விக்னேஷ் முருகப்பன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : விக்னேஷ் முருகப்பன் |
இடம் | : சிவகங்கை |
பிறந்த தேதி | : 13-Apr-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Nov-2016 |
பார்த்தவர்கள் | : 60 |
புள்ளி | : 4 |
கணினி பொறியியலில் பட்டம் பெற்றுள்ளேன். தற்போது பெங்களூரில் மென்பொறியாளராக பணிபுரிகிறேன். தமிழில் கவிதை கட்டுரை எழுதுவது தமிழ் மீது கொண்ட ஆர்வத்தால் எழுந்த பிரியம்.
யார் கவிஞன்?
======================================
பேனாவும் காகிதமும் காதல்
கொள்ளுமளவு அன்பை விதைப்பான்;
விண்மீனை காவலுக்கு வைத்து
நீலாவுக்கு வார்த்தை மலர்சூட்டுவான்;
தொலைபேசித் தரும் தாளத்தில்
தொலைந்து போன அன்பையெண்ணி
முத்தான தத்தை வார்த்தைகளை
வார்த்து ஆனந்த கானமிசைப்பான்;
மற்றவரின் மனக் காயத்தை
சுற்றிவரும் வார்த்தைகளால் மருந்தாக்குவான்;
கடுகளவு உள்ள மதையும்
காலம் தந்த ஞானத்தால்
மெருமளவு புகழ் பாடுவான்;
பூவேந்திய பெண்மகளை பாட
வில்லேந்திய கண்களை சாட
வெண்ணிலாவை வம்புக் கிழுத்து
தனித்தமிழ் தரத்தோடு விண்ணப்பமிடுவான்;
சமூகச் சங்கடங்களை ஆழப்பிழிந்து
கவியாக்கித் தந்
யார் கவிஞன்?
======================================
பேனாவும் காகிதமும் காதல்
கொள்ளுமளவு அன்பை விதைப்பான்;
விண்மீனை காவலுக்கு வைத்து
நீலாவுக்கு வார்த்தை மலர்சூட்டுவான்;
தொலைபேசித் தரும் தாளத்தில்
தொலைந்து போன அன்பையெண்ணி
முத்தான தத்தை வார்த்தைகளை
வார்த்து ஆனந்த கானமிசைப்பான்;
மற்றவரின் மனக் காயத்தை
சுற்றிவரும் வார்த்தைகளால் மருந்தாக்குவான்;
கடுகளவு உள்ள மதையும்
காலம் தந்த ஞானத்தால்
மெருமளவு புகழ் பாடுவான்;
பூவேந்திய பெண்மகளை பாட
வில்லேந்திய கண்களை சாட
வெண்ணிலாவை வம்புக் கிழுத்து
தனித்தமிழ் தரத்தோடு விண்ணப்பமிடுவான்;
சமூகச் சங்கடங்களை ஆழப்பிழிந்து
கவியாக்கித் தந்
கவிஞனின் உற்ற நண்பன் காகிதமே,
என்றும் ஏற்ற காதலி எழுதுகோல்களே!
-மு.விக்னேஷ் (மு.வி)
கனலுக்குள் மண் போனால் செங்கலே
மதுவுக்கு மறுபெயர் உன் கண்களே...!
மண்ணுக்குள் உடல் போனால் சாதலே
உயிருக்குள் உயிர் போனால் காதலே...!
உன் கண்களில் எந்தன் முகம் ஓடும்,
உன் இதயத்தில் ஒரு அறை திறந்திருக்கும்,
உன் இரு விழி பார்வை என் மேலே பட்டு,
என் இருண்ட இதயத்தில் ஒளி மிளிரும்..
மல்லிகைப்பூவே உன் மனசுக்குள் நானே குடிபெயர்ந்தேன்,
உன் கருவிழிக்குள் என் அறையின் சாவி இருப்பதை தெரிந்து கொண்டேன்..
நெசமா உன்னில் நான் விழுந்தேன் என் உசுரில் உன்னையும் சேர்த்து கொண்டேன் என் இருதய துடிப்பின் பாதி நீ என புரிந்து கொண்டேன்..
கனவில் வந்து பேசி சென்றாய் நேரில் ஏனோ மெளனம் கொண்டாய் உன் மெளனத்தின் பாசை புரிந்து மெல்ல சிரித்துக் கொண்டேன்,
உன் இதழின் ஓரம் சிரிப்பைக் கண்டு என்
பூத்து குலுங்கும் மல்லிகையே
நீ பிறப்பெடுத்ததே மங்கையரை மகிழ்விக்க தானே
பின் ஏன் என்னவளின்
கூந்தலேர மறுக்கின்றாய்...
