அம்மா கவிதை

🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮

*அம்மாவுக்கு ஒரு கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮

அம்மாவுக்கு
சாப்பிடாமலேயே!
பசியாறி விடும்.....
நீ சாப்பிட்டியா? என்று
அப்பா கேட்பதிலேயே....!

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

உடல் நலக்குறைவின் போது
மருத்துவரின்
ஊசியை விட...
அம்மாவின்
உபசரிப்பே
விரைவில் குணப்படுத்துகிறது...!!!

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

அம்மா
பரிமாறும் போது மட்டும்
விரைவில்
வயிறு
நிறைந்து விடுகிறது
பாசத்தையும்
சேர்த்து பரிமாறுவதால்....

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

அம்மா
ஒவ்வொரு நாளும்
வருத்தப்படுவாள்
ஆனால்...
ஒரு நாளும்
தன்னை பற்றி
கவலைப்பட மாட்டாள்...!

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈



உப்பில்லாத உணவும்
சுவையாக இருக்கும்
அம்மா
பிசைந்து கொடுத்தால்...!

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈

கருப்பாக இருந்தாலும்
கருப்பு வைரம் என்று
தாலாட்டி....

ஊனமாக இருந்தாலும்
நீ ஞானம் பெறுவாய் என்று
சீராட்டி...

அழகில்லை என்றாலும்
திருஸ்டி பெட்டு வைத்து
பாலூட்டி....

எப்படியிருந்தாலும்
அப்படியே!
ஏற்றுக்கொண்டு நேசிக்க
அம்மா!
உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது.......?

*கவிதை ரசிகன் குமரேசன்*

🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮

எழுதியவர் : கவிதை ரசிகன் (23-May-22, 9:59 pm)
Tanglish : amma kavithai
பார்வை : 141

மேலே