தங்கதுரை - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தங்கதுரை
இடம்:  பாசார் , ரிஷிவந்தியம்
பிறந்த தேதி :  20-Jul-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Apr-2015
பார்த்தவர்கள்:  880
புள்ளி:  212

என்னைப் பற்றி...

மேகக்கூட்டங்களின் இடையில் நகர்ந்து தெரிந்தும் தெரியாமலும் தோன்றும் வளர்பிறை நிலவாய் வாழ்வின் பிரகாசம்,,,,, முடிவில்லாது முடிவில் தேய்பிறையாய் முடிந்தே விடுகிறது வாழ்வும்,,,,, ! இடைப்பட்ட நாட்களும் ஏனெதற்கு என்றே தெரியாத கோபத்துடனும், மிக அதிக அன்புடனும், சில பல பிரிவுகளுடனும் , வீண் விவாதங்களிலும் கழிந்து ஓடி விடும். கண்களில் தெரியும் பரிதவிப்பும், அன்பின் ஏக்கமும் முழுதாய் புரியாது முற்றாய் பழகிய நட்புள்ளம்! முழுதும் வெளிப்படாமல் இவன் இப்படித்தான், இனி இவ்வளவு தான் இவன், இவனிடம் ஒன்றும் இல்லை என்ற பரிகசிப்பும் , இளக்கார பேச்சுகளும், பாவமான பார்வைகளும், கண்ணீரின் வெளிப்பாடுகளும் , கணநேர சுற்றம் மறத்தலும் , உலகம் மறத்தலும் , யாவும் அற்ற வெட்ட வெளியில் கண்ணீர் விட்டு கதறி அழும் ஓர் அனாதையாய் என் உணர்வுகள்,,,,
கண்ணீரும் மறந்து, கனவுகளும் வெறுத்து, அன்பும் இழந்து ஒன்றுமற்ற ஜடமாய் எலும்பும் சதையும் சேர்ந்த ஓர் உயிராய் நான்,,,,!

என் படைப்புகள்
தங்கதுரை செய்திகள்
தங்கதுரை - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jan-2024 7:09 pm

நான் யாரை
நாடி
சென்றாலும்
முடிவில்
நான்
யாரென்று
புரிய வைத்து
விடுகிறார்கள்
இப்படிக்கு
யாருமில்லா
ஒற்றை மனிதன்!!!!

மேலும்

தங்கதுரை - சங்கீதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-May-2023 3:30 pm

உனக்காக ஊரை
விட்டு உறவுகளை விட்டு

என் கனவுகளை தொலைத்து
இனி என் உலகமே

நீ மட்டுமே என்று
கரம்பிடித்தேன்...

என் வலிகள்
புரியவில்லை....

என் கண்ணீர்
துளிகள் தெரியவில்லை....

கட்டியவளை விட
உன் கள்ள காதலி
உன் இதயத்தில்
குடியிருக்க....

விலகிவிட்டேன்
உன்னிடமிருந்து
மொத்தமாக....

என் காதலோ
அன்போ உன்னை
தொடர போவதில்லை....

உன் எண்ணம்
போலவே வாழ்த்திடு...

வாழ்த்துகிறேன்....

மடிந்து விட்டது
என் காதல்....

என்னுடனே...

மேலும்

உண்மையே.... நன்றி நட்பே 19-Sep-2023 10:40 pm
உன் எண்ணம் போலவே வாழ்ந்திடு,,,! சிறு பிழை போல் வாழ்க்கையை பிழையாக்கி கொள்ளாமல் குழந்தைகள் இருந்தால் அவர்களோடு நேரம் செலவிடுங்கள், ! படைப்பு உன் வாழ்வின் அங்கமாக இருந்தால் வருத்தங்கள் தோழி! 28-Aug-2023 11:33 am
முதல்பூ அளித்த படைப்பில் (public) முதல்பூ மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-May-2022 4:38 pm

***வாழும் தெய்வம் தாய் தந்தை 555 ***


தாய் /தந்தை...


நாம் வசிக்கும்
வீட்டிற்கு வாடகை தருகிறோம்...

செல்லும் பேருந்துக்கு
கட்டணம் செலுத்துகிறோம்...

குடிக்கும் தண்ணீருக்கு
வரி செலுத்துகிறோம்...

உயிர்
கொடுத்த வீட்டிற்கு...

இன்றுவரை எவரும்
செலுத்தியதில்லை கட்டணம்...

கட்டணம் கொடுத்து கைகூப்பும்
கற்சிலை கருவறை அல்ல...

உயிர் சுமக்கும்
தாயின் கருவறை...

தோளில் சுமந்து
உலகம் சுற்றி காற்றிய...

தந்தைக்கு கொடுத்தது
இல்லை கட்டணம்...

