தோழமையுடன் ஹனாப் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தோழமையுடன் ஹனாப் |
இடம் | : இலங்கை - சாய்ந்தமருது |
பிறந்த தேதி | : 23-Oct-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Sep-2013 |
பார்த்தவர்கள் | : 646 |
புள்ளி | : 113 |
வழக்காறுகள் என்று கூறி,
கிணற்றுக்குள் தத்தளிக்கும்
தவளைகளாய் மாறி,
பாசி வேர்களை மட்டும்
விருட்சங்கள் என்று எண்ணி,
வட்டத்திற்குள் நின்று வட்டமிட்டு
புகழ் கூவி ஓய்ந்துவிட்டு,
மரித்துப்போகும் மானிடப்பிழைப்பில்
சிக்காமல் சிகரம் வெல்ல,
வாய்ப்புக்களுக்காக காத்திருக்கும்
வாலிபன் நான்....
மழை எப்படி இருக்கும்..??
பழைய காதலி போல
முகச்சாயல் கொஞ்சம்
மாறி இருக்குமோ..?
பொறுத்துப் பார்க்கலாம்
மழை பெய்யும் வரை.....
ஓடு போட்ட வீட்டின்
ஓட்டை வழியே
சொட்டு மழை ரசித்தவனுக்கு,
சொட்டு மழையை
ருசிக்க முடியவில்லை..!!
யாருக்காக இப்போது அழுவது
கண்ணீர் அளவு கூட
தண்ணீர் இல்லையே...!!
ஏய் மழைக் கஞ்சனே
அடைமழை கூட
பெய்ய வேண்டாம்,
அட கொஞ்சம் மழையாவது
பெய்யலாமே,
பாவம் பச்சைப் புல்
வறட்சியில் சிவப்பாகி விட்டது..!!
குடிசை இல்லாதவனால்
கூனிக் குறுகி வாழ முடியும்,
குளத்து மீனுக்கு
நீந்துவது தவிர
என்ன தெரியும்...??
தண்ணீர் வற்றும்
நாள் வருமென்பதால்
நடக்கப் பழகி
மரத்தை வெட்டும் மனிதன்
நிழலை தேடி அலைகிறான்
நிழலை தேடி அலையும் மனிதன்
மரத்தை நட மறக்கிறான்
இயற்கையை அழிக்கும் மனிதன்
இயற்கையை பாதுகாக்க பேசுகிறான்
இயற்கையை பாதுகாக்க பேசும் மனிதன்
அதை செயல்படுத்த மறக்கிறான்
இயற்கை ஆக்குவதை அழிப்பது
மனிதன் வேலை
மனிதன் அழிப்பதை ஆக்குவது
இயற்கை வேலை
அழிப்பதற்கு எல்லை இல்லை
ஆக்குவதற்கு எல்லை உண்டு
' தான் பறித்த குழி தனக்கேவென அறிந்தும்
என் பிறருக்கு கான்கேடு சூல்கிறான் '
மனிதன் தேடிக் கொண்ட
வினை அவனையே தாக்கும்
இயற்கை அனர்த்தம் என்ற
வடிவில் ......
ஒரு நாள் கணித ஆசிரியர் ஒருவர் எல்லா எண்களையும் கலந்துரையாடலுக்கு அழைத்தார். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சமயம் பூஜ்யம் அங்கு இல்லை என்பது தெரியவந்தது. பூஜ்யம் ஒளிந்து கொண்டது, மற்ற எண்கள் அதை ஆசிரியரிடம் கொண்டு வந்தன.
ஆசிரியர், ""ஏன் ஒளிந்து கொண்டாய்?'' என்று கேட்டார்.
""நான் வெறும் பூஜ்யம்தானே. என்னை பற்றி யார் கவலைப்படுவார்கள்? எனக்கு மதிப்பே இல்லையே,'' என்று வருத்தமாக கூறியது.
