யார் கவிஞன்

யார் கவிஞன்?
======================================
பேனாவும் காகிதமும் காதல்
கொள்ளுமளவு அன்பை விதைப்பான்;

விண்மீனை காவலுக்கு வைத்து
நீலாவுக்கு வார்த்தை மலர்சூட்டுவான்;

தொலைபேசித் தரும் தாளத்தில்
தொலைந்து போன அன்பையெண்ணி
முத்தான தத்தை வார்த்தைகளை
வார்த்து ஆனந்த கானமிசைப்பான்;

மற்றவரின் மனக் காயத்தை
சுற்றிவரும் வார்த்தைகளால் மருந்தாக்குவான்;

கடுகளவு உள்ள மதையும்
காலம் தந்த ஞானத்தால்
மெருமளவு புகழ் பாடுவான்;

பூவேந்திய பெண்மகளை பாட
வில்லேந்திய கண்களை சாட
வெண்ணிலாவை வம்புக் கிழுத்து
தனித்தமிழ் தரத்தோடு விண்ணப்பமிடுவான்;

சமூகச் சங்கடங்களை ஆழப்பிழிந்து
கவியாக்கித் தந்து சேவகனாவான்;

காற்றாட வனமில்லை என்றாலும்,
புல்நுனியில் நீர்நிற்க மறந்தாலும்,
பகலில் கதிரவன் வரமறுத்தாலும்,
சகராவில் மண்ணின்றி போனாலும்,
சுடுகாடு செல்லும்வரை எங்கும்
தமிழை கொண்டுசேர்ப்பேன் என்பான்;

அவன் கவிகளை பிறர்
ரசிக்க மறந்த வேளையில்
எவருக்கும் தெரியாமல் தானே
கைதட்டிக் கொண்டாடியும் கொள்கிறான்...
===========================================

எழுதியவர் : விக்னேஷ் முருகப்பன் (5-Mar-19, 5:04 pm)
Tanglish : yaar kavingan
பார்வை : 90

மேலே