தாயை இழந்த குழந்தைக்கு
தெரியும் பாசத்தின் அருமை...

தந்தையை இழந்த குழந்தைக்கு
தெரியும் பாதுகாப்பின் அருமை...

உன் ஆடம்பர
வாகனத்திற்கு இடம் உண்டு

மேலும்

நன்றி சகோ . கிராமத்தில் இருக்கும் பெற்றோர்கள்களை ,பிள்ளைகள் தவிக்க விடுவதில்லை சகோ . நாகரிக நகர வாழ்க்கையில் தினம் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது சகோ... வருகைக்கும் பதிவிற்கும் நன்றி தோழரே ..... 10-Jun-2022 7:53 pm
வந்த வழி மறந்து திரியும் சில மனிதர்களால் மனிதநேயம் மரணிக்கிறது,,! பெற்றோர் சாபத்திற்கு ஆளாகாமல் கருணை கொண்டு உங்கள் குழந்தை பருவத்தை நினைவில் கொள்ளுங்கள், அது போல அவர்களை பார்த்து கொள்ளா விட்டாலும் சிறிதேனும் நன்றியோடு இருங்கள் அது போதும்,,,! சூப்பர் சகோ,, மாறிவரும் சமுதாயத்திற்கு ஏற்ற படைப்பு,,, இன்னும் எழுதுங்கள்,, வாழ்த்துக்கள்,,! 10-Jun-2022 11:45 am
சிந்திக்க மட்டுமல்ல செயல் படுத்த வேண்டும் எல்லோரும் தாய் ,தந்தையரை பார்த்துக்கொள்ள . வருகைக்கும் பதவிருக்கும் நன்றி தோழமையே . 20-May-2022 4:13 pm
மிக மிக அருமை... உண்மை அனைவரும் சிந்திக்க வேண்டும் ❤🌹❤ 19-May-2022 9:10 pm
தங்கதுரை - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Oct-2020 11:06 pm

வாழும் வாழ்க்கை
கனவு தான் போல
சிரித்து பார்த்தாலும்
முடிவில்
உப்பு கரிக்கிறது
கண்ணீர்,,,,,!
--------------------------
பிறப்பு
இறப்பு
நடுவில்
வாழ்க்கை
வாழ்ந்து விடுகிறது
கனவு,,,!
-------------------------
நம்பிக்கை
கண்ணுக்கு தெரியும்
கானல் நீர் போல
முடிவில்
ஏமாற்றம் தான்
மிச்சம்,,,,!
----------------------------
மனிதன் படைத்த
ஒன்று
மனிதனை ஆள்கிறது
பணம்,,,!

-----------------------

மேலும்

தங்கதுரை - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jul-2020 4:25 pm

அன்பு மகனே...

உன் பால்பற்களால் நீ தினம்
கடித்து வைக்கும் தக்காளிபழம்... நம் வீட்டு சமையல் அறையில்...
ரசமாகவும் சாம்பாராகவும் தினம் கொதிக்கிறது... உன் அன்னையும் தாத்தா பாட்டியும்... உன் எச்சில் ருசியை ருசிக்கிறார்கள்... தினம் சுவையான சமையல் என்று... உன் பால்பற்களால் கடிபட முடியாத தந்தை நான்... இனிப்பு டப்பாவில் கூட எனக்கு பிடித்த இனிப்புகளையே... நீயும் தேடி தேடி
ருசிக்கிறாயாம் என் செல்லமே... இரண்டு பற்கள் நான்காகி எட்டாகி நிற்கிறது... உன் பால்பற்களால் உன் தந்தை கன்னத்தை எப்போது பதம்பார்ப்பாய்... எனக்கு
பப்பாளி பிடிப்பதில்லை... நேற்று நீயும் பப்பாளி ருசிக்கவில்லை... தன்னை மறந்து நீ தூங்கும

மேலும்

நிச்சயம் தோழரே . மிக்க நன்றி தோழரே. 08-Aug-2020 4:31 pm
உன் பால்பற்களால் கொறித்து வைக்கும் தக்காளிபழம்... நம் வீட்டு சமையல் அறையில்... ரசமாகவும் சாம்பாராகவும் கொதிக்கிறது தினம் ,,,.. சுவையான சமையல் என்று உந்தன் எச்சில் ருசியை தினம் அமிர்தமென ருசிக்கிறார்கள் ,,, உன் அன்னையும் தாத்தா பாட்டியும் ,,,,! இப்படி மாற்றம் செய்தால் இன்னும் ருசியாகும் தங்கள் மழலை கவிதை ,,,,, அயல்தேசத்தில் வசிக்கும் தகப்பன்களுக்கு உரித்தான பிரிவின் ஏக்கம் வரிகளில் ,,,,, விரைந்து பால்பற்களால் கடிபட வாழ்த்துக்கள் சகோ ,,,! 05-Aug-2020 9:59 am
தங்கதுரை - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jul-2020 4:25 pm

அன்பு மகனே...

