fasrina - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : fasrina |
இடம் | : mawanella - srilanka |
பிறந்த தேதி | : 30-Oct-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 09-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 726 |
புள்ளி | : 155 |
நான் ஒரு புத்தகப்புழு . உண்மையையும் கற்பனையும் கலந்து கவிதையாய் எழுத ஆர்வமுடயவள் .க்ரைம் நாவல்கள் மேல் எனக்கொரு பைத்தியம் . .
அவள் யாரோ !
சாலையோரம் குடை பிடித்து
நிற்கும் தேவதை யாரோ !
அவள் கண்களில் ஏன்
கவலை
அவள் மதிமுகம் ஏன்
வாட்டம்
என் தேவதையே ! கலங்காதே
என் ஆத்மா இறக்கவில்லை
என் தேவதையை தேடி
அந்த பாதையோரம்
பல நாள் தவமிருந்தேன்
இறுதியில் கண்டு கொண்டேன்
நான் உன்னை முதல் முறை
கண்ட தோரணையில்
எங்கே உன் குறும்புப் பார்வை
எங்கே உன் இதழோர புன்னகை
எவையுமில்லை
என் புகைப்படம் ஏந்தி
கண்ணீர் சொரிகிறாய்
என் கைகள் அவள்
தலை தடவி ஆறுதல்
சொல்ல எத்தனிக்க
ஐயோ ! முடியாதே
இது உடலில்லை ஆத்மா
உணர வேதனையடைகிறேன்
கருணை உருவம்
உயிரை காக்கும் தெய்வம்
உலகில் உன்னத தொழில்
வகிக்கும் வைத்தியர்
காய்ச்சல் அனலாய்
சுடுகையில் மருந்தை
தந்து தலை தடவும்
தந்தை
உலகில் உயர்வாய்
வைத்தியர் எம்
நெஞ்சில் மிளிர்வது
அவர் நற்குணங்களாலே ....
நற்குணமில்லா வைத்தியரும்
உலகில் இருப்பாரோ !
இருக்கும் என்கிறது
சில மருத்துவமனைகள்
அவனைத் தெரியாது
அவன் குரலும் அறியாது
அவன் முகமும் பார்க்காது
அவன் யாரென
எதுவும் அறியாது
அவனுடன் எனக்கு
கல்யாணம்
அவள் யாரோ !
சாலையோரம் குடை பிடித்து
நிற்கும் தேவதை யாரோ !
அவள் கண்களில் ஏன்
கவலை
அவள் மதிமுகம் ஏன்
வாட்டம்
என் தேவதையே ! கலங்காதே
என் ஆத்மா இறக்கவில்லை
என் தேவதையை தேடி
அந்த பாதையோரம்
பல நாள் தவமிருந்தேன்
இறுதியில் கண்டு கொண்டேன்
நான் உன்னை முதல் முறை
கண்ட தோரணையில்
எங்கே உன் குறும்புப் பார்வை
எங்கே உன் இதழோர புன்னகை
எவையுமில்லை
என் புகைப்படம் ஏந்தி
கண்ணீர் சொரிகிறாய்
என் கைகள் அவள்
தலை தடவி ஆறுதல்
சொல்ல எத்தனிக்க
ஐயோ ! முடியாதே
இது உடலில்லை ஆத்மா
உணர வேதனையடைகிறேன்
வானத்தில் வளைய வரும்
வட்ட நிலாவும் அழகு தான் !
கைக்கு சிக்காத
காற்றும் அழகு தான் !
மலையோடு உறவாடும்
முகிலும் அழகு தான் !
மண்ணை முத்தமிடும்
மழையும் அழகு தான் !
மனதில் நினைத்தவுடன்
இவை அத்தனையும்
மறக்கச் செய்யும் மழலையே
உன் முகம் பேரழகு தான் !
(படித்ததில் பிடித்தது )
என் காதலிக்கு கல்யாணம்
என் கனவு தேவதைக்கு
என் உயிர் நண்பனுடன்
கல்யாணம்
என் காதல் என்னை
அழ வைக்கிறது
என் நட்போ என்னை
சிரிக்க வைக்கிறது
என் நண்பனின் திருமண
நாள் என் காதலின்
பிரிவு நாள்
என் காதலியின் திருமண
நாள் என் நண்பன் என்னை
விட்டு பிரியும் நாள்
நான் என்ன செய்யட்டும்
என் நண்பனின் வாழ்வுக்காக
பிரார்த்திப்பதா ?
இல்லை காதலியின்
பிரிவிற்காக வருந்துவதா ?
ஒரு பார்வை பார்த்தால்
கண்கள் கதை பேசிடுமா ?
கண்கள் பேசும் மொழி
புரியாவிடில் பார்வையின்
அர்த்தம் காதலாகுமா ?
