காரியக்காரன்

எதையும் எப்படியும் பிரித்துவிடும் சாமர்த்தியம்
எனக்கு உண்டு என மார்த்தட்டினான் அவன்.

இவ்வளவு காலம் அதை நானும் நம்பினேன்.
இன்று யாரோ யாரையோ அம்மா, அப்பா

என்று அழைக்கும் போது என் தொண்டைக்குள்
ஒரு வலி ஏற்பட்டு வார்த்தைகள் தடுமாறும்
போது உண்மையை உணர்ந்து கொண்டேன்
அவனால் நினைவுகளை பிரிக்க முடியாது என.

ஏன்? இவ்வளவு காலம் பொய் உரைத்தான்
அந்தக் காரியக்காரன் "மரணம்"..

அவன் சொன்னான்
நான் பொய் உரைக்கவில்லை, உண்மை உணர்த்தினேன்..

எழுதியவர் : தமிழ் அன்பு நேசன் (20-May-22, 4:21 pm)
சேர்த்தது : Sikkandar
பார்வை : 281

மேலே