சுரேந்திரன்
நான் எதை செய்கிறேனோ இல்லையோ
உன்னை நினைப்பதை என்னைப்போலவே என்னுள் வைத்திருக்கிறேன்
மாற்றம் இன்றி நானும் இப்படியே இருக்க
மாறாமல் நீயும் அப்படியே பிடிவாதம் பிடிக்கிறாய் பெண்ணே.
எழுத்து
ரவி s
உன் மீது
காலம்
வரைந்த
கோடுகள்
தழும்புகளாய்
நீ மட்டும்
ரகசியங்களை
உன்னுள்
புதைத்தபடி
என்னவளுக்கு
நீதான்
கற்றுத்
தந்தாயோ
ஒன்றுமே
நடவாது
போல்
இருப்பதற்கு
ஆனாலும்
நீ மட்டும்
ஜோடியாய்
நான் மட்டும்
தனித்து..,
கவிக்கோ பவள விழா மற்றும் கவிக்கோ கருவூலம் வெளியீட்டு விழா
இப்படி ஒரு பூ போர்வையும், கிரீடமும் தேவையா? கோவிலில் கூட பார்த்தது இல்லையே?
எவ்வளவு பூக்கள் waste ஆகி விட்டது👹👺😡
மருத்துவனயிலே பாரு பச்சிளம் குழந்தைகள் கதறுவதை காதால் கேளு
இது தொற்று நோய் இல்லை
அதை விட அதிகமாக பரவும் புகையிலை புற்று நோய் பாரு
உபயோகிப்பவன் நீ என்றாலும் அருகிலிருக்கும் ஒன்றும் அறியாதவர்கள் மரணமடைவது நாளுக்கு நாள் வேதனை இது என்ன கொடுமை நீயே உன் மனதை கேளு.
சுடிதார் அணிந்த பெண்ணே உன் முகம் காட்டு
என்னுடன் நின்று ஒரு வார்த்தை பேசு
கூப்பிட கூப்பிட செல்கிறாயே
நான் செல்லமாக ஒன்று சொல்லவா
இல்லை உன்னை என் உள்ளம்மாகியத்தை சொல்லவா அன்பே.