ஓரக் கண் பார்வையில்
வில்லங்கம் இருக்குமா ?
ஒரு நொடிக்கு
பல தடவை திரும்பிப்
பார்த்ததன் அர்த்தம்
விளங்குமா ?
விளங்காவிடில் அவன்
என்னைப் பார்க்கையில்
நானும் ஏன் பார்க்கிறேன் ?
என் பார்வையின் அர்த்தம்
அவனுக்கு புரிகிறதா ?
நான் ஒழிந்து பார்ப்பதும்
அவன் எட்டிப் பார்ப்பதும்
கண்ணாம்பூச்சு விளையாட்டா ?
விளையாட்டெனின்,
பார்வையின் விளையாட்டு
வினையாகுமா ?
பெண்களின் காதல்...!!!
அழகு தேவை உள்ளங்களில் மட்டும்...!
நெருக்கம் தேவை அவனுடன் மட்டும்...!
கஷ்டங்களிலும் சந்தோஷத்திலும் அவன் மட்டுமே அருகில் வேண்டும்...!
சின்ன சின்ன சண்டைகள் கட்டாயம் வேண்டும்...!
சண்டை முடியும் முன்பு அவன் பேசிட வேண்டும்...!
தான் வெட்கபடும் பொழுது அவன் மட்டும் ரசித்திட வேண்டும்...!
சற்று கிண்டலும் செய்திட வேண்டும்...!
பின்னர் செல்லமாக கொஞ்சிட வேண்டும்...!
பரிசுகள் தரும் பொழுது சிரித்திட வேண்டும்...!
தந்து முடித்த பின் சற்று அணைத்திடவும் வேண்டும்...!
பொய்கள் சொல்லும் போது அவன் ரசித்திட வேண்டும்...!
தவறுகளை தண்டிக்கும் பொழுது தந்தையாகவும் மாற வேண்டும்...!
சோகங்களின
Boy :Hello...!!
Girl :Hello சொல்லுங்க.....
Boy : என்னடீ மரியாதையா பேசுர...?
Girl : இன்னோர் பொண்ணுக்கு கணவராகப்
போறவர இப்டி தாங்க பேசனும்
Now You are not mine....
Boy : ஹெய்....!!!
இப்டியெல்லாம் பேசி நீயும் என்ன
வெறுக்காத டீ,,
நான் உன்ன ஏமாத்தனும்னு லவ்
பண்ணதில்ல..
எங்க அம்மா சொல்ர பொண்ண Marriage
பண்ணிக்கலனா செத்துருவாங்கனு
சொல்ரா,,,
Girl : சரிங்க இப்ப நான் ஏதும் சொல்லல,,
கல்யாண மாப்பிள்ளையாய் போய்
ரெடிஆகுங்க...
Morning கல்யாணம் :-(-
but கடைசியா ஒன்னு கேக்குறன்..
நான் ஒரு தடவ ஐ லவ்
யூ சொல்லிக்கிற்றா
ஒரே ஒரு தடவ..? :-'( :-'( :-'(
Boy : ஹெய்...அழாத டீ எனக்கும் அழுக
வருது...
அவள் அழகிதான்.....
..................................................
ஒரு கோடி நட்சத்திரங்களுக்குள்
ஒரு நிலவைக்கண்டேன் .
வியர்வை பூத்தது இதயத்தில்,
மின்னல் கீற்றாய் தோன்றி மறைந்தால்
அப்போதுதான் ,,,,
காதல் பற்றிய உணர்வுகள்
மெல்ல மெல்ல எழுந்து நடக்க
ஆரம்பித்தது என்னுள்ளே...
வெள்ளையும் கருப்பும் வேறு வேறுதான்
காதல் ஒன்றுதானே ;
தனிமையோடு பேச ஆரம்பித்தது மனசு.
அடுத்த திருவிழா வருவதற்குள்
ஆலமரத்தடி என் விலாசமாய் போனது நண்பர்களுக்கு.
அழகியவள் அடுத்த வருகைக்காய்
ஒரு வருடம் சுருங்கிப்போனது
என் காத்திருப்புக்கு மத்தியில்.
உண்மை நிகழ்வு ...
கயல் கண்ணுடையாள்
மயில் இமையுடையாள்
கருங் கூந்தளுடையால்
கொவ்வை இதழுடையாள்
நளின இடையுடையாள்
கிளி பெச்சுடையால்
அன்ன நடையுடையாள்
மயக்க பார்வையுடையாள்
வெள்ளை மனமுடையாள்
அன்பின் உருவுடையாள்
கொள்ளை பொறுமையுடையால்
நீதி நெறியுடையால்
நடக்கும் பாவை அவள் தான்
என் வீட்டு மனையாள்