புன்னகைத்த ஆசிரியர், "ஒன்று' என்ற எண்ணை முன்னே வரச்சொன்னார். குழுவினரைப் பார்த்து, ""இதன் மதிப்பு என்ன?'' என்றார்.
""ஒன்று!'' என்றன மற்ற எண்கள்.
அடுத்து பூஜ்யத்தை அதன் அருகில் நிற்கச் சொன்னார்.
""இப்போது?'
உன்னைக் காணாது
தவிப்பில்
துவண்டுதானடா போகின்றேன் நான்!
ஜன்னல் கம்பிகளின் வழி
வெளித் தெரியும் நீலவானமெங்கும்
உன் பிம்பங்களே!
என் வீட்டு வெள்ளை ரோஜாவும்
மலரவே இல்லை
உன் வரவு காணாததால்!
மணச் சேலையில் என்
மனம் மறைத்து
மணம் காணும்
பேதை நானென்று
எண்ணித்தானே விட்டுச்சென்றாய்
என்னை?
காத்திருக்கிறேன் இன்றும் மணப்பெண்ணாகவே!
உனக்காக.....
என் கண்ணீர் துடைக்கவாவது
எனைத் தேடி வருவாய் என்ற
நம்பிக்கையில் தான் அழுது கொண்டிருக்கிறேன்..!
உன் கல்லறைக்கு முன்னால்...!
நீ விழி தேடிய பொழுதுகளில்
நான் பார்வையற்றிருந்தேன்,
உன் உயிர் பேசிய நாட்களெல்லாம்
நான் சடலமாயிருந்தேன்..!
உன் மீது மலர் மாலை விழுந்த போது தான்
என் காதல் மொட்டுக்கள் விரியக் கண்டேன்,
கடல் நீரே வற்றிய பின் தான்
என் தாகம் உணர்ந்து கொண்டேன்..!
நான் கொண்டு வந்த நட்சத்திரங்களை பதிப்பதற்கு
ஓர் வானம் இன்றித் தவிக்கிறேன்,
கழுத்தில் போட வேண்டிய மலர் மாலையை
உன் கல்லறைக்குச் சமர்ப்பிக்கிறேன்..!
இன்னும் எனைத் தேடி வருவாய் என்ற
நம்பிக்கையில் தான் அழுது கொண்டிரு
நிறப்பூச்சுக்களை வாங்கி விட்டு
சுவர் தேடி அலைகிறேன்...
முழுவட்ட நிலவுக்குத்தான் தெரியும்
அந்த சுவர் ஆகாயம் என்று...
நேர்வழி என்றுரைத்துவிட்டு
கற்களுக்குள் கால் மிதித்தேன்...
என் மனதுக்குத்தான் தெரியும்
அது புறமுதுகென்று...
கையால் செய்ய நினைத்ததை
கனவுகளில் மட்டும் முடிக்கிறேன்...
வார்த்தைகளில் வாய்மை பேசி விட்டு
எண்ணங்களில் வரம்பைத் தாண்டுகிறேன்...
உடல் இங்கு நானாக,
உள்ளம் யாரோ என்றாக,
ஜடம் மட்டும் நான் கொண்டு,
பிணம் போலே வாழ்கின்றேன்...
ஊருக்கு நான் தான் காவல்காரன்,
என்னைச்சுற்றித்தான் காவல் அரண்கள்...
பல பேர் எனைப் பார்த்து மாறினர்,
எனக்குத்தான் அப்படி யாரும் கிடைக
அவளுக்கு நான் கொடுத்த பூக்கள் வீணாகவில்லை .. இதோ கொண்டுவருகிறாள் மொத்தமாக .. என் கல்லறைக்கு.!
நினைத்ததெல்லாம் ஜெயிக்கும் போது
வரும் சந்தோசத்துக்குத் தான் கேட்கிறது,
எங்கோ மூலையில் நடந்து வரும்
தோல்வியின் சத்தம்