எது அழகு
வானத்தில் வளைய வரும்
வட்ட நிலாவும் அழகு தான் !
கைக்கு சிக்காத
காற்றும் அழகு தான் !
மலையோடு உறவாடும்
முகிலும் அழகு தான் !
மண்ணை முத்தமிடும்
மழையும் அழகு தான் !
மனதில் நினைத்தவுடன்
இவை அத்தனையும்
மறக்கச் செய்யும் மழலையே
உன் முகம் பேரழகு தான் !
(படித்ததில் பிடித்தது )