உன் பால்பற்களால் நீ தினம்
கடித்து வைக்கும் தக்காளிபழம்... நம் வீட்டு சமையல் அறையில்...
ரசமாகவும் சாம்பாராகவும் தினம் கொதிக்கிறது... உன் அன்னையும் தாத்தா பாட்டியும்... உன் எச்சில் ருசியை ருசிக்கிறார்கள்... தினம் சுவையான சமையல் என்று... உன் பால்பற்களால் கடிபட முடியாத தந்தை நான்... இனிப்பு டப்பாவில் கூட எனக்கு பிடித்த இனிப்புகளையே... நீயும் தேடி தேடி
ருசிக்கிறாயாம் என் செல்லமே... இரண்டு பற்கள் நான்காகி எட்டாகி நிற்கிறது... உன் பால்பற்களால் உன் தந்தை கன்னத்தை எப்போது பதம்பார்ப்பாய்... எனக்கு
பப்பாளி பிடிப்பதில்லை... நேற்று நீயும் பப்பாளி ருசிக்கவில்லை... தன்னை மறந்து நீ தூங்கும

மேலும்

நிச்சயம் தோழரே . மிக்க நன்றி தோழரே. 08-Aug-2020 4:31 pm
உன் பால்பற்களால் கொறித்து வைக்கும் தக்காளிபழம்... நம் வீட்டு சமையல் அறையில்... ரசமாகவும் சாம்பாராகவும் கொதிக்கிறது தினம் ,,,.. சுவையான சமையல் என்று உந்தன் எச்சில் ருசியை தினம் அமிர்தமென ருசிக்கிறார்கள் ,,, உன் அன்னையும் தாத்தா பாட்டியும் ,,,,! இப்படி மாற்றம் செய்தால் இன்னும் ருசியாகும் தங்கள் மழலை கவிதை ,,,,, அயல்தேசத்தில் வசிக்கும் தகப்பன்களுக்கு உரித்தான பிரிவின் ஏக்கம் வரிகளில் ,,,,, விரைந்து பால்பற்களால் கடிபட வாழ்த்துக்கள் சகோ ,,,! 05-Aug-2020 9:59 am
தங்கதுரை - M Chermalatha அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2020 5:28 pm

காதலை ‌‌‌பெற்றோர்கள் ‌‌‌‌‌‌மறுப்பதற்கான காரணம் ‌‌‌‌‌என்ன?

மேலும்

தாங்கள் கூறியது சரியே ஆனால் பெற்றோர்கள் தரும் வாழ்க்கையை பிள்ளைகள் தன் காதலை தியாகம் செய்து மனமாற ஏற்க்கின்றனர் இருப்பினும் ‌ சில நேரங்களில் ‌‌‌‌தம் காதலித்தவரை திருமணம் ‌ செய்து இருந்தால் நன்றாக வாழ்ந்து இருக்காலாம் என்று தன் வலியை மறைத்து வாழ்கின்றனர் பெற்றோர்கள் தன் உரிமையை தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக விடுதல் நல்லது அல்லவா இவ்விடத்தில் பிள்ளைகள் உயர்ந்த இடத்தில் இருக்கின்றனர் தன் பெற்றோர்களுக்காக காதலை தியாகம் செய்து அதை இனியாவது அனைத்து பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும் 26-Jun-2020 6:54 pm
தமது தேர்வே சிறந்தது என்ற எண்ணமும், தமது பிள்ளைகளுக்கு வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை தங்களுடையது என்ற எண்ணமுமே. 26-Jun-2020 12:25 pm
தனக்கான உரிமையை பறித்து விட்டார்களே என்ற முதல் ஈகோ , அதன்பின் வருவது ஜாதி,மதம்,வசதி ,,, 24-Jun-2020 5:11 pm
உண்மை ஆனால் இவற்றின் காரணத்தை வைத்து காதலை பிரிப்பது தவறு அல்லவா அதை ஏன் பெற்றோர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர் ‌ 22-Jun-2020 11:58 am
தங்கதுரை - தங்கதுரை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Mar-2019 1:15 am

வளர்பிறை மட்டும் தான்
எந்தன் நிலவுக்கு,,,,
நாளுக்கு நாள்
வளர்கிறது
காதல் நிலா,,,,,!

கவிதை வரிகள்
தோன்றவில்லை,,,, மாறாக
காதல் வரிகள்
உதிக்கிறது
இதய தோட்டத்தில்,,,

லப் டப் ஓசை
குறைந்து
திருமண ஓசை
கேட்கிறது
இதய கூட்டில்,,,,

சூரியன் உதிக்க
வெள்ளி முளைக்க
மாலை மயங்க
நிலவும் ஒளிர
காலம் கடக்க
நாளும் முடிய
கண்கள் பணிக்கிறது,,

நீ வரும்
வழியெல்லாம்
அடைபடுவதை பார்த்து,,,!

