சொல்லெல்லாம் கல்லாக
இன்ப சொற்கள் கற்களாய்
கணம் தாக்க
நொடிப் பிரிவால் நானும் அழுதேன்
தினம் வலிக்க
உன் விழி வலையில் அகப்பட்டு
மனம் துடிக்க
நின் முன்னே நிற்கையிலே நிழலும்
நிலவில் பறக்க
உன் மன பால்வழியில் தொலைந்து
என்னையும் மறக்க
வயதைக் குறைத்து நானழுதேன் உன்
மடியில் தவழ்க்க
ஓ...நீயும் கொன்று என்னை உளத்தில் புதைத்தாயடி
ஓ...நீ செல்லும் வரை பார்த்தே நானும்
தவித்தேனடி
மாசி மாத கடுங்குளிரில் நடுங்கி ஆடும் என்னை காக்க வாடி
காதல் வனத்தில் தொலைந்த என்னை
உன்னைக் கொண்டு மீட்க வாடி
இதயக் கிளையில் தவறி விழுந்து தங்கிவிட்ட என்னை பார்க்க வாடி
சொட்டுச் சொட்டாய் உயிரை வடித்து
என்னுள்ளே சேர்க்க வாடி
உன் புன்னகையால் உறைந்து விட்ட என்னை
அனலாய் மாறி கரைக்க வாடி
ஓ...நீயும் கொன்று என்னை உளத்தில் புதைத்தாயடி
ஓ...செல்லும் வரை பார்த்தே நானும்
தவித்தேனடி
எறும்பாய் நானும் மாறிப் போனேன்
கரும்பே உன்னைத் தேடிப் போனேன்
காற்றாய் நானும் மாறிப் போனேன்
முகிலே உன்னைத் தேடிப் போனேன்
துன்பமாய் நானும் மாறிப் போனேன்
நிம்மதியே உன்னைத் தேடிப் போனேன்
சொல்லாய் நானும் மாறிப் போனேன்
பொருளே உன்னைத் தேடிப் போனேன்
செடியாய் நானும் மாறிப் போனேன்
நீரே நீயின்றி வாடிப் போனேன்
இன்ப சொற்கள் கற்களாய்
கணம் தாக்க
நொடிப் பிரிவால் நானும் அழுதேன்
தினம் வலிக்க
உன் விழி வலையில் அகப்பட்டு
மனம் துடிக்க
நின் முன்னே நிற்கையிலே நிழலும்
நிலவில் பறக்க
உன் மன பால்வழியில் தொலைந்து
என்னையும் மறக்க
வயதைக் குறைத்து நானழுதேன் உன்
மடியில் தவழ்க்க.