மழையே நீ வேண்டும்

உழவுத் தொழிலுக்கு நீ வேண்டும்!
விளையும் பயிருக்கு நீ வேண்டும்!
பசிக்கும் வயிறுக்கு நீ வேண்டும்!
உலகை காக்க நீ வேண்டும்!
உயிர்கள் வாழ நீ வேண்டும்!
பசுமை பார்க்க நீ வேண்டும்!
பஞ்சம் போக்க நீ வேண்டும்!
இன்பம் நிறைக்க நீ வேண்டும்!
துன்பம் வெறுக்க நீ வேண்டும்!
ஏரி நிறைக்க நீ வேண்டும்!
எண்ணம் பழிக்க நீ வேண்டும்!
ஏக்கம் போக்க நீ வேண்டும்!
எதிரியும் வாழ நீ வேண்டும்!
அன்னம் உண்ண நீ வேண்டும்
அன்பு தழைக்க நீ வேண்டும்!
அகிம்சை நிலைக்க நீ வேண்டும்!
கண்ணீர்த் துடைக்க நீ வேண்டும்!
காலம் பருவம் நீ வேண்டும்!
சொர்க்கம் காட்ட நீ வேண்டும்
சொத்தே என்றும் நீ வேண்டும்!

எழுதியவர் : செல்வா .மு (தமிழ் குமரன் ) (26-Jan-16, 9:29 pm)
பார்வை : 425

மேலே