வாழும் தெய்வம் தாய் தந்தை 555

***வாழும் தெய்வம் தாய் தந்தை 555 ***
தாய் /தந்தை...
நாம் வசிக்கும்
வீட்டிற்கு வாடகை தருகிறோம்...
செல்லும் பேருந்துக்கு
கட்டணம் செலுத்துகிறோம்...
குடிக்கும் தண்ணீருக்கு
வரி செலுத்துகிறோம்...
உயிர்
கொடுத்த வீட்டிற்கு...
இன்றுவரை எவரும்
செலுத்தியதில்லை கட்டணம்...
கட்டணம் கொடுத்து கைகூப்பும்
கற்சிலை கருவறை அல்ல...
உயிர் சுமக்கும்
தாயின் கருவறை...
தோளில் சுமந்து
உலகம் சுற்றி காற்றிய...
தந்தைக்கு கொடுத்தது
இல்லை கட்டணம்...
தாயை இழந்த குழந்தைக்கு
தெரியும் பாசத்தின் அருமை...
தந்தையை இழந்த குழந்தைக்கு
தெரியும் பாதுகாப்பின் அருமை...
உன் ஆடம்பர
வாகனத்திற்கு இடம் உண்டு...
வீட்டில் பாதுகாப்பாக
வைத்துக்கொள்ள...
உன்னை பாதுகாத்த
பெற்றோர்க்கு இல்லை...
உன் வீட்டின்
ஓரத்தில் சிறு இடம்...
நீ பல
கோடியில் புரண்டாலும்...
உன்னால் தீர்க்க முடியாத
இரண்டு கடனுண்டு...
வயிற்றில் சுமந்த
தாயின் கருவறை கடனும்...
நெஞ்சில் சுமந்த
தந்தையின் மார்பின் கடனும்...
எவராலும் வாழ்நாளில்
தீர்க்க முடியாதது...
நாளை நீ வீட்டைவிட்டு
வெளியேறும் போது உணர்வாய்...
உன் தாய்
தந்தையின் வலிகளை...
தவிர்ப்போம்
முதியோர் இல்லங்களை...
மதிப்போம் வாழும் தெய்வம்
தாய் தந்தையரை.....
***முதல்பூ .பெ.மணி.....***