செல்வா முத்துச்சாமி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  செல்வா முத்துச்சாமி
இடம்:  திருவாடானை,இராமநாதபுரம்
பிறந்த தேதி :  28-Jun-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Dec-2015
பார்த்தவர்கள்:  1785
புள்ளி:  157

என்னைப் பற்றி...

நான் ஒரு கட்டிடப் பொறியாளர்.
தமிழ் மீதும் தமிழ் மொழியின் வரலாற்றின்
மீதும் மித மிஞ்சிய ஆர்வம் மற்றும் பற்றுக்கொண்டோன்.
கவிதை எழுத அவ்வளவாக எல்லாம் தெரியாது.ஏதோ என் மனதில் தோன்றுவதை எழுதுகிறேன்.தவறிருந்தால் சுட்டிக்காட்டவும் தயங்காமல்.

எம்மொழி என்றும் வாழிய வாழியவே !!

என் படைப்புகள்
செல்வா முத்துச்சாமி செய்திகள்
செல்வா முத்துச்சாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Oct-2023 7:13 am

உறக்கத்தை கையில் ஏந்திக் கொண்டு நடந்தேன் இரவில்.
ஒரு பேரொலி காதுகளின் கடைசி வரை பாய்ந்தது.
திசை நோக்கி எண்ணத்தைச் செலுத்திப் போனேன்.
இருளின் திடலில் இம்சிப்பின் மாநாடு நடந்து கொண்டிருந்தது.
தலைமையேற்று உரை வீசிக் கொண்டிருந்தாய் நீ.
அமைதியை கொடுப்போம்;அரவணைத்து நடப்போம் என்று
சூளுரைத்துப் பேசுகிறாய்.
எனக்கு தோன்றுகிறது அப்போது அங்கே
மனதுள்ளே இப்படி-சொல்லோடு நிறுத்தாதே;செய்யடீ என்று.

மேலும்

செல்வா முத்துச்சாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2022 7:34 am

உன் பாதை நீளமானது
இருளும் இடர்களும் ஏராளம் அதில்
உன் கையில் திறச்சுடர் உள்ளது.

உன் பயணம் பெரியது
துரோகமும்,ஏமாற்றமும்
எண்ணிலடங்கா அதில்.
உன் கையில் நம்பிக்கைக் கேடயம் உள்ளது.

உன் உழைப்பு அதிகமானது
உறங்கா இரவும்,உண்ணாப் பகலும்,
ஓராயிரம் தியாகமும் அதில்
உன்னிடம் உறுதிக்கயிறு உள்ளது.

உன் முயற்சிகள் ஏராளம்
கனத்த அடிகளும்,காயங்களும்,
வீழ்ச்சியும் கணக்கற்று அதில்.
உன்னிடம் உடையா மனம் உள்ளது.

உன் இலக்கு உயர்வானது
ஓய்தல்,தேய்தல்,உடைதல்,
சரிதல்,விழுதல் எல்லாவற்றின் மீதும்
நீ பயணம் செய்கிறாய்.
உன் கையில் வெற்றியின் வரைபடம் உள்ளது.

நீ தடைகளை மதிக்கிறாய்
உன் தடைகளிடம் பாடம

மேலும்

செல்வா முத்துச்சாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2019 7:37 pm

அது 1984. இன்றைய விருதுநகர் மாவட்டமும் அன்றைய இராமநாதபுரம் மாவட்டத்திலும் இருந்த கோபாலப்பட்டியில் கூலித் தொழில் செய்தும்,ஆடு வளர்த்தும் பிழைப்பு நடத்தும் குடும்பத்தில் பிறந்தவன்தான் கருப்பையா.வீடு பெரிதென்று சொல்லும்படியாக ஒன்றும் இல்லை.மண்ணால் அகன்ற சுவர்களோடு கட்டப்பட்டு, பனைமர ஓலைகளைக் கொண்டு வேயப்பட்டு,  அடுக்களையைப் பிரிக்க குறுக்காக நான்கடி உயரச் சுவர் கொண்டு தடுக்கப்பட்ட,ஒரு பத்தியுடைய வீடுதான் அவனது.அவ்வீடு ஊரை விட்டுச் சற்றுத் தள்ளியே அமைந்திருந்தது.
இம்மக்களுக்கென்றே தனியே குளம் இருந்தது.இக்குளத்தில் உயர்குலத்தைச் சேர்ந்தவர்களின் ஆடு மாடுகள் தண்ணீர் குடித்தால் கூட,தீட்டு என்று சொல்ல

மேலும்

செல்வா முத்துச்சாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2019 2:36 pm

அவள் இடத்திற்கு இன்னொருத்தி
வர முடியுமா?
ஏழு நாளும் முழுநிலா
பார்க்க முடியுமா?
நீர் அற்ற பெருங்கடல்கள்
காண முடியுமா?
நீலம் இல்லாமல் வானம்
கண் வருமா?
நீர் இல்லாது புவி
மழை பெருமா?
அன்பு இரா காதல்
நெடுநாள் நிலைக்குமா ?

மேலும்

செல்வா முத்துச்சாமி - செல்வா முத்துச்சாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2016 11:43 am

கனலுக்குள் மண் போனால் செங்கலே
மதுவுக்கு மறுபெயர் உன் கண்களே...!
மண்ணுக்குள் உடல் போனால் சாதலே
உயிருக்குள் உயிர் போனால் காதலே...!

மேலும்

தத்துவம் ...! 23-Nov-2016 10:12 am
அட ஏம்பா நீ வேற....ஹா ஹா 22-Nov-2016 8:22 pm
ஞானி போல் பேசுறீங்க தோழரே! 22-Nov-2016 4:56 pm
செல்வா முத்துச்சாமி - செல்வா முத்துச்சாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2016 11:56 am

தன்மொழி தான்மதியான் பின்மொழி பித்தாய்
மதிமயக்கம் நாத்தயக்கம் நன்மொழி நல்கவே
முதற்மொழி தாய்மொழி செழுமை கொழிக்கவே
நம்தாயை மறத்தல் எண்ணுதல் தகுமோ?

மேலும்

நன்றி சகோ.. ஆம். தமிழ் தாய் தானே நமக்கு. 18-Apr-2016 10:53 pm
தமிழை தாய் என்று சொன்ன விதம் நெஞ்சில் உள்ள காதலின் ஆழத்தை சொல்கிறது 18-Apr-2016 5:39 pm
செல்வா முத்துச்சாமி - செல்வா முத்துச்சாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2016 7:52 pm

அசையா நெற்குழை வயலும்;வயலுக் குழைக்கும் வாய்க்காலும்
வாய்க்கால் கொஞ்சும் நீரும்;நீர் கொழுத்த கண்மாயும்
கண்மாய் உறங்கும் நீர் மலரும்;மலர் மயக்கும் தேன் வண்டும்
வண்டு குழுமும் பூக்காடும்;காடு ஈன்ற மென்காற்றும்
காற்றில் கரையும் முகிலும்;முகில் தொடுக்கும் மழையும்
மழை கொடுக்கும் மகிழ்மனமும்;மனதில் ஈரவீரம் உடை மக்களும்
அம்மக்களைப் பெற்ற எம்மூரும்;அவ்வூரைப் பெற்ற தமிழ்நாடும் அவனியில் உயர்ந்ததுவே..!

மேலும்

அருமை நன்பரே. .. 05-Apr-2016 6:20 pm
இது சங்க நூல்களை மேலோட்டமாக படித்த போது சிந்தையில் எழுந்தது. 05-Apr-2016 5:03 pm
அழகான வரிகள்.. கண் முன் காட்சிகள் நிறைகிறது..கவியில் உயிர்..வாழ்த்துக்கள்.. அந்த ஊர் எங்கு இருக்கிறது??? 05-Apr-2016 4:06 pm
அடடே...சொல் வளம் கரைப் புரண்டோடுகிறதே! 05-Apr-2016 3:57 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Feb-2016 5:15 pm

இரு மனங்கள் ஓர் ஆயுளாகும்
உயிரின் அணுச்சேர்க்கை காதல் கருவறை

கண்களால் உணர்வுகள் பேசப்படும்
மெளனத்தில் கவிதைகள் வீசப்படும்
கண்ணீர் சிந்தும் தருண மெல்லாம்
அவனுக்கு அவளும்
அவளுக்கு அவனும்
ஈரம் துடைக்கும் கைக்குட்டை இமைகள்

துருப்பிடித்த ஆணிகள் கொங்ரீட் சுவரில்
அடிக்கப் படுவதை போல அவள் பூக்களை
தொட்டால் என் கைகளில் முட்கள் குத்தும்
நான் கவிதைகள் எழுதினால் என்னவள்
முகம் வெட்கத்தால் சிவக்கும்.

உண்மைக் காதலில் ஆணும் தாயாகிறான்
இதயக் கருவில் பேதை மனதை சுமந்தவனாக...,
பெண் என்பவள் தாய்மையின் பிறப்பிடம்
என்பதால் காதலனை மகனாக அணைக்கின்றாள்.

அவள் ஆடைகள் விலகியிருந்தும்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 11-Feb-2016 5:15 pm
ஈரம் துடைக்கும் கைக்குட்டை இமைகள்---அழகான உருவகம் ! உண்மைக் காதலில் ஆணும் தாயாகிறான் இதயக் கருவில் பேதை மனதை சுமந்தவனாக...,-----புதிய பார்வை ! அவள் ஆடைகள் விலகியிருந்தும் கண்களை மூடிக்கொண்டு காமத்திற்கு தீ வைக்கிறேன்----அசாதாரணக் காதல் அணுகுமுறை ! மொத்தத்தில் ரசனையில் தோய்ந்த படைப்பு! 10-Feb-2016 11:15 pm
உண்மையே! வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 09-Feb-2016 2:16 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 09-Feb-2016 1:44 pm

