உச்சத்தில் நிலைக்கும் நிச்சயம்
தொடரொன்றும் படைத்தார்
கஸலை நாமறிய !
தலைப்பினும் அளித்தார்
காட்சிப் பிழைகளென !
கஸல்களை வடித்தனர்
கவிஞர்களும் அறிந்ததை !
கவிதையாய் உருவாக்கினர்
காதல் உணர்வுகளை !
மரபுக்கவிகளும் எழுதினர்
மாறுதலுக்கு கஸலாக !
என்னைப்போல் எளியவரும்
முயற்சித்தனர் கஸலாக !
அகமகிழ்ந்தோம் அனைவரும்
அழகிய படைப்புகளால் !
வழிகாட்டிய ஜின்னாவை
வரிகளால் புகழ்ந்தோம் !
அறிவிப்பும் வெளியிட்டார்
அடுத்து ஹைக்கூவென !
எண்ணத்தில் பதிவிட்டார்
வண்ணத்தில் விதிகளை !
துவக்கிடுவார் ஜின்னாவும்
முடித்திடுவார் அபியும் !
அணிந்துரைப்பார் அகனாரும்
கருத்துரைப்பார் சங்கரனாரும் !
உருமாறுகிறது எழுத்துதளம்
உருவாகிறது கவிச்சுரங்கம் !
உலகத்தில் என்றும் நம்தளம்
உச்சத்தில் வாழும் நிச்சயம் !
வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் !
பழனி குமார்
01.02.2016