ஓ... உன் வாசத்தைவிட
என்னவளின் கூந்தல் வாசம் சிறந்தது என்பதலோ...
காதலி கை விட்டாள் என்று
நொந்த மனத்தோடு
இனி இந்த வாழ்க்கையில்
காதலுக்கோ, காதலிக்கோ
இடம் ஏதும் இல்லை
என்று சபதமெடுத்தேன்
வீடு சேர்ந்தேன்
உதடுகளின் உச்சரிப்பு மூலம்
உண்மையான அன்பு புலப்படுவது
அரிது! ஆனால் கண்கள் பேசும்
கவிதைகளை எள்ளளவும்
குறையின்றி உணரமுடிகிறது,
இமைகளின் பாதுகாப்பில் விழிகள்
நாட்டியம் புரிகின்றன! மகிழ்ச்சி
துக்கம் என இரு தருணத்திலும்
கண்கள் கசிந்துருகி உணர்வுகளை
வெளிக்கொள்கின்றன! இறைவன்
படைப்பில் கண்கள் ஓர் அதிசயம் ...
-மு.விக்னேஷ்(மு.வி)
தங்கத்தின் மேன்மைதனை வர்ணிக்க இயலுமா ?
இயலுமெனில் கவிச்சோலை அமைக்கக் கூடும் !
இதோ எமது சிறிய கவித்தோட்டம் -
பட்டாடை படரவிட்டு பகுத்தறிவு பழக்கம்கொண்டு,
சித்திர சிலைபோல கருநிற அழகுபற்றி,
மங்கையவள் கொண்ட படியதில் பூச்சூடி,
தேன் குழல் குரல் பற்றி,
கற்ற தமிழை நாளும் போற்றி ,
கொண்ட கணவனை நாளும் சுற்றி ,
நடையிசைக்கும் மணிக் கொலுசு உடுத்தி,
கலாச்சாரம் போற்றும் இலட்சிய இலட்சுமியாக,
நாகரிகம் காக்கும் வீர இலட்சுமியாக,
அனைத்தும் ஒருசேர பெற்றவள் தான்-
தனம் தாங்கிய தாரகை தனலட்சுமி.
-மு.வி (மு.விக்னேஷ்)
ஊழலற்ற சமுதாயம் வரவேண்டும் என்றால் நம் அரசியல் அமைப்பு சட்டத்தில், சில என்ன, பல திருத்தங்கள் கொண்டு வரவேண்டும்.
அரசு அதிகாரிகளின் வயதுவரம்பு படிப்பு தகுதி ஆகியவற்றை பார்த்து அவர்களை பதவியில் அமர்த்துவது போல, மத்திய மாநில அரசை ஆளும் அரசியல்வாதிகளுக்கும் இதுபோல தகுதிகளை இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயிக்க வேண்டும், அதற்க்கு மத்திய அரசின் பாராளுமன்ற இரு அவைகளும் ஒப்புதல் தர வேண்டும், அது நடப்பது என்பது கேள்விகுறி தான். குறிப்பிட்டவைகளுக்கு சட்டத்திருத்தம் மசோதா என்று போடாமல், மொத்த அரசியல் சாசனங்களையும் பல நாட்டின் சட்ட வல்லுநர்கள் மற்றும் நம் நாட்டின் மூத்த சட்ட வல்லுநர்கள் முன்னாள் உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் மற்றும் இந்நாள் சட்டத்துறை அமைச்சர்கள் எனவும் மற்றும் அணைத்து மாநிலங்களிலிருந்தும் ஒரு உறுப்பினர் (அவர் கண்டிப்பாக மிக மூத்த மற்றும் அணுபவமிக்க சட்ட நிபுணராக இருத்தல் வேண்டும்) . இந்த மாற்றத்தில் முக்கியமாக அரசியல் கட்சி நடத்துபவரின் அடிப்படை தகுதிகள், பதவி வாரியாக மக்கள் தேர்ந்தெடுக்கும் உறுப்பினருக்கான தகுதி மற்றும் மாநிலத்தின் ஆளுநர்கள் முன்னாள் இந்திய ஆட்சிப்பணி , இந்திய காவல்பணி மற்றும் முன்னாள் நீதிபதிகள் ஆகியோராகத்தான் இருக்கவேண்டும் எனவும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
இது போல சில திருத்தும் கொண்டு வந்தால் தான் தற்போதைய சுழலுக்கேற்றார் போலும் , எதையும் சமாளிக்க கூடிய திறமை மிகுந்த அரசியல் தோழர்கள் கிடைப்பார்கள் .
நன்றி,
மு.வி (மு.விக்னேஷ்)