உழவுத் தொழிலுக்கு நீ வேண்டும்!
விளையும் பயிருக்கு நீ வேண்டும்!
பசிக்கும் வயிறுக்கு நீ வேண்டும்!
உலகை காக்க நீ வேண்டும்!
உயிர்கள் வாழ நீ வேண்டும்!
பசுமை பார்க்க நீ வேண்டும்!
பஞ்சம் போக்க நீ வேண்டும்!
இன்பம் நிறைக்க நீ வேண்டும்!
துன்பம் வெறுக்க நீ வேண்டும்!
ஏரி நிறைக்க நீ வேண்டும்!
எண்ணம் பழிக்க நீ வேண்டும்!
ஏக்கம் போக்க நீ வேண்டும்!
எதிரியும் வாழ நீ வேண்டும்!
அன்னம் உண்ண நீ வேண்டும்
அன்பு தழைக்க நீ வேண்டும்!
அகிம்சை நிலைக்க நீ வேண்டும்!
கண்ணீர்த் துடைக்க நீ வேண்டும்!
காலம் பருவம் நீ வேண்டும்!
சொர்க்கம் காட்ட நீ வேண்டும்
சொத்தே என்றும் நீ வேண்டும்!

மேலும்

ஆம் தோழா.. அளவாய் அழகாய் வேண்டும் அருமை தோழா 27-Jan-2016 3:36 pm
மழையின் அழைப்பு அழகான கலையின் ரசிப்பு 27-Jan-2016 6:40 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) தர்மராஜ் பெரியசாமி மற்றும் 11 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
02-Jan-2016 1:10 am

1.காதல் போர்க்களத்தில் இஸ்ரேல் இராணுவத்தின்
பீராங்கிக் கனை நீ என்பதால் உன்னை வெல்ல
விரும்பாமல் பலஸ்தீன் நாட்டு போராளியாகிறேன்.
******
2.ஆசையாய் நான் வளர்த்த தோட்டமும் காதலை போல்
ஏமாற்றியது.பூக்களை கேட்டால் இலைகளை தருகிறது.
******
3.என் உடைந்த புல்லாங்குழலை வாங்கி பலர்
கவிஞர்களாகிவிட்டார்கள்.நான் வாய் வைத்து
வாசித்தால் உன் தூக்கம்கெட்டு விடுமோ என்ற
ஐயத்தில் இன்று வரை காதலனாகவே வாழ்கின்றேன்.
******
4.என்னவள் நினைவுகளை கனவில் கடன் வாங்க மறுக்கிறேன்.
காதல் கொடுக்கல் வாங்கலில் வட்டி செலுத்த கண்ணீரில்லை.
******
5.நீ எவனை வேண்டுமானாலும் விருப்பத்தோடு மனமுடித்துக்கொள்
உனக்கு பிர

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே! 25-Jun-2017 11:58 pm
மிகவும் அருமை... மறைந்த ஒரு மகத்தான கவியின் கஜல் சாயல் உங்கள் கஜல் கவிதைகளில் காண்கிறேன்... மிக்க மகிழ்ச்சி... 25-Jun-2017 5:38 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே 14-Mar-2017 9:45 am
WOW...VERY NICE 14-Mar-2017 1:07 am

தமிழர்கள் ஆங்கிலப் புத்தாண்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழ் புத்தாண்டுக்கு கொடுக்கிறார்களா?

மேலும்

இல்லை 05-Jan-2016 1:02 pm

எட்டுத்தொகை பொன் வளர்த் தாயே!
நல் நற்றிணை அவற்றினோர் சேயே!
பெற்ற றெடுத்த பாடல் நானூறு
பாடல் முடித்து வகுத்த திணை.

அழிந்து மறைந்த பாடல் செல்ல
எச்சம் விட்ட முழுப்பாடல் இவையே
இருநூற்று முப்பது நான்கு ஆக
அறிந்தார் நூற்று எழுபத் தைந்து

தெரியா சிரியர் ஐம்பத்து ஒன்மர்
இருந்தினும் பாட்டு புகழ் துதிப்ப
ஒன்பதடி சிற்றின்பம் சிறப்பாய் சிற்பமாய்
பனிரெண்டடி உடைத்து பேரின்பம் பெருக்க.

அகப்பொருள் நிரம்பி நா னூறும்
காதல் துளைக்க நம் முளத்தை
திரை விரிக்கும் ஆட்சிக் கொடை
காதல் நட்பு மகளிர் ஆட்டம்.

காலம் தொட்ட இக்காலம் விட்டா
பழக்கம் சில உரைக்கிறேன் கேளும்
யாமக் காவலர் நல் நாடுகாத்

மேலும்

மிக மிக அருமையான கவிதை பண்டைய புகழ் பாடும் புதுமை தமிழ் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்களைக் காணிக்கையாக்குகின்றேன்! 01-Jan-2016 1:09 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (45)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (47)

இவரை பின்தொடர்பவர்கள் (45)

மேலே