மேலும்

தங்கதுரை - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2019 1:15 am

வளர்பிறை மட்டும் தான்
எந்தன் நிலவுக்கு,,,,
நாளுக்கு நாள்
வளர்கிறது
காதல் நிலா,,,,,!

கவிதை வரிகள்
தோன்றவில்லை,,,, மாறாக
காதல் வரிகள்
உதிக்கிறது
இதய தோட்டத்தில்,,,

லப் டப் ஓசை
குறைந்து
திருமண ஓசை
கேட்கிறது
இதய கூட்டில்,,,,

சூரியன் உதிக்க
வெள்ளி முளைக்க
மாலை மயங்க
நிலவும் ஒளிர
காலம் கடக்க
நாளும் முடிய
கண்கள் பணிக்கிறது,,

நீ வரும்
வழியெல்லாம்
அடைபடுவதை பார்த்து,,,!

மேலும்

தங்கதுரை - தங்கதுரை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Feb-2019 1:55 am

எதிர்பாரா தருணத்தில்
எதிர்பட்டாள்
மங்கையவள்,,,,,,

கண்கள் மோதிய
சிறு இடைவெளியில்
சிறகிழந்த
மனதுக்கு
காதல் சிறகு
முளைத்தது,,,,

நீண்ட கால
தண்டனை காலம்
முடிந்தது என்று
மனம்
கொக்கரித்தது,,,,,

சில பல
சந்திப்பில்
காதல்
உறுதியானது,,,,

காலை நேர
இளம் தென்றலாய்
காலங்கள்
கடந்தோட

செல்ல சண்டைகள்
ஊடல் பொழுதுகள்
சின்ன பிரிவுகள்

காதல் பறவையாய்
சுற்றி திரிந்த
சோலைகள்,,,,,

இழந்த
அனைத்தும்
கிடைத்த
மகிழ்ச்சியில்

இன்புற்று
கிடந்தது
காதல் மனம்,,,,

சிறு இடைவெளியில்
காலம் விளையாட

எழுதப்பட்ட
ஒன்றாய்
என் காதல்
மீண்டும்

மேலும்

தங்கதுரை - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2019 1:55 am

எதிர்பாரா தருணத்தில்
எதிர்பட்டாள்
மங்கையவள்,,,,,,

கண்கள் மோதிய
சிறு இடைவெளியில்
சிறகிழந்த
மனதுக்கு
காதல் சிறகு
முளைத்தது,,,,

நீண்ட கால
தண்டனை காலம்
முடிந்தது என்று
மனம்
கொக்கரித்தது,,,,,

சில பல
சந்திப்பில்
காதல்
உறுதியானது,,,,

காலை நேர
இளம் தென்றலாய்
காலங்கள்
கடந்தோட

செல்ல சண்டைகள்
ஊடல் பொழுதுகள்
சின்ன பிரிவுகள்

காதல் பறவையாய்
சுற்றி திரிந்த
சோலைகள்,,,,,

இழந்த
அனைத்தும்
கிடைத்த
மகிழ்ச்சியில்

இன்புற்று
கிடந்தது
காதல் மனம்,,,,

சிறு இடைவெளியில்
காலம் விளையாட

எழுதப்பட்ட
ஒன்றாய்
என் காதல்
மீண்டும்

மேலும்

தங்கதுரை - தங்கதுரை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Apr-2018 8:11 pm

உன்னோடு
கைகோர்த்து
ஓர்
நீண்ட
நடைபயணம் ,,,,,,

இடறிவிட்டது
நிஜம் ,,,,!

----------------------------
ஓரவிழி
பார்வையால்
என் இதயம்
பறித்து
சென்றவள் ,,,
ஓர வஞ்சனை செய்கிறாள்
அவள் இதயத்தை தராமல் ,,,,

----------------------------

மேலும்

ஊக்கம் தந்து கருத்தளித்தமைக்கு நன்றி தோழி,,! 09-Apr-2018 3:41 pm
ஓரவிழி பார்வையால் என் இதயம் பறித்து சென்றவள் ,,, ஓர வஞ்சனை செய்கிறாள் அவள் இதயத்தை தராமல் ,,,, அருமையான வரிகள் நண்பரே 09-Apr-2018 11:47 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (64)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
குழலி

குழலி

விருதுநகர்

இவர் பின்தொடர்பவர்கள் (66)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட

இவரை பின்தொடர்பவர்கள் (65)

கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.
சங்கீதா

சங்கீதா

ஈரோடு
கவின்

கவின்

ஈரோடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே